திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் கூண்டோடு ராஜினாமா

Dindigul Rajini Makkal Mandram 146 Members decided to resignகடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார் ரஜினி.

அதனையடுத்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

பின்னர் மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த தம்புராஜ் அவர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளனர்.

ரஜினி மன்ற மாவட்ட பொறுப்பாளர்கள் 8 பேர், ஒன்றிய பொறுப்பாளர்கள் 109 பேரும் நகரப் பொறுப்பாளர்கள் 22 பேர், மாநகர பொறுப்பாளர்கள் 7 பேரும் ராஜினாமா செய்ய முடிவு.

ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 146 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மா.செ தம்புராஜை தன்னிச்சையாக நீக்கியதுடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த் ரசிகரே இல்லை என்று புகார் அளித்துள்ளனர்.

ராஜினாமா செய்யவுள்ள 146 பேரும் விரைவில் ரஜினியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளனர்.

Dindigul Rajini Makkal Mandram 146 Members decided to resign

Overall Rating : Not available

Latest Post