தர்மதுரை வசூல்: விஜய்சேதுபதிக்கு கிடைத்த செம ஓப்பனிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனுராமசாமி இயக்கத்திதில் விஜய்சேதுபதியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் ‘தர்மதுரை’.

நேற்று வெளியான இப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்று முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ.2.7 கோடியை வசூல் செய்துள்ளதாம்.

சென்னையில் மட்டும் ரூ.35 லட்சமும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செங்கல்பட்டு ஏரியாவில் ரூ.70.5 லட்சமும் கிடைத்துள்ளதாம்.

விஜய்சேதுபதியின் படங்களில் இதுதான் பெஸ்ட் ஓப்பனிங் வசூல் என்று கூறப்படுகிறது.

ஆச்சரியப்படுத்தும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ விநியோகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால், படத்தின் விநியோகமும் களை கட்டி வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதாவது கிட்டத்தட்ட ரூ 36 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளதாம்.

இது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இதன் வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.

அதற்கு ஏற்றார் போல் ரெமோ புரோமோஷன்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.

அரவிந்த்சாமியுடன் இணையும் மீனா & ‘தெறி’ நைனிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவை தன் ஒரே படத்தில் பெற்றவர் நைனிகா.

இவர் சூப்பர் ஸ்டார்களின் நாயகி மீனாவின் மகள் என்பது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில், மீனாவும் அவரது மகள் நைனிகாவும் ஒரு நிகழ்ச்சிக்காக சின்னத்திரைக்கு வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் அரவிந்த்சாமியுடன் இவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

விரைவில் இந்நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாகிறது.

‘ஜீனியர் கட்டப்பா’வாக மாறிய ‘காஷ்மோரா’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, விவேக் ஆகியோர் இணைந்துள்ள படம் காஷ்மோரா.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானதை பார்த்தோம்.

இந்த லுக் வெளியானது முதல் கார்த்தியின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கார்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“கொம்பன் பட சமயத்தில் காஷ்மோரா படம் குறித்த பேச்சுவார்த்தைகள் எழுந்துவிட்டன.

இதற்கான நிறைய தோற்றங்களை அலசினோம். கடைசியாக இந்த மொட்டை மற்றும் தாடியை தேர்வு செய்தோம்.

அப்போது பாகுபலி ரிலீஸ் ஆனது. அதில் உள்ள சத்யராஜின் கட்டப்பா கேரக்டரை பார்த்த உடன் ஆச்சரியம் அடைந்தோம்.

எங்கள் குடும்ப நண்பர் சத்யராஜின் சாரின் தோற்றத்தில் நான் இருக்கிறேன். அவருக்கு நரைத்த தாடி. எனக்கு வெள்ளை தாடி.

இதனால் என்னை ஜீனியர் கட்டப்பா என்றும் அழைக்கிறார்கள்” என்றார்.

சூப்பர் ஸ்டாரையே தன் ரசிகராக்கிய ‘பேட்மிண்டன்’ சிந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் நமது இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து என்ற பெண்மணி வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதல் சாமானிய மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில்… வாழ்த்துக்கள் சிந்து. நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து ரீட்வீட் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கும் படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்கவிருகிறார் சிவா.

இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிய உள்ள கலைஞர்களை இப்படத்தின் தயாரிப்பாளர் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.

இமான் இசையைமைக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். கலையை முத்துராஜ் கவனிக்க, சண்டைப் பயிற்சியை அனல் அரசு கவனிக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

இதில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.

More Articles
Follows