தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் என்பதையும் தாண்டி பைக் ரேசர், போட்டோகிராபர், சமையல் கலைஞர், பைலட், கார் ரேஸர், துப்பாக்கி சுடுதல் வீரர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அஜித்.
இவர் தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பைக்கில் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.
இந்தியாவிலும் சில வெளிநாடுகளிலும் சமீபத்தில் சுற்று பயணம் செய்தார். அந்த வீடியோக்கள் வைரலானது.
இந்த நிலையில் தென்காசியில் நடிகர் அஜித் பைக்கில் பயணிப்பதாக ஒரு வீடியோ வைரலானது.
இதனை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்தனர். ஆனால் அந்த பைக்கில் பயணம் செய்ததது அஜித் அல்ல என் தெரிய வந்துள்ள நிலையில் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Did Actor Ajith travelled in bike at Tenkasi roads