ஹார்ட் ஆப்ரேஷன் செய்துவிட்டு அஜித்துக்காக காத்திருக்கும் ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற மாட்டோமா? என பல கலைஞர்கள் சினிமாவில் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தலயின தீவிர ரசிகரான ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) அஜித்துக்காக ஒரு கதையை சில வருடங்களாக எழுதி அதை மெருகேற்றி உள்ளாராம்.

அண்மையில் ஹார்ட் ஆப்பேரஷன் செய்துக் கொண்ட இவர், ஒரு வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நான் இறப்பதற்குள் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கியே தீருவேன் என தெரிவித்துள்ளார்.
நிச்சயம் இப்படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகையை தனுஷ் காதலிப்பது உண்மையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கி தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் வெளியாகாத நிலையில், இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் கதை இதுதான் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் தனுஷ், கல்லூரி மாணவராகவும், ஒரு நடிகையாக மேகா ஆகாஷ்ம் நடிக்கிறார்கள்.

ஒரு கல்லூரி விழாவுக்கு மேகா ஆகாஷ் வரும்போது, அவரைப் பார்த்த தனுஷ் அவரை காதலிக்க தொடங்குகிறாராம்.

இது நிஜ கதையா? அல்லது வதந்தியா? என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.

உலகளவில் பாகுபலி-தெறி-வேதாளத்தை முந்திய கபாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உருவாகியுள்ளதையடுத்து, உலக தரத்திற்கு ஏற்ப இங்கே படங்கள் தயாராகி வருகிறது.

மேலும் உலகில் பல நாடுகளிலும் இந்திய மக்கள் வசித்து வருவதால், இந்திய படங்களின் மவுசும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஓர் இணையத்தளம் உலகளவில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 25 தென்னிந்திய படங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.

(இதில் ஹிந்தி படங்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

கபாலி- ரூ 87.5 கோடி
பாகுபலி- ரூ 73 கோடி
கைதி 150- ரூ 50.45 கோடி
ஜனதா கரேஜ்- ரூ 41 கோடி
சர்தார் கப்பர் சிங்- ரூ 41 கோடி
கட்டமராயுடு- ரூ 40 கோடி
லிங்கா- ரூ 39 கோடி
ஐ- ரூ 36 கோடி
ஸ்ரீமந்துடு- ரூ 33 கோடி
எந்திரன்- ரூ 30 கோடி
தெறி- ரூ 28.46 கோடி
ப்ரம்மோற்சவம்- ரூ 27 கோடி
கத்தி- ரூ 26 கோடி
பைரவா- ரூ 26 கோடி
Nannaku Prematho- ரூ 24.5 கோடி
ஆகடு- ரூ 24 கோடி
Sarrainodu Around – ரூ 24 கோடி
Bruce Lee The Fighter- ரூ 23.5 கோடி
Attarintiki Daaredi- ரூ 23 கோடி
துருவா- ரூ 23 கோடி
வேதாளம்- ரூ 22 கோடி
டெம்பர்- ரூ 22 கோடி
S/o Satyamurthy- ரூ 20 கோடி
புலி- ரூ19.5 கோடி
Baadshah- ரூ 19 கோடி

ரஜினியை தடுத்தவர்களை திட்டி தீர்த்த ராஜபக்சே மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலம் என்றாலே பிராப்ளம்தான்… இது எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? ரஜினிக்கு 100% பொருந்தும்.

ரஜினி பேசினாலும் பிரச்சினை. பேசாவிட்டாலும் பிரச்சினை.

ரஜினி சென்றாலும் பிரச்சினை. செல்லாவிட்டாலும் பிரச்சினை.

அப்படித்தான் லைக்கா ஏற்பாடு செய்த வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருந்தார்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளால் இப்பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
இந்நிலையில், இதுகுறித்து ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கூறியுள்ளதாவது…

‘இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் உதவ மாட்டார்கள்.

தற்போது உதவ வந்த ரஜினியையும் அவர்கள் தடுத்துவிட்டனர்.

அவர்களின் சுயலாபத்திற்காக இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை வேறு திசையில் திருப்பிவிட்டனர்.

தமிழகத்தில் தேர்தல்வரும் போதும் மட்டும்தான் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் நினைவில் வருவார்கள்.

தமிழக அரசியல்வாதிகளின் சுயரூபம் இதுதான்’ என கூறியுள்ளார்.

ரஜினி பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வேண்டி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை வடநாட்டு மீடியாக்கள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து, ஆதரவு அளித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் இவர்களை சந்திக்க வந்ததால், விவசாயிகளை கண்டுக்கொள்ளாத மீடியாக்கள், நடிகர்கள் மட்டும் இப்போது ஏன் கண்டு கொள்கிறது? என சாடியிருந்தார்.

அதுபோல் மதிமுக தலைவர் வைகோ அவர்களும் டெல்லி சென்று விவசாயிகளுக்கு ஆதரவளித்தார்.

அப்போது ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்தும், இலங்கை மீனவர் பிரச்சினை குறித்தும் ஒரு ரிப்போர்ட்டர் கேள்வி கேட்டார்.

இதனால் ஆவேசமான வைகோ கூறும்போது, விவசாயம், இந்த போராட்டம் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள், வேறு எதையும் கேள்வி கேட்காதீர்கள்.” என்றார்.

ரஜினியால் லைக்கா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் நடத்தவிருந்த இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருந்தார்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் ரஜினி, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து இலங்கைக்கு இம்முறை செல்லவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட லைகா அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும், ராஜபக்சேவின் மகன் நாமல், ரஜினி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தமிழக அரசியல்வாதிகள் அவரை வரவிடாமல் சூழ்ச்சி செய்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது ரஜினி இலங்கை பயணம் ரத்து தொடர்பாக போடப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Is Rajini is reason for Police protection to Chennai Lyca office

More Articles
Follows