தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடித்து, பிரபு சாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தனுஷின் ரசிகர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். எனவே தனுஷ் என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
எனவே விழாவில் பேசிய தனுஷ் தனது ரசிகர்களை நோக்கி கூறியதாவது…
“என் ரசிகர்கள் அனைவருமே பெருமைப்படும் அளவுக்கு என் உழைப்பை கொடுத்து வருகிறேன். அதற்காக இன்னும் பாடுபட்டு உழைப்பேன்.
அதுபோல், நான் பெருமை பட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நல்ல மகனாக, கணவனாக, தந்தையாக உங்கள் குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
அதான் என் ரசிகர்கள் எனக்கு தேடித் தரும் பெருமையாக நான் கருதுகிறேன்.
எல்லா உறவுகளும் வரும் போகும். ஆனால் குடும்பம்தான் நிலைத்து நிற்கும். அது இல்லாமல் எதுவும் இல்லை” என நெகிழ்ச்சியாக பேசினார் தனுஷ்.