‘சுட்டெரிக்கும் சூரியன்; சூட்டிங்..’ வடசென்னை பற்றி தனுஷ் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து பாடல் எழுதி, பாடி, இயக்கி நடித்துள்ள படம் பவர் பாண்டி.

இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் வடசென்னை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வடசென்னை படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது.

சுட்டெரிக்கும் சூரியன், கடல், பெரிய மனிதர்கள் அப்புறம் வெற்றிமாறனுக்கே உரிய சூட்டிங் தளங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ், சமந்தா, அமலாபால், விஜய் சேதுபதி உள்ளிட்டவர் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Dhanush‏Verified account @dhanushkraja
With power paandi’s release 2 days to go,resuming vada chennai shoot 4m today.Blazing sun,sea,great people nd typical Vetrimaaran locations

Dhanush tweeted Vada Chennai Shooting again started

திட்டம் போட்டு திருடுற கூட்டத்துக்கு உதவும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கயல் சந்திரன் மற்றும் பிச்சைக்காரன் புகழ் சட்னா டைட்டஸ் இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

ஐடி துறையில் வேலை செய்யும் சந்திரனின் சித்தப்பாவாக பார்த்திபன் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் சாய் சுதர்சன் இப்படத்தை இயக்க, ரகு இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவிருக்கிறாரம்.

குற்றம் 23 படத்தை வெளியிட்ட அக்ராஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thittam Poattu Thirudura Kootam teaser launch by Sivakarthikeyan on 13th April 2017

நேற்று ரஜினி; இன்று கமல்; தொடரும் பாஜக ஆதரவு சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் உலகில் அண்மைகாலமாகவே கமல் பற்றிய பேச்சு அதிகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் கமல்.

அப்போது கமலை வரவேற்று பொன்னாடை போர்த்தியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அவரை வரவேற்ற புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால், பாஜ கட்சிக்கு கமல் ஆதரவளிக்க போகிறாரா? என்ற பேச்சுக்கள் அரசியல் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியை சந்தித்த போதும், இது போன்றே ஆதரவு பற்றி பேசப்பட்டது.

Kamalhaasan Meets Central Minister Pon Radhakrishnan

 

மீண்டும் அஜித் ரசிகர்களை மிரட்ட வரும் ‘வேதாளம்’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நடிகர்களின் படங்களில் நடித்தால் போதும், ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகி விடலாம்.

அப்படிதான் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார் வேதாளம் பட வில்லன் கபீர் துகான் சிங்.

மீண்டும் அஜித்துடன் நடிக்க காத்திருப்பதாக அவ்வப்போது கூறிவருகிறார்.

இந்நிலையில், அஜித் ரசிகர்கள் இணைந்து உருவாக்கி வரும் ‘தல போல வருமா’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் கபீர்சிங்.

கேஎம் தேஜாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அஜித் ரசிகரான சுராஜ் இயக்கவுள்ளார். குணசீலன் ஒளிப்பதிவு செய்கிறார்

Vedhalam villain Kabir singh again with Ajith fans

‘பவர் பாண்டி’யை பார்த்த சூப்பர் ஸ்டார் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திறமை  எந்த துறையில் எங்கிருந்தாலும் இருந்தாலும் அதை பாராட்டி வருபவர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இவரது மருமகனும் நடிகருமான தனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள பவர் பாண்டி (தற்போது ப. பாண்டி) படத்தை அண்மையில் பார்த்தாராம்.

அதில் வயதானவர்களின் வாழ்க்கை முறைகளை யதார்த்தமாக கொடுத்திருந்தாராம் தனுஷ்.

நமக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருந்தாலும், நம்மை நாம் பார்த்துக் கொள்ள சேமிப்பு அவசியம் என்பதை அந்த பவர் பாண்டி கேரக்டர் சொல்லியுள்ளதாம்.

இதனை கண்ட ரஜினி, இயக்குனரை வெகுவாக பாராட்டினாராம்.

மேலும், அடுத்தடுத்து படங்களை உடனே இயக்க வேண்டாம்.

அப்போதுதான் இந்த படத்திற்கு உள்ள மவுசு நிறைய காலத்திற்கு வரும்.” என தெரிவித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth praised Dhanushs Power Paandi movie

நெருப்புடா குழுவினருக்கு ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபு முதன்முறையாக தயாரித்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடைபெற்றது.

நிக்கிகல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், சிவகுமார், விஷால், கார்த்தி, தனுஷ், உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழா முடிந்தபின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது திடீரென சிவகார்த்திகேயன் வந்து படக்குழுவினரை வாழ்த்தினார்.

More Articles
Follows