ஊரடங்கிலும் RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை…; ‘காமராசு’ டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்

ஊரடங்கிலும் RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை…; ‘காமராசு’ டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Anbazhagan slams FEFSI president RK Selvamaniமனிதநேய அரசை விமர்சனம் செய்யும் நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி என ‘காமராசு’ பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்.

திரைத்துறை சார்ந்த அரசு நிகழ்வுகளில், செல்வமணியை மாப்பிள்ளை அந்தஸ் சோடு முதல்வர் நேரில் கௌரவிக்கிறார் .. அவரோ நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்து, பாதி நாள் ஆந்திராவில் இருந்து கொண்டு அந்தர் பல்டி அட்டைக் கத்தி அவதூறு பேட்டி கொடுக்கிறார்.

எல்லா துறைகளுக்கும் அரசு கவனிக்கிறது, திரைத்துறைக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார் பிணி வார்த்தைகள் கொண்ட மணி.

அச்சாணி இல்லாத தேர், முச்சாணியும் ஓடாது.

அரிதார துறைக்கு சங்கங்கள் அமைய நிதி வழங்கியவர் அவதார தலைவர் புரட்சித் தலைவர் .

மானியங்கள் கிடைக்க கருணை மனசோடு உதவியவர் புரட்சித் தலைவி.

கொரனா – பிணிக் காலத்திலும், 21,0679 திரைத் துறை நல வாரிய உறுப்பினர்களின் பசிப்பிணி போக்க 2 கோடி 26 – லட்சம் உதவியிருக்கிறார் அச்சாணி முதல்வர்.

149 – படங்களுக்கு தலா – 7 லட்சமாக நலிந்த தயாரிப்ளர்களுக்கு, மழை மேக மனசோடு முதல்வர் உதவியதை வரலாறு குறித்து வைத்திருப்பதை, தகராறு பிடித்த மணி மறந்ததேனோ..

முயல் குழிபறிக்க.. பறவை விதைபோடும்.

பையனூரில், தங்கத் தாரகை பெயரில் அரங்கம் அமைய 5 கோடியை ஒதுக்கீடு செய்து, இரண்டு கட்டங்களாக ஒன்றரை கோடியை உமது கரத்தில் தந்த, கலைத்துறையை தாய்ப் பறவையின் சிறகுகளாய் பாதுகாக்கும், ,எளியவர்களையும் புன்னகையோடு வரவேற்கும் – முதல்வரின் மனிதநேய அரசை விமர்சன வீச்சரிவாளால் தாக்கலாமா..?

இந்த ஊரடங்கு உலகம் தழுவியது.. எங்கும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

கம்பெனிகளுக்கு 50% பேர் வேலை செய்யலாம்.. கலைத்துறைக்கு மட்டும் 60-பேராயென்று, 200 – பேருக்கு அடிபோட்டு – பிடியில்லாமல் கொரனா சோகத்திலும் காமெடியாக கேட்கிறார்.

கடந்த 10 வருடங்களாக சிறு முதலீட்டு படங்களின் படப்பிடிப்புகளில் 60 முதல் 75 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவதை மணி மறந்தது ஏனோ…

ஆம், புதுமுக நடிகர் நடித்தாலே, வேடிக்கை பார்க்க திருவிழா கூட்டம் சுயம்பாக வரும்.

யுனிட்டிலே, 200-பேர் யென்று, செல்வமணி வாதத்திற்கு – ஒப்புக்கு – சப்பாக வைத்துக் கொண்டாலும், படப்பிடிப்பு தளத்தில் இடைவெளியில்லாமல் நசுங்கி, கொரனாவே செத்துவிடும்.

செல்வ மணிக்கு ஆந்திர அரசியலின் தந்திரங்கள் புரியுமளவுக்கு, 10-வருடங்களாக தமிழ் சினிமாவின் எதார்த்தம்
புரியவில்லை.

10 வருடங்களாக சொத்தையும்-தாலியையும் விற்று 2-கோடிக்கு படமெடுக்கும் தயாரிப்பாளார்கள் யாரும், 75 – பேருக்கு மேல் டெக்னீசியன்களை வேலைக்கு அமர்த்துவதில்லை.

50-கோடிகளை தனக்கு மட்டுமே சம்பளமாக பெற்று, 150-கோடிகளுக்கு புரடெக்ஷன் செலவுகளை இழுத்து விடும், தயாரிப்பாளர்கள் தெருக்கோடிக்கு செல்வதை ஓசைப்படாமல் ரசிக்கும், பிரபல ஹீரோக்களுக்காக 200 – பேர் பயன்பட கொரனா பதட்ட காலத்திலும் – முட்டுக் கொடுத்து மூச்சு வாங்கப் பேசுகிறார் செல்வத்தை நேசிக்கும், செல்வமணி.

வியர்வை பட்ட இடத்தில், கரண்டி பட்டால் சோற்றிலும் கொரனா விசாயின்றி பயணிக்காதா…

கொரனா சங்கிலியை தனிமையால் அறுத்து – உயிர் வாழ்தலே இக்கண தேவை.

உயிர் பிழைத்தால் .. கலைஞர்கள் சுயேட்சைகளாக – உழைத்து பிழைப்பார்கள்.

தமிழகத்திற்கான அர்ப்பணிப்புகளில் – கரைப் படியாமல் விழித்திருந்து உழைக்கும் அரசை சீண்டாமல், வாங்கிய நிதிகளுக்கான கணக்கை தபால்கார்டு மாதிரி திரையில்லாமல் சங்க -உறுப்பினர்களுக்கு காட்டுவதே செல்வமணி வகையறாக்களுக்கு வெள்ளை அறிக்கை அழகு.

Director Anbazhagan slams FEFSI president RK Selvamani

ஹாலிவுட்டில் கலக்கும் 18 வயசு தமிழ்ப்பெண் மைத்ரேயி ராமகிருஷ்ணன்

ஹாலிவுட்டில் கலக்கும் 18 வயசு தமிழ்ப்பெண் மைத்ரேயி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maitreyi Ramakrishnan A Tamil girl became popular in Hollywood நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்
பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan).

அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார்.

ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling) என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்கள்.இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார்.

பொதுவாக ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள்தான் உள்ளேயே நுழைய முடியும். ஆனால் அப்படி எந்த ஒரு பயிற்சியும் பெறாத இவர், நடிப்புக்கான பல்வேறுபட்ட சோதனைகளைக் கடந்து ,வடிகட்டுதல்களில் மீண்டெழுந்து இந்தத் தொடரில் நடிக்கத் தேர்வாகி இருக்கிறார்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருந்த இளம் நடிகைக்கான தேர்வுக்கு இவரது தோழிதான் விண்ணப்பித்திருந்தார். அவர் வற்புறுத்தலால் மைத்ரேயியும் விளையாட்டாகத்தான் விண்ணப்பித்திருந்தார். இதற்காக 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்து இருந்திருக்கிறார்கள்.

நம்பிக்கையற்றிருந்த மைத்ரேயிக்கு எழுத்துப் பிரதி அனுப்பி அதில் ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து வசனத்தைப் பேசி நடித்து வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள். விளையாட்டாகத்தான் அனுப்பினார். மீண்டும் இன்னொரு சமயத்தில் மற்றொரு பிரதி அனுப்பி அடுத்த கட்ட சோதனை.

அதற்கும் வீடியோ அனுப்பி வைத்தார். இப்படி ஆறு பிரதிகளுக்கும் நடித்து அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் நடித்து முடித்து அனுப்பியபோது அது பற்றிய கனவு எதுவும் இல்லாமல்தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரம் பேர் 2000 பேர் நீக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேர்வானது , பிறகுதான் இவருக்கு தெரியுமாம்.

நேரடித் தேர்விலும் கலந்து கொண்டார். பிறகு இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.எப்படியோ அவர்கள் செலவில் அமெரிக்கா சென்று வந்ததுதான் லாபம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் அழைப்பு வந்திருக்கிறது இவரால் நம்பவே முடியவில்லை. நடிக்கத் தேர்வாகி விட்டார். நடித்தும் விட்டார்.

அந்தத் தொடரில் நடித்த அனுபவம் பற்றிக் கூறும்போது “அந்தப் படப்பிடிப்பை ஒரு பள்ளியின் வகுப்பறையில் இருப்பது போல்தான் நான் உணர்ந்தேன். பெரிய வித்தியாசமாக எனக்குப் படவில்லை .முதல்நாளே அடுத்தநாள் நடிக்கவுள்ள காட்சிக்கான பிரதிகளைக் கொடுத்துவிடுவார்கள். நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் .படப்பிடிப்பு நேரம் எப்போதும் நீட்டிக்கப்படாது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் சரியாக முடிந்துவிடும். நான் இரவெல்லாம் வசனங்களை மனப்பாடம் செய்தேன். கேமரா முன் இருக்கும் போது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு காட்சி சரியாக வர வேண்டும் என்றால் அவர்கள் சமரசம் ஆக மாட்டார்கள். அப்படி ஒரு காட்சியை அவர்கள் 25 தடவை கூட எடுத்தனர். திருப்பித் திருப்பி எடுத்திருக்கிறார்கள் .வற்புறுத்தி நம்மை வேலை வாங்க மாட்டார்கள். ஆனால் இயல்பாக அந்தக் காட்சி வரவேண்டுமென்று பொறுமை காப்பார்கள்.”என்கிறார்.

ஹாலிவுட் வாய்ப்பு , ஆங்கிலம் பேசவேண்டிய நடிகை என்ற வகையில் உங்களது பெயரை மாற்றி விடுவீர்களா? என்று கேட்ட போது ,

“நான் கனடிய தமிழ்ப் பெண் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள் நான்.அந்த அடையாளத்தை நான் இழக்க மாட்டேன் அதனால் என் பெயரை மாற்ற மாட்டேன். நான் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் ஆங்கிலம் பேசி நடிப்பதாக இருந்தாலும்கூட என் பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் ”
என்கிறார் தீர்மானமாக

தொடர் நடிப்பு அனுபவம் பற்றி மேலும் பேசும் போது..
“அந்தத் தொடரில் நடித்தபோது கூட இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ் தம்பதிகளின் மகளாகத் தான் நடித்தேன். இப்படி நடிப்பதில் எனக்கு வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதே நேரம் நான் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதைவிட இதை ஒரு சிறு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும்தான் உணர்ந்தேன்.

உச்சரிப்பு, நடை உடை ,பாவனையில் சிறு மாற்றம் அவ்வளவுதான். அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண் ஒருத்தி ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் அடையாளச் சிக்கலுக்கு ஆளாவது , தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது என்று கதை போகிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயார் ,நண்பர்கள் என்று பிரச்சினைகள். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் என்ன செய்கிறாள் என்று செல்கிறது கதை.” என்கிறார்.

” நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் உன்னதமான மொழி. . “என்று கூறும் மைத்ரேயி ராமகிருஷ்ணன், “தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் வாழும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் நான் பெருமைப்படுகிறேன். என்னாலான எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்..” என்கிறார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணனைப் பின்தொடரும் ரசிகர்களாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை என பல்வேறு நாடுகளிலும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறார்கள்.

மரத்தின் கிளைகள் விண்ணை நோக்கிச் சென்றாலும் அதன் வேர்கள் இருப்பது மண்ணுக்குள் தான் என்பது போல உலக ரசிகர்களை கவர்ந்த போதிலும் மைத்ரேயி, தான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறார்.அவரை வாழ்த்துவோம்.

Maitreyi Ramakrishnan A Tamil girl became popular in Hollywood

BREAKING எம்எஸ் தோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

BREAKING எம்எஸ் தோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhoni biopic hero Sushant Singh Rajput committed suicideஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ரிலீசானது.

தோனி கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

மேலும் அமீர் கானின் “பி.கே” படத்திலும் அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவருக்கு 34 வயதாகிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரின் இந்தத் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

எம்எஸ் தோனி படத்தில் வாழ்க்கையில் உண்மையாக உழைத்தால் உயரத்தில் அடையலாம் என அருமையாக நடித்திருப்பார். ஆனால் இன்று அவருக்கு என்ன பிரச்சினையோ..? தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

Dhoni biopic hero Sushant Singh Rajput committed suicide

மீம்ஸ்களில் அவமானப்படுத்தப்பட்ட அப்துல் கலாம்..; நடிகர் விவேக் அட்வைஸ்

மீம்ஸ்களில் அவமானப்படுத்தப்பட்ட அப்துல் கலாம்..; நடிகர் விவேக் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek abdul kalamகொரோனா ஊரடங்கு காலத்தில் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.

அதிலும் அண்மையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்ட உடன் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் இணையத்தில் பரவியது.

ஒரு சிலர் மீம்ஸ்களில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் படத்தை வைத்து உருவாக்கி வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டரில்..

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேண்டுகோள்…

கேலி செய்ய பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அய்யாவின் படங்களை மீம்களில் பயன்படுத்த வேண்டாம்.

நாம் அனைவரும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவரை மதிக்கவேண்டும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி” என்று பதிவு செய்துள்ளார்.

தற்போது விவேக் நடிப்பில் இந்தியன் 2, அரண்மனை 3 போன்ற படங்கள் உருவாகி வருகிறது.. கொரோனா பிரச்னைக்கு பிறகு இதன் சூட்டிங் தொடங்கும்.

ஜிவி. பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ் & அதீதி ராவ் ‘லவ்’

ஜிவி. பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ் & அதீதி ராவ் ‘லவ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush aditi raoவசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “ஜெயில்” சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்!

அங்காடி தெரு, வெயில், அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது புதிய கண்ணோட்டத்தில்,
ஜி .வி பிரகாஷ் குமார், அபர்நதி, நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.

தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி வெளியாகிறது.

அங்காடி தெரு, வெயில் படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை, நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ், அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள். கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார்.

தனுஷ், ஜி.வி.பிரகாஷ் அசுரன் படத்திற்கு பிறகு இசையில் இணைந்துள்ளார். இந்த பாடலை ஜூன் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஸ்ரீதரன் மரியதாசன்

ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டவர்.

தயாரிப்பு மேற்பார்வை பி.டி. செல்வகுமார், கேமரா கணேஷ் சந்திரா, பாடல்கள் கபிலன், இசை ஜி.வி.பிரகாஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் வசந்தபாலன்.

விஜய்- சூர்யா மோகன் லால்-மம்முட்டி ஆகியோரின் பாடிகார்ட் தாஸ் மரணம்

விஜய்- சூர்யா மோகன் லால்-மம்முட்டி ஆகியோரின் பாடிகார்ட் தாஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

body guard dasபொது நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்து கொண்டால் அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்பவர்கள் BODY GUARDS பாடிகாட்ஸ் தான்.

இந்த பாதுகாவலர்களில் ஒருவர் தாஸ் சேட்டன்.

கேரளாவை சேர்ந்த இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, மோகன் லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நம்பிக்கையானவர். அவர்களின் பாதுகாப்புக்கு இவர் மிகவும் முக்கியமானவர்

அண்மையில் மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தாஸ்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாஸ் சேட்டனின் மரண செய்தியை அறிந்த பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

More Articles
Follows