இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரியாக திட்டமிடுதலும் அதை தெளிவாக நடைமுறைப்படுத்துவதுமே குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் காரியத்தையும் முடிக்கும் மந்திரம் ஆகும். சினிமா படப்பிடிப்பும் அப்படியே. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் தனுஷு ராசி நேயர்களே படக்குழு இந்த திட்டமிடுதலுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அவர்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து, தற்போது படப்பின்னணி வேலைகளை ஆரம்பித்துவிட்டது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது….

நாங்கள் திட்டமிட்டபடியே, படக்குழுவின் அயராத உழைப்பில் சூட்டிங்கை முடிதிருக்கிறோம். புதுமுக இயக்குநரான எனக்கு கோகுலம் கோபலன் சார் மாதிரியான தயாரிப்பாளர் கிடைத்தது வரமென்பேன். படத்தின் சூட்டிங்கிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் முன்னதாகவே தயார் செய்து தந்து, கேட்ட அனைத்தையும் கொடுத்து சூட்டிங் மிக விரைவாக, தடையற நடந்ததற்கு முழுமுதல் காரணம் அவர் தான். நாங்கள் இப்போது படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளோம். படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் முன்னதாகவே துவக்கிவிட்டோம். இப்படத்தில் முற்றிலும் புதிதான ஹரீஷ் கல்யாணை அவரது ரசிகர்கள் காணலாம். முரட்டுதனம் மிகுந்த மற்றும் காதல் பொங்கும் இளைஞனாக வந்த அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, இப்படத்தில் முழுக்க காமெடியில் இறங்கி கலக்கியிருக்கிறார். குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான இக்காமெடிப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளுக் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். “தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால ஏற்படும் பிரச்சனையும் அதன் தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

லவ் பிரேக் அப்.; நெக்ஸ்ட் லவ்வுக்கு வெயிட்டிங்… ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் பிரபலமான நடிகை லட்சுமி மஞ்சு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

நடிகை பாடகி என பன்முக திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் காதல் மற்றும் திருமணம் பற்றி கூறியிருக்கிறார்.

அடிதல்…

நான் இதுவரை ஒருவரை தான் காதலித்துள்ளேன். ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை.

ஆனால் காதலில் இருந்து நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.

எனவே மீண்டும் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன். “ என கூறியிருக்கிறார்.

என்னப்பா நடக்குது… சிம்பு மீது புகார் அளிக்கவில்லை என ஞானவேல் ராஜா மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர், பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.

சிம்பு என்பதை விட இவர் வம்பு நாயகன் என்றே அழைக்கிறார்கள்.

கால்ஷிட் சொதப்பல், காதல் முறிவு என பல சர்ச்சைகள் இவர் மீது உள்ளன.

இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிம்பு நடிக்கும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என கூறப்பட்டது.

ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மப்டி ரீமேக் சூட்டிங் விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கும்கி நாயகிக்கு கல்யாணம்..; மாப்பிள்ளை யாரோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் பல படங்களில் நடித்து வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

சில காலம் நடிப்பை விட்டு படிக்க போவதாக அறிவித்தார்.

தற்போது அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து இருக்கிறார்களாம்.

எனவே மாப்பிள்ளை யார்? என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.

புட்பால் போட்டி.. பிகில் புரோமோசன் பட்டைய கிளப்புது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

எனவே படத்தை புரோமோட் செய்யும் வகையில் கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

SJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா.
இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார்

இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், இன்று
நவம்பர் 9ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இது பற்றி SJ சூர்யா…

இன்று எனது அடுத்த பயணம் நண்பர், தொழிலதிபர் சுனில் ரா கேமரா ஆன் செய்ய இனிதே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில் , பிரியா பவானி சங்கர் இணைய , யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கில் 2020 வரும் காதலர் தினத்தன்று உங்களை சந்திக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது SJ சூர்யா ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows