தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவரது நடிப்பில் வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதனிடையில் அண்மையில் தனது ரசிகர் மன்றத்தின் தலைவராக இயக்குனர் சுப்ரமணியம் சிவாவையும் செயலாளராக பி.ராஜாவையும் நியமித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார்.
மேலும் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் தனுஷ் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஜய் ஆகியோர் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர்.
தற்போது அவர்களது ஸ்டைலில் தனுஷ் அனுகி வருவது இங்கே கவனித்தக்கது.
