காலாவில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறீர்களா.? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஐபி2 படத்தின் பிரஸ் மீட்டில் இதன் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது…

காலாவில் இளவயது ரஜினியாக நான் நடிக்கிறேனா? என தெரியாது.

அதை டைரக்டர் ரஞ்சித்தான் சொல்லவேண்டும். அவர் அழைத்தால் நான் நடிப்பேன். என்று பேசினார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த், சென்னை திரும்பியவுடன் காலா படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Dhanush open talk about acting in Kaala or not

விவேகம் பட ‘தலை விடுதலை’ பாடல் ரிலீசில் அதிரடி மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கி அனிருத் இசையில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள தலை விடுதலை பாடலை ஜீலை 10ஆம் மேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இத்தகவலை நாமும் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில் திடீரென இப்பாடலை நாளை ஜீலை 9 ஆம் தேதி தொடங்கும் நள்ளிரவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்கூட்டியே பாடல் வரிகள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Thalai Viduthalai 2nd single from Vivegam release preponed

Sony Music South‏Verified account @SonyMusicSouth 12m12 minutes ago
Your wait is getting shorter & shorter! Tomorrow at midnight, #ThalaiViduthalai will be out. Get ready @anirudhofficial @directorsiva

ஜீலை 14ஆம் தேதி ரிலீசுக்கு மல்லுக்கட்டும் 6 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன.

இதனால் நேற்று ஜீலை7 தியேட்டர்கள் திறக்கப்பட்டும் புதுப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், அடுத்த வாரம் ஜூலை 14ஆம் தேதியை குறிவைத்து ரிலீசுக்கு புதுப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

‘பண்டிகை’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மற்றும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ மற்றும் ரூபாய் ஆகிய படங்கள் ரிலீசை உறுதிப்படுத்தி விட்டன.

மேலும் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘நிபுணன்’ ஆகிய படங்கள் தணிக்கையில் பிரச்சினையில் சிக்கி, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது.

எனவே அந்த படங்களும் ஜூலை 14 ரேசில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Nearly 5 tamil films confirming their release on 14th July 2017

லைக்கா நிறுவனத்துடன் இணையும் ராஜமௌலி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவையே தன் இயக்கத்தால் மிரள வைத்தவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி.

இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? நடிகர், நடிகைகள் யார்? தயாரிப்பாளர் யார்? என்ற கேள்வி நாடெங்கும் கேட்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் ராஜமௌலியை சந்தித்துள்ளார் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜீ மகாலிங்கம்.

இதுதொடர்பான புகைப்படத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்கள் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன? என்ற விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் இவர்கள் இருவரும் விரைவில் ஒரு பிரம்மாண்ட படத்தில் இணையக்கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Lyca Raju Mahalingam meet Baahubali director Rajamouli

கமல்-அஜித்-சூர்யா-சிம்பு பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அழகான நடிப்பால் தேசிய விருதை வெல்லும் அளவுக்கு பெர்மான்ஸ் கொடுப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அழுத்தமான உணர்வுபூர்வமான கேரக்டர் என்றால் கூப்பிடு ஐஸ்வர்யா ராஜேஷை என்கிற அளவுக்கு பெயர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த இளம் வயதிலேயே கிழவி வேடம் போல இவர் வேஷம் போட்டுக் கொண்ட ஒரு படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது எந்தப் படத்திற்கான கெட்டப் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தியன் படத்தில் கமல், வரலாறு படத்தில் அஜித், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா, AAA படத்தில் சிம்பு ஆகியோர் வயதான வேடத்தில் நடித்திருந்தனர்.

தற்போது அவர்களைப் போல் ஐஸ்வர்யாவும் வயதான மேக்-அப் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajesh follows Kamal Ajith Suriya and Simbu

அஜித் பட வாய்ப்பை தவறவிட்ட விஷ்ணு; இப்போ ஃபீல் பண்றாராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை பிரபலங்கள் பெரிய திரையில் பிரகாசிப்பதும், பெரிய திரை பிரபலங்கள் சின்னத்திரையில் சிக்ஸர் அடிப்பதும் இன்றைய டிரெண்டாகி வருகிறது.

விஜய் டிவியின் பிரபலமான ஆபிஸ் தொடரில் நடித்தவர் விஷ்ணு.

இவர் நாயகனாக நடித்த இவன் யாரென்று தெரிகிறதா? என்ற படம் அண்மையில் வெளியானது.

இதுகுறித்த இவரின் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“வீரம் படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது துரதிர்ஷ்டத்தால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது.” என்று கூறியுள்ளார்.

I missed out Ajith movie chance says Actor Vishnu

 

More Articles
Follows