தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வெங்கி அட்லூரி என்பவர் இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் சித்தாரா எண்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும், ரிலீஸுக்குத் தள்ளப்படும் என்றும் தெரிகிறது.
தனுஷ் எழுதிய ‘வாத்தி’ படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நாடோடி மன்னன் ஆக மாறி வரும் ‘வாத்தி’, 2nd சிங்கிள் ஜனவரி 17-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Dhanush’s ‘Vaathi’ to get a new release date
