சரிடா பொத்திட்டு போடா..; ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி-யில் ரிலீஸ்.. தயாரிப்பாளரை தவிர்த்த தனுஷ்.!

Dhanush (3)கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ரகிட ரகிட.. பாடல் முன்பே வெளியாகி செம ஹிட்டானது.

கடந்தாண்டு 2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

எனவே மாதங்கள் செல்ல செல்ல.. ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ஓடிடி ரிலீசுக்கு விலை பேசியதாக தகவல்கள் வந்தன.

எனவே படத்தை தானே ரிலீஸ் செய்யும் முடிவில் தனுஷ் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் வெளியான போது தனுஷ் ஆதரவு தெரிவித்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை திரையரங்கில் வெளியிட விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை நெட்பிளிக்சில் நேரடியாக (ஓடிடியில்) ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதன் டீசரை இன்று (பிப்ரவரி 22ல்) வெளியிட்டு அறிவித்துவிட்டனர்.

தியேட்டர்களில் வெளியிட வேண்டிய படத்தை ஓடிடியில் வெளியிடுவது மோசமான முடிவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘ஜகமே தந்திரம்’ ஓடிடி ரிலீஸ் முடிவில் தனுஷுக்கு மகிழ்ச்சி இல்லை என்பது தெரிந்துவிட்டது.

எனவே தான் இதுவரை பட டீசரை தன் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிடவில்லை.

சரிடா பொத்திக்கிட்டு போடா என்று இந்த பட டீசரில் தனுஷ் சொல்வது போல இறுதி காட்சி உள்ளது.

Dhanush is not happy with OTT release of his new film ?

Overall Rating : Not available

Latest Post