ஆஸ்கர் விருதை விட தலைவர் ரஜினியை இயக்கியதே பெருமை : கார்த்திக் சுப்பராஜ்

ஆஸ்கர் விருதை விட தலைவர் ரஜினியை இயக்கியதே பெருமை : கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directing Thalaivar Rajini is bigger than Oscar awards says Karthik Subbarajரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

சின்ன வயதில் இருந்தே எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் தலைவர்.

எங்க அப்பா பெரிய ரஜினி ரசிகர். அவரை பார்த்து தான் நானும் பெரிய ரசிகனானேன்.

தலைவருடன் பணியாற்றியது ஒரு கனவு போல இருக்கிறது. எனக்கு சினிமா மேல் ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம்.

நான் படம் எடுத்தால், அதை தலைவர் பார்ப்பாரா, பாராட்டுவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்திய சினிமாவிலேயே மனதார பாராட்டுபவர் ரஜினி சார் தான்.

பாராட்டனும்னு அவசியமே இருக்காது. ஆனாலும் பாராட்டுவார்.

2.0 படத்தில் சொல்வது போது பாசவிட்டிங் ஆரா தலைவர் தான். 2.0 படத்தில் முனிவருக்கு தான் அதிகமான பாசிட்டிங் ஆரா இருக்குனு சொல்லிருப்பாங்க, ஆனால் அதைவிட தலைவருக்கு நிறைய பாசிட்டிவ் ஆரா இருக்குது

பீட்சா படம் ரிலீசான போது ரஜினி சார் வீட்டில் இருந்து போன் வந்த போது நம்பவில்லை. அவர் பேசிய பிறகு தான் நம்பினேன். சூப்பரா பண்ணியதாக சொன்னார். நாம் படம் பண்ணியதற்கான பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன்.

அவருடன் படம் பண்ணுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஜிகர்தண்டா படம் பண்ணிய போது கருணாகரன் தலைவருடன் லிங்கா படத்தில் நடித்து வந்தார். அவர் மூலமாக நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பிளான் பண்ணோம். பார்த்துவிட்டோம்.

ஜிகர்தண்டாவை பார்த்த போது என் பரட்டை கேரக்டரை பார்த்த மாதிரி இருந்துச்சி சொன்னார். நான் என்ன எழுதினாலும், உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்றேன். அப்போ என்கிட்டையே சொல்லியிருக்கலாமே என்றார்.

அன்னிக்கு அவரைப் பார்த்த சந்தோஷத்துல போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டேன், ஆட்டோகிராஃப் வாங்க மறந்துட்டேன். அதனால், எப்படியாவது அவர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கணும்னு மறுநாள் போனேன்.

அன்னிக்கு அவருக்கு பிரேக் என்பதால், என்னை வரச்சொல்லி பேசினார். அவருடன் உட்கார்ந்து பேசியது என் வாழ்க்கையின் மறக்க முடியாது தருணம்.

‘ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க’னு சொன்னார். அவர் என்கிட்ட ஸ்கிரிட்ப் இருக்கானு கேட்டதையே இரண்டு நாட்கள் கழித்துதான் உணர்ந்தேன்.

2014-ம் ஆண்டு அவர் என்கிட்ட கேட்டார். அந்த மிகப்பெரிய கனவு இன்று நனவாகியுள்ளது.

பாபியும், நானும் பெரிய தலைவர் ரசிகர்கள். பேட்ட படத்தில் பாபியோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துவிட்டார்.

ரஜினி சாரை வைச்சு நான் ஒரு படம் பண்ணுவேன்னும், அதில் நான் வில்லனாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி சொன்னார். அது நிறைவேறிவிட்டது.

ஷூட்டிங்கின்போது அவர் எப்படி நடக்கிறார், எப்படி புத்தகம் படிக்கிறார் என்று பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன். என்னோட உதவி இயக்குநர் பாலா தான் அடிக்கடி அவர்கிட்டப் பேசிக்கிட்டுருப்பான்.

என்னைவிட அவன் அதிகமா பேசுறானேனு அவனைப் பார்க்கவே பொறாமையா இருக்கும். என்னைத் தவிர வேற யார் பேசுனாலும் எனக்குக் கடுப்பா இருக்கும். என் மனைவி அவர்கூட பேசுனபோது கூட அவங்ககிட்ட சண்டை போட்டேன்.

அவரை வச்சு ஒரு படத்தையே இயக்கி முடிச்சிட்டேன். ஆனாலும், இப்போ அவர் பக்கத்துல உட்காரும்போது கூட பதட்டமா இருக்கு.

நான் கதை சொன்னபோது, ‘நாம பண்ணலாம்’னு சொல்லிட்டார். இடையில், ‘அரசியலுக்கு வரப்போறேன்’னு சொல்லிட்டார் (இதை அவர் சொல்லியதும் அரங்கத்தில் வெகுநேரம் ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் ஒலித்தது).

அந்த அரசியல் அறிவிப்பு சந்தோஷமா இருந்தாலும், நம்ம படம் கிடையாதானு கொஞ்சம் சுயநலமாகவும் இருந்தது. ஏன்னா, நான் ஆஸ்கர் விருதே வாங்கினாக்கூட என் வாழ்க்கை முழுமையடையாது. தலைவர் படத்தால் மட்டும்தான் முழுமையடையும்.

கலாநிதி மாறன் சாரும் தலைவரோட ரசிகர்தான். ‘தலைவர் படம் மாதிரி இந்த படத்தைப் பண்ணணும்’னு தான் என்கிட்ட சொன்னார்.” என்றார்.

Directing Thalaivar Rajini is bigger than Oscar awards says Karthik Subbaraj

அனிருத்தான் அடுத்த ஏஆர். ரஹ்மான்.; ரஜினியிடம் சொன்ன தனுஷ்

அனிருத்தான் அடுத்த ஏஆர். ரஹ்மான்.; ரஜினியிடம் சொன்ன தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh will be next AR Rahman said by Dhanush to Rajinikanthபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது அனிருத்தின் இசை மற்றும் அவரது வளர்ச்சி குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

பேட்ட பட இசையமைப்பாளர் யார்? என்று கார்த்திக் சுப்பராஜிடம் கேட்டேன். அவர் அனிருத் என்றார்.

ரொம்ப சந்தோஷப்பட்டேன். சின்ன வயசுல இருந்தே அனிருத்தை பார்க்கிறேன். அவரின் பெற்றோர்கள் அவரை நன்றாக வளர்த்துள்ளனர்.

மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து, அதை சரியாக வளர்த்துள்ளனர்.

3 படத்தில் அவர் இசையமைக்கும்போது அனிருத்தின் இசை எப்படி என்று தனுஷிடம் கேட்டேன். அப்போதே அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று அப்போதே தனுஷ் சொன்னார்.” என்று ரஜினி பேசினார்.

Anirudh will be next AR Rahman said by Dhanush to Rajinikanth

சிம்ரனுடன் நடிக்கும்போது கூச்சம்.; த்ரிஷா அப்படியே இருக்கிறார் : ரஜினி

சிம்ரனுடன் நடிக்கும்போது கூச்சம்.; த்ரிஷா அப்படியே இருக்கிறார் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajini talks about Simran and Trishaதமிழ் சினிமாவில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களுடன் சிம்ரன் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துவிட்டனர்.

இவர்கள் முன்னணி நடிகையாக உள்ள போதும் ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் இருந்தனர்.

தற்போது பேட்ட படத்தில் ப்ளாஷ்பேக்கில் த்ரிஷாவும் நிகழ்கால கதையில் சிம்ரனும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் மற்றும் த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் பற்றி பேசினார் ரஜினி.

அவர் பேசியதாவது…

சிம்ரனுடன் டூயட் பாடும்போது எனக்கு கூச்சமாக இருந்தது. சிறந்த நடிகை அவர்.

பிளாஷ்பேக்கில் சின்ன கேரக்டர்தான். அதில் த்ரிஷா நடிப்பாரா? என்று சந்தேகம் இருந்தது. அவரது ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது.

அவர் அவர் என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். 16 வருடங்களாக த்ரிஷா அப்படி இருக்கிறார்.

அவர் யோகா செய்கிறார். அதான் அழகாக இருக்கிறார். யோகா செய்தால் மனதும் உடலும் அழகா இருக்கும். எல்லாரும் யோகா செய்ய வேண்டும்.” என்று பேசினார் ரஜினி.

Super Star Rajini talks about Simran and Trisha

தாடி மீசை வச்ச குழந்தை சசிகுமார்.; பேட்ட இசை விழாவில் ரஜினி பேச்சு

தாடி மீசை வச்ச குழந்தை சசிகுமார்.; பேட்ட இசை விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumar is like kid says Rajini at Petta Audio launch eventசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் ரஜினியுடன் சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா,சசிகுமார்,சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட சசிகுமார் பேசியதாவது…

“எல்லாப் படமும் சீக்கிரம் முடியனும்னு நினைப்போம். ஆனா பேட்ட பட சூட்டிங் சீக்கிரமா முடிந்ததே என்ற கவலை இருந்தது.

ரஜினி சார் டான்ஸ் வராதுன்னு சொல்வார் ஆனால் அது பொய். அதிகாலை 3 மணிக்கு பணியாற்ற சொன்னாலும் அதை செய்து முடிப்பார்.

ஒரு ரஜினி ரசிகனாக இருந்து கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளது.

ரஜினி சார் தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் . ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என எல்லோருக்கு ஆசை இருக்கும்.

எனக்கும் ஆசை இருக்கிறது” என்றார். அதன்பின்னர் தளபதி படத்தில் உள்ள நட்புன்னா என்னானு தெரியுமா? என்ற டயலாக்கை பேசி காண்பித்தார்.

அதன் பின்னர் இறுதியாக ரஜினி பேசும்போது…

சசிகுமாரின் கேரக்டர் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை சிறப்பாக இருக்கும்படியான ஒரு அருமையாக கேரக்டர்.
அவர் ஒரு தாடி மீசை வைச்சக் குழந்தை. அவர் படத்தை தயாரிக்காம நடித்தால் நன்றாக இருக்கும்” என்று வாழ்த்தி பேசினார் ரஜினி.

Sasikumar is like kid says Rajini at Petta Audio launch event

மகா நடிகன்.. சிறந்த மனிதர்.; விஜய்சேதுபதிக்கு ரஜினி பாராட்டு

மகா நடிகன்.. சிறந்த மனிதர்.; விஜய்சேதுபதிக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi is Maga Nadigan says Rajini at Petta audio launchகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…

இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின் கார்த்திக் சுப்பராஜிடம் பட வில்லன் யாருன்னு? கேட்டேன் விஜய் சேதுபதின்னு சொன்னார்.

எனக்குச் சந்தேகம். எப்படினு கேட்டேன். நான் பார்த்துக்கிறேன் சார்னு கார்த்தி சொன்னார்.

அடுத்த நாள் போன் பன்னி விஜய் சேதுபதி ஓ.கே சொல்லிட்டாருன்னு சொன்னார். விஜய் சேதுபதியோடு படம் பார்த்திருக்கிறேன்.

அவர் சாதாரண நடிகன் இல்லை. அவர் ஒரு மகா நடிகன். நடிகர் என்பதை விட ஒரு நல்ல மனிதர், பொறுமையான மனிதர். நாம் சிந்திப்பதை விட ஒரு எதிர்மறையாக சிந்திக்கிறார்.

அவரிடம் நிறைய புத்தகங்கள் படிப்பிங்களா? சினிமா பாப்பிங்களா? எனக் கேட்டேன். ஆனால் படிக்க மாட்டேன். பார்க்க மாட்டேன். என்றார்.

அவருடைய பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது.“ என்று பேசினார் ரஜினி.

Vijay sethupathi is Maga Nadigan says Rajini at Petta audio launch

நல திட்டங்களுக்காக மோடி-ரஜினி-கமலை சந்திக்க நினைத்தேன்; அவர்கள் விரும்பல.. : சுரேஷ் மேனன்

நல திட்டங்களுக்காக மோடி-ரஜினி-கமலை சந்திக்க நினைத்தேன்; அவர்கள் விரும்பல.. : சுரேஷ் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizesபுதிய முகம் திரைப்படம் மூலம் நடிகராக தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுரேஷ் மேனன்.

சினிமாவில் பல துறைகளில் பணியாற்றிய இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் ஆவார்.

இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நம் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினார்.

அவர் பேசியதாவது…

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். சினிமாவில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன்.

சினிமா ஒருபக்கம் இருந்தாலும், சமூகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்ய பல ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அதில் ஒரு சிலவற்றை அரசு செய்துள்ளது.

சென்னை ராஜ்பவன் கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆலோசனை தந்தேன். தற்போது அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதுபோல நிறைய இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். இதனால் என்னை அவ்வப்போது தலைமை செயலகத்தில் பார்க்கலாம்.

சில நேரங்களில் இது உனக்கு தேவையில்லாத வேலை என்பார்கள். எனக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை. ஆனால் ஒரு மன திருப்திக்காக இதனை செய்து வருகிறேன்.

ஒரு முறை டெல்லி சென்றேன். சில நல திட்டங்களுக்கு ஆலோசனை சொல்ல பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.

அதுபோல் ரஜினி, கமலை சந்திக்கவும் நேரம் கேட்டேன். ஆனால் அவர்களுக்கு என்னை சந்திக்க விருப்பமில்லை.
நான் ஒரு மலையாளி என்பதால் தமிழ்நாட்டில் என்னால் அரசியலில் சாதிக்க முடியாது.

அதேபோல் நான் இங்கு வந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் அங்கும் (கேரளா) என்னால் ஒண்ணும் சாதிக்க முடியாது.

எனவே, தற்போது மை கர்மா (my karma) என்ற மொபைல் ஆப் மூலம் வினாவிடை போட்டி ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது நண்பர்கள் ஆதரவுடன் ரூ. 20 லட்சம் செலவில் இதை ஆரம்பித்துள்ளேன்.

இந்தியாவை பற்றி தான் 90% கேள்விகள் கேட்கப்படும். குடும்பத்துடன் அமர்ந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

தினமும் மாலை 7 மணி, 8 மணி, 9 மணி என 3 முறை இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயழியை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகை உண்டு”, என சுரேஷ் மேனன் கூறினார்.

Actor Suresh Menon launched My Karma mobile app You can win Cash prizes

More Articles
Follows