அரசியலில் ஜெயிப்பேன்; ரஜினிக்கு சவால் விடுகிறாரா கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா துறையிலும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டாலும் 40 ஆண்டுகளாக ரஜினியும் கமலும் நட்புடன் பழகி வருகின்றனர்.

ஆனால் தற்போது இருவரும் அரசியல் களத்தில் இறங்க உள்ளதால் இவர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முரசொலி பவளவிழாவில் கமல் பேசும்போது… தற்காப்பை விட தன்மானமே முக்கியம் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.

இதனையடுத்து சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் அரசியலில் ஜெயிக்க சினிமா புகழ் மட்டும் போதாது எனவும், அந்த ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கலாம் எனவும் ரஜினி பேசினார்.

இதனையடுத்து பல்வேறு சர்ச்சைகள் அரசியல் உலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என பொருள் படும் கமல் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள், பிறகு சிரிப்பார்கள், பிறகு சண்டைக்கு வருவார்கள் கடைசியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் – காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு இப்போது தேவைப்படும் வலிமையைத் தருகின்றன. என குறிப்பிட்டுள்ளார்.

இது மறைமுகமாக ரஜினிக்கு கமல் தெரிவிக்கும் பதிலாக அமைந்துள்ளது என விவரமறிந்தவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Did Kamals new tweet to Challenge to Rajini

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

First they ignore you then they laugh at you then they fight you and then you win- Gandhi ji His words impart strength we need now

தமிழக அரசு வரி எதிரொலி; இன்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா திரையரங்குகளுக்கு மத்திய அரசின் 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டது.

பின்னர் 100 ரூபாய் டிக்கெட்க்கு குறைந்த வரியும் 100க்கு மேல் உள்ள டிக்கெட்டுக்கு அதிக வரியும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மொழி படங்களுக்கு 10%, மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி தமிழக அரசு விதித்துள்ளது.

இந்த இரண்டு வரிவிதிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அண்மையில் அறிவித்தார்.

மேலும் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர தமிழ் திரையுலகினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றுமுதல் சென்னையில் ஐநாக்ஸ், பிவிஆர் மால்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் காட்சிகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரபலமான எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் இந்த ஸ்டிரைக்கில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

Multiplex theaters will be closed from 3rd October 2017

அப்பா கார்த்திக்-மகன் கவுதம் ஆகியோரை இணைத்த தனஞ்ஜெயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் திரு.

இவர் தற்போது கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இவர்களுடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மேலும் பல பிரபல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பாதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தயாரிப்பு தனஞ்செயன்.

Karthik and Gautham Karthik to join hands with Producer Dhananjayan

பிக்பாஸில் ஆரவ் வெற்றி; சிநேகன் தோல்வி… டிவி உடைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள்.

இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் இருவருக்குமே ஆரவ்வைத் தாண்டி ஆதரவு இருந்தது.

இதனால் சமூக வலைதளத்தில் ஆரவ் வெற்றியடைந்ததிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு பாடலாசிரியர் சிநேகன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”எனக்கு வாக்களித்த ஆதரவாளர்கள், உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள், பிக் பாஸ் ரசிகர்கள், கமல் சார் ரசிகர்கள், என்னுடைய தோழமை உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றி.

உங்கள் ஆதரவால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் என் முழு வாழ்க்கையை, வேறொரு களத்தில் என்னை இயக்கிக் கொண்டிருந்தது. அதற்கு சாகும் வரை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

ஆரவ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு மேடையிலும் வாழ்த்து சொன்னேன், அதில் எந்தவித வருத்தமும் எனக்கில்லை.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது எனக்கொரு சிறு அச்சம் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நிறைய அழுதுகொண்டே இருக்கிறேன்.

எதற்கெடுத்தாலும் எமோஷன் ஆகுறேன் என்றார்கள். நான் கிராமத்துக்காரன். பாசத்தை கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். எங்களுக்கு வார்த்தைகள் இல்லை உணர்வுகள் மட்டும்.

ஆனால், இன்றைக்கு எனது ஆதரவாளர்கள், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிரொலியாக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போய் நிற்கிறேன். அனைவரது வருத்தங்கள், ஆதங்கங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

சில இடத்தில் தொலைக்காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறார்கள், பஸ் மறியல் செய்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

இவ்வளவு அன்பு வைக்க நான் என்ன பண்ணினேன். அங்கு நானாக வாழ்ந்திருக்கிறேன்.

அன்பு தேவைப்படுகிற இடத்தில் எல்லாம், சிநேகன் கட்டிப்பிடிப்பதற்காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னீர்கள்.

ஒன்று தெரியுமா, ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

அப்போது தான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே. அவர்கள் அந்த ஆதரவு என்னிடமிருக்கிறது என்று நம்பினார்கள்.

அன்பின் வெளிப்பாடாக தான் அரவணைத்தேன். தாயும், குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அங்கு நடந்தது.

நிறைய ரணங்களை அனுபவித்தவன். இந்த தோல்வியைக் கண்டெல்லாம் துவண்டு போக மாட்டேன்.

சிநேகனைக் காணவில்லை என்று செய்திகள் வெளியானது. அதற்கான பதிவு தான் இது. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.

உங்கள் அனைவரது ஆதரவு இருக்கும் வரை ஊர்க்குருவி மாதிரி மேலே பறந்து கொண்டே இருப்பேன். தயவு செய்து வருத்தப்படாதீர்கள், வேறு எந்த விபரீதமான முடிவுக்கும் போக வேண்டாம்.

கூடிய விரைவில் அனைவரையும் சந்திப்பேன். காரணம், நான் மக்கள் கவிஞன்.

கிராமத்துக்காரன். எங்கு நட்டாலும் முளைப்பேன், அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்கள் ஆதரவால் இன்னும் பல மடங்கு அந்த நம்பிக்கை பெருகியிருக்கிறது. நன்றி” என்று சிநேகன் தெரிவித்துள்ளார்.

Lyricist Snehan reaction to his failure in Bigg Boss Tamil show

ரஜினி-கமல்-விஜய்க்கு முன்பே அரசியலில் தினேஷ்; வைரலாகும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அண்ணனுக்கு ஜே’ என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் மஹிமா நம்பியார், ராதாரவி, RJ பாலாஜி, மயில்சாமி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இது இன்றைய அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

அரோல் கரோலி இசையமைக்க விஷ்ணுரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என கூறப்பட்டு வரும் நிலையில் இதன் போஸ்டர்கள் இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் 30 நாட்களில் முதல் அமைச்சர் ஆவது எப்படி? என்ற புத்தகத்தை தினேஷ் படிப்பது போல் படங்கள் இருந்தது.

இதனை ரஜினி, கமல், விஜய் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் அதே புத்தகத்தை படிப்பது போல் டிசைன் செய்து இணையங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

அண்மைகாலமாக ரஜினி, கமல், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வர ஆயுத்தமாகி வருவதாக கூறப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

Dinesh starrer Annanukku Jai movie poster goes viral

காந்திஜி சென்டிமெண்ட்; ரஜினி மேஜிக்… விஜய்சேதுபதியின் ஜுங்கா அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’.

இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.

இப்போது மீண்டும் இதே தேதியில் (அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி.

இப்படத்திற்கான 30 நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2) பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது.

‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக அறிமுகமான சாயிஷா சாய்கல்‘ஜுங்கா’ படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது ‘ஜுங்கா’திரைப்படம்.

இப்படத்தை விஜய் சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது.

படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ள அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கிறார்கள். இவர்களின் கூட்டணியோடு விஜய் சேதுபதியின் ‘கலகல’ காமெடி எபிசோடுகளைப் பார்க்க இப்போது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Vijay Sethupathis Junga movie started on Gandhi Jayanthi

 

More Articles
Follows