கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன்..? வைரலாகும் புகைப்படம்

கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன்..? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dindigul Sarathy part 2 updates and Lakshmi menon photo goes viralஅரசியல்வாதி, நடிகர் பாடகர் என பன்முகம் கொண்டவர் கருணாஸ்.

நந்தா படத்தில் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் படிபடியாக உயர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வந்தார்.

அம்பாசமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.

இதில் திண்டுக்கல் சாரதி என்ற படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது அது பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது-

அதாவது திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதில் கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது-

ஆனால் அது கொம்பன் பட சூட்டிங் போது எடுக்கப்பட்ட போட்டோ என தகவல் கிடைத்துள்ளது-

தற்போது லட்சுமி மேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Dindigul Sarathy part 2 updates and Lakshmi menon photo goes viral

BREAKING முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி..; வழிகாட்டுதல் குழுவில் 11 பேர்

BREAKING முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி..; வழிகாட்டுதல் குழுவில் 11 பேர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ops epsஅடுத்தாண்டு 2021ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

அக்கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு குழுக்களாக மோதல் நீடித்து வந்தது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்தனர்.
இதனால் தமிழக அரசியல் களம் சூடானது-

இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்து வந்தனர்.

அதன்படி காலை 9 மணியளவில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் அடுத்தடுத்து தலைமை அலுவலகம் வரத்தொடங்கினர்.

பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் கட்சி தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார்.

இதன்பின்னர் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.

மேலும் வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயர்கள்..
• திண்டுக்கல் சீனிவாசன்
• தங்கமணி
• எஸ்.பி வேலுமணி
• ஜெயக்குமார்
• சிவிசண்முகம்
• காமராஜ்
• ஜேசிடி பிரபாகர் – முன்னாள் எம்.எல்.ஏ
• மனோஜ் பாண்டியன்
• பா மோகன் – முன்னாள் அமைச்சர்
• ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
• கி மாணிக்கம் – சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ

AIADMK chief minister candidate Edappadi Palanisamy says O Panner Selvam

சிம்பு நடத்தும் ‘மாநாடு’… மாஸ் அப்டேட் கொடுத்த சுரேஷ் காமாட்சி

சிம்பு நடத்தும் ‘மாநாடு’… மாஸ் அப்டேட் கொடுத்த சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh kamatchi simbuசிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்ஏசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானோ ஊரடங்கால் (முன்பே) படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது சினிமா சூட்டிங் நடத்த அரசு அனுமதியளித்தும் இப்பட சூட்டிங் தொடங்கப்படமாமல் இருந்தது.

எனவே சிம்பு ரசிகர்கள் மாநாடு பட ‘அப்டேட்’ தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…

தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து… #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம்.

என சில நிமிடங்களுக்கு முன்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Simbu starring Maanadu shoot starts from november 1st week

ராம் சரண்-ஜூனியர் NTR இணையும் ‘RRR’; செம அப்டேட் கொடுத்த ராஜமௌலி

ராம் சரண்-ஜூனியர் NTR இணையும் ‘RRR’; செம அப்டேட் கொடுத்த ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR movieமகதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை கொடுத்து உலக சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் டைரக்டர் ராஜமௌலி.

இவர் தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் RRR என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் இரத்தம் ரனம் ரௌத்திரம் என்ற பெயரில் இந்த படத்தை அடுத்தாண்டு 2021ல் வெளியிடவுள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் சூட்டிங் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

SS Rajamouli shares new video from shooting spot, promise an update on October 22

19 வயது மாணவியை மணந்த 38 வயது அதிமுக எம்எல்ஏ பிரபு..; பெண் தந்தை போலீசில் புகார்

19 வயது மாணவியை மணந்த 38 வயது அதிமுக எம்எல்ஏ பிரபு..; பெண் தந்தை போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

admk mla prabhu marriageகடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு, தேர்வு செய்யப்பட்டார் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவான பிரபு.

பட்டதாரி இளைஞரான இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தார்.

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டக் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, அந்த அணியில் இருந்து விலகி டிடிவி தினகரன் அணியில் இணைந்தார்.

இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் அதிமுகவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

38 வயதான அதிமுக எம்எல்ஏ பிரபுவும் தியாகதுருகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்காமல் இருந்தனர்.

இதனையடுத்து சௌந்தர்யாவை பிரபு தனது இல்லத்தில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

இதனால் 38 வயது ஆன அவர் தங்களது 19-வயது மகளை கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர்.

மேலும் தான் ஒரு எம்எல்ஏ என்பதால் புகார் அளித்தாலும் தன்னை ஏதும் செய்ய முடியாது என்று பிரபு மிரட்டுவதாக சாமிநாதன் புகார் தெரிவிக்கிறார்.

பிரபு மீது புகார் அளித்தால் சபாநாயகர் உத்தரவு இல்லாமல் வழக்கு பதிவு செய்ய முடியாது என மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

தாங்கள் சாதி, மதம் கூட பார்க்கவில்லை என்றும், வயது வித்தியாசம் கவலை அளிப்பதாகவும் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.

மேலும் பெண்ணின் தந்தை சாமிநாதன் தீக்குளிக்க முயற்சித்தார்.

இந்த நிலையில் மணப்பெண் சௌந்தர்யா தன் விருப்பத்தின் பேரிலேயே திருமணம் நடைப்பெற்றது. தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

ADMK MLA prabhu love marriage creates controversy

ஓடிடி ரிலீஸ் நிரந்தரமானால் திரைத்துறை பாதிப்பு..; தியேட்டர்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் கருத்து

ஓடிடி ரிலீஸ் நிரந்தரமானால் திரைத்துறை பாதிப்பு..; தியேட்டர்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuசென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது..

திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறோம் என்றார்.

கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது இந்த நேரத்தில், 3 மணி நேரம் ஒரே அரங்கில் இருக்க வேண்டிய நிலை உள்ளது இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்குகள் திறப்பது குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

OTT யில் படம் வெளியாவது குறித்து பேசிய அவர்…

OTT என்பது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது. நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும் என்றார்.

திரையரங்கு சென்று படம் பார்த்தால் தான் மக்களுக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும் என்றார்.

மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்த அரசு அவர்களுக்கு உதவும்.

தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்…

செயற்குழுவில் அக்டோபர் 7 தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் கூறியிருக்கிறார்கள் அதன்படி அறிவிப்பார்கள் எங்களுக்கும் உங்களைப் போன்று முடிவு என்னவென்று நாளை அறிவித்த பின்பு தான் தெரியவரும்” என தெரிவித்தார்.

Kadambur Raju about movies releasing in OTT

More Articles
Follows