தேசிய விருதை அடுத்து ‘அசுரன்’ தனுஷூக்கு ‘பிரிக்ஸ்’ விருது

தேசிய விருதை அடுத்து ‘அசுரன்’ தனுஷூக்கு ‘பிரிக்ஸ்’ விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பை ‘பிரிக்ஸ்’ என அழைத்து வருகிறோம்.

கடந்த 5 வருடங்களாக அதாவது 2016ம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் சார்பில் பிரிக்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்பட விழாவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டும் விருதுகள் வழங்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் கோவாவில் 52வது சர்வதேசத் திரைப்பட விழாவுடன் 6வது பிரிக்ஸ் திரைப்பட விழாவும் இணைந்து நடத்தப்பட்டது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்கு தனுஷுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே, அசுரன் படத்திற்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார் தனுஷ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த விருது பெற்றது குறித்து “ஒரு முழுமையான மரியாதை” என தனுஷ் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush wins Best Actor for Asuran at BRICS Film Festival

சிம்பு-ஹன்சிகா காதலை மீண்டும் சேர்த்து வைக்கும் நந்தா பெரியசாமி

சிம்பு-ஹன்சிகா காதலை மீண்டும் சேர்த்து வைக்கும் நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் ரிலீசான ‘மாநாடு’ படம் மீண்டும் சிம்புவின் மார்கெட்டை மீண்டும் உயர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு அதாவது விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவிற்கு மாஸான ஓபனிங்கை இந்த படம் கொடுத்துள்ளது.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுதுது பத்துதல என்ற படத்தில் கௌதம் கார்த்திக்குடன் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்துவிட்டு நந்தா பெரியசாமி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிம்பு.

தற்போது கௌதம், சிவாத்மிகா, சேரன், வெண்பா உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தை இயக்கியுள்ளார் நந்தா பெரியசாமி.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் புதிய படத்தில் அவரை மீண்டும் ஹன்சிகாவுக்கு ஜோடியாக்கவிருக்கிறாராம் நந்தா.

ஏற்கெனவே வாலு, மஹா உள்ளிட்ட படங்களில் சிம்பு ஹன்சிகா இணைந்து நடித்துள்ளனர். (மஹா படம் இன்னும் ரிலீசாகவில்லை)

இவர்கள் வாலு படத்தில் நடித்தபோது நிஜவாழ்க்கையில் காதல் கொண்டு பின்னர் பிரிந்துவிட்டனர்.

தற்போது மூன்றாவது முறையாக ரீல் லைஃப்பில் இணையவுள்ளது இந்த காதல் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu – Hansika joins for a movie again?

சூட்டிங்குக்கே 100வது நாள்.? ‘பீஸ்ட்’ படத்தில் ‘டாக்டர்’ பட வெற்றியின் காரணகர்த்தாக்கள்

சூட்டிங்குக்கே 100வது நாள்.? ‘பீஸ்ட்’ படத்தில் ‘டாக்டர்’ பட வெற்றியின் காரணகர்த்தாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர்’ என இரு தரமான வெற்றிப் பங்களைத் தொடர்ந்து நெல்சன் 3வதாக இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’.

(டாக்டர் ரிலீசுக்கு முன்பே விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்)

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க வில்லனாக செல்வராகவன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங் 100வது நாளாக நடைபெற்று வருவதை முன்னிட்டு படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் விஜய் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். இந்த புகைப்படத்தில் டாக்டர் பட வெற்றிக்கு காரணமான ரெடின் கிங்ஸ்லீ, வைபவ் அண்ணன் சுனில்ரெட்டி, பிஜான் சுரோராவ் உள்ளிட்ட சில கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இப்பட நாயகி “கடைசி கட்ட நடிப்புக்காக எங்கள் இசைக்குழு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இது பொழுதுபோக்கான ஒன்றாக இருக்கும்” என இதுகுறித்து தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

அடுத்தாண்டு 2022 கோடை விடுமுறை பீஸ்ட் ரிலீசாகும் என தெரிகிறது.

Pooja Hegde shares a fun working still with Thalapathy Vijay from the sets of #Beast

BREAKING நடிகரும் நடன இயக்குனருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

BREAKING நடிகரும் நடன இயக்குனருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்.

இந்த நிலையில் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தனர்.

இதில் சிவசங்கர் மாஸ்டர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

அவரது இளைய மகன் அஜய்கிருஷ்னா உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

சிவசங்கர் மாஸ்டர் நுரையீரலில் 75% வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு அவரது இளைய மகன் அஜய் உதவி கேட்டு இருந்தார் என்ற செய்திளை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து தனுஷ், பாலிவுட் நடிகர் சோனு சூட், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பண உதவி & உடனடியாக மருத்துவ உதவி அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

சிவசங்கர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் நடித்த படங்கள் இவை..:
சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலை, பாப்கார்ன், ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி, தில்லுமுல்லு, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, அதிபர், எங்கிட்ட மோதாதே, கஜினிகாந்த், நாடோடி கனவு மற்றும் பல..

Noted Choreographer Actor Shiva Shankar Master is passed away due to Covid 19

‘மாநாடு’ மாஸ் ஹிட்; ரெண்டே நாளில் 14 கோடி வசூல்; கலெக்சன் குறைய இதான் காரணம்.!

‘மாநாடு’ மாஸ் ஹிட்; ரெண்டே நாளில் 14 கோடி வசூல்; கலெக்சன் குறைய இதான் காரணம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படம் நேற்றுமுன் தினம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசானது.

யுவன் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் சிம்பு உடன் எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏசந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மகத், கருணாகரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

‘டைம் லூப்’ கதையை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக விறுவிறுப்பாக படமாக்கி இருந்தார் வெங்கட்பிரபு.

இதுவரை படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

முதல் நாளிலேயே ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல் 14 கோடி ரூபாய் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25 அன்று அதிகாலை காட்சிகள் ரத்தானது. மேலும் தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

இவை இரண்டு இல்லையென்றால் இன்னும் அதிக வசூலை மாநாடு படம் கொடுத்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

இப்படத்தின் வெற்றியை சுரேஷ் காமாட்சி தன் பட நாயகன் சிம்பு உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

தற்போது இப்பட தெலுங்கு, ஹிந்தி ரீமேக் உரிமைகளை வாங்க பலர் போட்டிபோட தொடங்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Simbus Maanaadu movie collects Rs 14c in 2 days

யோகி பாபுவின் ‘பன்னிகுட்டி’-யை வாங்கினார் பிரபல தயாரிப்பாளர்

யோகி பாபுவின் ‘பன்னிகுட்டி’-யை வாங்கினார் பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் யோகிபாபு நடிப்பில் உருவான படம் “பன்னிகுட்டி”.

இந்நிலையில், ‘பன்னிகுட்டி’ படத்தின் தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை 11:11 புரொடக்சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது…

எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

“பன்னிக்குட்டி” திரைப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார். மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Theatrical rights of Panni Kutty in TN Karnataka Kerala bagged by 11:11 Productions

More Articles
Follows