ரஜினி-கமல்-விஜய்க்கு முன்பே அரசியலில் தினேஷ்; வைரலாகும் படங்கள்

Dinesh starrer Annanukku Jai movie poster goes viralஅட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அண்ணனுக்கு ஜே’ என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் மஹிமா நம்பியார், ராதாரவி, RJ பாலாஜி, மயில்சாமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இது இன்றைய அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

அரோல் கரோலி இசையமைக்க விஷ்ணுரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்பட்டு வரும் நிலையில் இதன் போஸ்டர்கள் இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் 30 நாட்களில் முதல் அமைச்சர் ஆவது எப்படி? என்ற புத்தகத்தை தினேஷ் படிப்பது போல் படங்கள் இருந்தது.

இதனை ரஜினி, கமல், விஜய் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் அதே புத்தகத்தை படிப்பது போல் டிசைன் செய்து இணையங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

அண்மைகாலமாக ரஜினி, கமல், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வர ஆயுத்தமாகி வருவதாக கூறப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

Dinesh starrer Annanukku Jai movie poster goes viral

Overall Rating : Not available

Related News

"அண்ணனுக்கு ஜே " திரைப்படம் வெற்றிமாறனின்…
...Read More
ராஜ்குமார் இயக்கத்தில் அரசியல்வாதியாக தினேஷ் நடித்துள்ள…
...Read More
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின்…
...Read More

Latest Post