பட்டைய கிளப்பும் பட்டாஸ் பர்ஸ்ட் லுக்; தனுஷ் பேன்ஸ் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ், தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தை எதிர் நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

கொடி படத்தை போல இதிலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் பிறந்தநாளில் இது வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்; ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு; தனுஷ் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் அவரின் பெற்றோர் மற்றும் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது பிரபல தயாரிப்பாளர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளிப்பதாக கூறினார்.

(பல நடிகர்களும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு ஆசைப்படுவது வாடிக்கையாகி விட்டதால் இதுபோன்ற பேச்சுக்கள் ரஜினி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.)

இதற்கு தனுஷ் பதிலளிக்கும்போது, ‘என் மீதான அன்பு மிகுதியால் இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார். எனக்கு இந்த பட்டம் எல்லாம் வேண்டாம்.

தனுஷ் என்ற பெயர் மட்டுமே போதும். என் ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கை.

யார் பகை காட்டினாலும் பொறுமையாக செல்லுங்கள். பதிலுக்கு பகையை காட்டாதீர்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு குருக்ஷேத்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும், இந்த காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’.

உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்கும், வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்கும் பிரம்மாண்ட படைப்பு இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா,
பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ், திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் .
இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

சைமா குறும்பட போட்டியில் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்க்கு விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது.

பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளியானது.

இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார்.

ஏற்கனவே இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இசையும் பாடலும் மனதை தொடுவதாகவும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையிலும் இருந்தது என்று பாராட்டி இருக்கிறார்கள். தற்போது சைமா விருது பெற்றது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ், மேற்கத்திய இசையில் திறமை பெற்று 16 வயதிலேயே லண்டனில் உள்ள ரிக்கார்டிங் லேபிள் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்த நிறுவனம் இவரது இசையில் உருவான பாடல்களை அமெசான், ஆப்பிள் ஐடியூன்ஸ, ஸ்பாட்டி பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இசைத்தளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SIIMA short film awards 2019

பிந்து மாதவியிடம் ஒரு வித்தியாசமும் தெரியல… – சத்யசிவா சத்தியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2012ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா.. இடையில் சில படங்களுக்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கழுகு முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக அந்த படத்தின் கிளைமாக்ஸ்.. இதனாலேயே இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ‘கழுகு 2’ படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பது பற்றி படம் பார்க்கப் போகும் ரசிகர்களுக்கு லேசாக ஒரு முன்னோட்டம் காட்டுகிறார் இயக்குனர் சத்யசிவா..

“கழுகு படம் போலவே இந்தப் படத்தின் கதையும் முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதைதான்.. கழுகுக்கு சமமான விஷயம் இந்தப் படத்திலும் இருக்கிறது இரண்டுக்குமே காடு என்பது பொதுவான அம்சமாக இருந்ததால் இந்த படத்திற்கு கழுகு-2 என்கிற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும் என முடிவு செய்தோம்.

அதேசமயம் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படம் என்று ‘கழுகு-2’வை சொல்லலாம்..

மீண்டும் கிருஷ்ணா, பிந்து மாதவி என எனக்கு நன்கு அறிமுகமான நட்சத்திரங்கள் என்பதால் படப்பிடிப்பில் எந்தவித சங்கடங்களும் ஏற்படவில்லை. கழுகு படத்தில் அறிமுகமான அதே பிந்துமாதவி தான் இப்போதும்..
எந்தவித மாற்றமும் இத்தனை வருடங்களில் அவரிடம் ஏற்படவில்லை..

கழுகு படம் இயக்கும்போது எனக்கு புதியவராக இருந்த கிருஷ்ணா இப்போது கிட்டத்தட்ட உறவினர் போல மாறிவிட்டார்..

அது மட்டுமல்ல இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கும், காளிவெங்கட்டுக்கும் மிக அழுத்தமான கதாபாத்திரங்கள்..

இருவரும் சிறந்த நடிகர்கள் என்பதை அவ்வளவு அழகாக நிரூபித்திருக்கிறார்கள்.. யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு இன்னொரு புதிய வடிவத்தை கொடுத்திருக்கிறது.

என் சொந்த ஊர் மூணார்.. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கி உள்ளேன்.. ரொம்ப நாளைக்கு முன்பே உருவாக்கிய இந்த கதையை கழுகு படம் முடித்தவுடனே அடுத்து இயக்கலாம் என்று தான் தீர்மானித்திருந்தேன்..

அதற்கு இப்போதுதான் நேரம் அமைந்திருக்கிறது.. மூணார் மற்றும் அதன் அருகில் உள்ள மறையூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்..

காடுகளில் படப்பிடிப்பு நடத்துவது எப்போதுமே சவாலானது தான்.. மலைப்பாங்கான பகுதிகளில் எந்த வாகன வசதியும் இல்லாமல் மலைச்சரிவுகளில் கால்நடையாகவே ஏறியும் இறங்கியும் அட்டைகளின் கடிக்கு ஆளாகியும் ஒருவழியாக படப்பிடிப்பை சிறப்பாகவே நடத்தி முடித்தோம்.

படப்பிடிப்பு சமயத்தில் நிறைய துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி காட்சிகளை எடுத்தோம்.. வனத்துறையின் அனுமதி பெற்று இருந்தாலும் கூட, யாரோ ஒரு சிலர் மரம் வெட்டவும் மான் வேட்டையாடவும் நாங்கள் வந்துள்ளதாக தவறாக புகார் கொடுத்து, அதனால் ஒரு நாள் முழுதும் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போன நிகழ்வும் கூட நடந்தது..

கேரளாவைப் பொறுத்தவரை காடுகள் அப்படியே பாதுகாப்பாக தான் இருக்கின்றன.. அங்கு உள்ளவர்கள் காடுகள் குறித்து எந்தவித அப்டேட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை..

ஒரு மரத்தைக்கூட, அவ்வளவு ஏன் ஒரு செடியைக்கூட வெட்டுவதற்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. வனத்துறையினரும் இதில் கவனமாக இருக்கிறார்கள்.. பின்னே அங்கே மழைக்கு கேட்கவா வேண்டும்.

இந்தப்படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.. அதேசமயம் இந்த படத்தின் கதை ஒரே திசையை மட்டுமே நோக்கி போகும் விஷயம் இல்லை.. ஒரு பயணம் போல வெவ்வேறு விஷயங்களை நோக்கி கதை அதன் போக்கில் பயணிக்கும்..

கழுகு படத்தைப் போல இந்த படத்திலும் அழுத்தமான ஒரு காதல் இருக்கிறது.. அதே போல மனதை உருக வைக்கும் சென்டிமென்டான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்தில் இருக்கிறது.. இந்த படத்திற்கு அப்படிப்பட்ட கிளைமாக்ஸ் அவசியம் தேவைப்பட்டதால் மட்டுமே இடம் பெற்றுள்ளதே தவிர, வழிந்து எதையும் திணிக்கவில்லை..

இந்தக் கதையை எழுதும்போதே அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸ் உருவாகிவிட்டது. அது மட்டுமல்ல நம் சினிமாவை பொறுத்தவரை என்னதான் நகைச்சுவையுடன் படங்களை நகர்த்தினாலும் இறுதியில் சென்டிமெண்ட் கலந்த ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கும்போதுதான் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..

நிச்சயம் ‘கழுகு 2’, படம் பார்த்துவிட்டு வெளியே செல்பவர்களிடம் ஒரு பாதிப்பை உருவாக்கும்..” என உறுதியுடன் கூறுகிறார் சத்யசிவா.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் வரும் ஆக-1ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடுகிறது.

Director Sathya Siva talks about Bindhu Madhavi and Kazhugu 2

யார் யாரோ சூப்பர் ஸ்டார்; யார் யாரோ தளபதி… ராஜு முருகன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசியதாவது,

“அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் முந்திரிக்காடு படத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமான் அவர்களுக்கு இப்பட டீம் மிகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன் சார் எனக்கு முதல் படம் கொடுத்ததிற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்.

அய்யா நல்லக்கண்ணு பேசியதாவது,

“எனக்கு களஞ்சியத்தைப் பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன். ஏனென்றால் இன்று சினிமாவில் நிறையப் போட்டியிக்கிறது. நாங்களும் கொள்கை ரீதியாக நாடகம் போட்டோம். சீமான் சசி ராஜு முருகன் எல்லாம் இந்தக்கதைக்கு நெருக்கமானவர்கள்.

காதலித்தவன் செத்தாலும் காதல் நிற்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போது இருந்ததை விட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது. படம் படம் பார்க்கத்தானா? அதில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்படம் சீக்கிரம் வெளியில் வரவேண்டும். இந்தப்படத்தின் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்தப்படம் வெளிவந்த பின் ஆணவக்கொலைகள் குறையவேண்டும்” என்றார்

இசை அமைப்பாளர் A.k.பிரியன் பேசியதாவது,

“நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் எதாவது ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கு களஞ்சியம் அங்கிள் மூலமாக நிறைய அனுபவம் கிடைத்தது. பெரும்பாலும் லைவ்- இன்ஸ்ட்ருமெண்ட் யூஸ் பண்ண எந்தத் தயாரிப்பாளரும் சம்மதிப்பதில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் எனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து கொடுத்தார். பாடல்கள் தான் இந்தப்படத்தின் ஜீவன்.

அதைச் சரியாக கொண்டு வர இயக்குநர் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார். பாடலாசியர்கள் மற்றும் பாடகர்கள் மிகச் சிறப்பாக பங்காற்றி இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் பேக்ரவுண்ட் மியூசிக் இரண்டும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது,

” பெத்தவன் நாவலை மு.களஞ்சியம் முந்திரிக்காடு என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் என்று தெரிந்ததும் பொறாமையாக இருந்தது. பல புரட்சிக்கு வித்திட்ட மண் முந்திரிக்காடு. சில இயக்குநர்கள் தன் சினிமாக்களை தன் அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி இருப்பார்கள். தோழர் மு.களஞ்சியம் அவர்களை. நான் அப்படித் தான் பார்க்கிறேன்.

இந்தப்படம் கொஞ்சம் தாமதாக வந்தாலும் நல்லா கூர்தீட்டி கொண்டு வரப்பட்டுள்ளது. நான் இந்தப்படத்தைப் பார்த்து வியந்தேன். நிச்சயமாக இந்தப்படம் சாதியத்திற்கு எதிரான ஒரு ஆயுதமாக விளங்கும் என்று நம்புகிறேன். சாதிய எதிர்ப்பு குடும்பத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள் கூட சாதிக்கு எதிராக களம் இறங்க வேண்டும். குறிப்பாக கிராமத்தில் இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டும்.

இந்தப்படம் அதற்கு உதவும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் நாயகன் புகழ் மிக நல்லப்பிள்ளை. அவன் ஒரு நல்ல நடிகனாக வருவான். சீமான் அண்ணன் அவர்கள் தம்பி புகழுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும். யார் யாரோ சூப்பர் ஸ்டார், யார் யாரோ தளபதியாக இருக்கும் போது நம் தம்பிக்கும் அவர் ஒரு பட்டம் கொடுக்கலாமே. அண்ணன் சீமான் வெறும் பரப்புரை மூலமாக பெருங் கூட்டத்தை கவர்ந்து வைத்திருக்கிறார். இந்தப்படம் மிகச் சிறந்த வெற்றிபெறும்” என்றார்

சி.மகேந்திரன் பேசியதாவது,

“தோழர் இமையம் அவர்கள் எழுதியதை நான் நாவலா இல்லை சிறுகதையா என்று கேட்டேன். அவர் அதை நெடுங்கதை என்றார். நான் பதினேழு வயதில் இருந்தே ஜாதி எதிர்ப்பிற்கான போராட்டத்தை செய்து வருபவன்.
பெத்தவன் சிறுகதையை மு.களஞ்சியம் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்பதை படத்தைப் பார்க்கும் போது உணர்ந்தேன். பிரசவ வலி என்பது போல ஒரு படைப்பாளிக்கும் உண்டு.

பெத்தவன் நாவலை படமாக்கிய களஞ்சியத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஜாதிய கொடுமைகளை எதிர்த்து நின்று போராடியவர்களின் பின்னணியில் வந்தவர் மு.களஞ்சியம். தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் தலித் இளைஞர்கள் மேல்சாதி எனச்சொல்லப்படும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தாலே கொன்றுவிடுவார்கள்.

ஒரே நேரத்தில் ஒரு மாட்டையும் கொல்வார்கள் தலித் இளைஞனையும் கொல்வார்கள்.கொன்ற இளைஞனை அந்த மாட்டின் வயிற்றுக்குள் வைப்பார்கள். இப்படியான கொடூரங்களைப் பார்த்து வந்தவர் மு.களஞ்சியம்.

அதனால் தான் அவரிடம் இருந்து இப்படி ஒரு படைப்பு வருகிறது. சீமான் அவர்கள் இப்போது ஒரு அரசியலை முன்னெடுக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். மிகப்பெரிய புரட்சிக்கு ஒரு திரைப்படம் காரணமாக இருந்த வரலாறு உண்டு.

அதுபோல் தமிழ்நாட்டில் இந்த முந்திரிக்காடு படம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஒரு படைப்பு மூலமாக ஒரு குடும்பத்தை இணைத்தது போல பல திறமையாளர்களை இப்படத்தில் இணைத்து இருக்கிறார். அவருக்கு அதற்காக என் நன்றி. ஒரு தந்தைக்கு இருக்கும் முக்கியமான கடமை தன் மகனின் முயற்சிகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்பது. அந்த வகையில் என் மகன் புகழ் ஒரு நல்ல நடிகராக வந்துள்ளார் என்று நம்புகிறேன். என்றார்

சீமான் பேசியதாவது,

“களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் இசை அமைத்து பாடல்களை என்னிடம் போட்டுக் காட்டினார். நான் கேட்டுவிட்டுப் பாராட்டினேன்.

பின்னணி இசையும் அருமையாக வந்திருக்கிறது. தம்பி களஞ்சியம் இமையத்தின் எழுத்தை அப்படி திரையில் வார்த்தெடுக்கிறார். இமையம் அவர்களின் எழுத்தை நம்பி தான் மு.களஞ்சியம் படத்தைத் தயாரித்து இருக்கிறார். புரட்சி என்றால் என்ன என்று எங்களுக்கு கற்று கொடுத்த மகேந்திரன் அவர்களின் மகன் தம்பி புகழுக்கு பட்டம் கொடுக்கச் சொன்னார் ராஜு முருகன்.

இங்கு எழுச்சி புரட்சி என்றால் என்ன என்பதே தெரியாதவன் எல்லாம் பட்டம் வைத்திருக்கிறான். அதனால் இந்தப் பட்டத்திற்கு தகுதியானவரின் மகனான தம்பி புகழுக்கு எழுச்சி நாயகன் என்ற பட்டத்தைக் கொடுக்கலாம். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன் காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான்.

இந்த முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விழாவில் ஒரு நடிகர் பேசுகிறார். திஸ் பிலிம்ல சாங்க்ஸும், பைட்டும் பெண்டாஸ்டிக்கா வந்திருக்கு” என்கிறார். இந்தச் சனியன்களை வைத்து என்னடா பண்றது.

நாக்குல கூட தமிழ் சரியா வரலியே நீங்க எப்படிடா நாட்டை சரி பண்ணுவீங்க. புறநானூறு சொல்கிறது நான்கு சாதிகள் தவிர இல்லை. எந்தச் சொல் உன்னை இழிச்சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறதோ, அந்தச் சொல்லை உனது ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

பெயரையே மொழியாக வைத்துக் கொண்ட சமூகம் நம் சமூகம்.ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சதிமத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஓர்மைப்படாமல் பார்த்துக் கொள்கிறது.

சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்கிவதற்கே தகுதி இல்லாதவன் . அவன் அரசியலுக்கு நாடு நாசமாகப் போய்விடும். என்கிறார் முத்துராமலிங்கத்தேவர்.சாதிய விடுதலை, மதவிடுதலை, பொருளாதார விடுதலை, எதுவுமே இன்னும் இந்தியாப் பெறவில்லை.

வெறும் அரசியல் விடுதலை மட்டும் தான் பெற்றுள்ளோம். மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்தவெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை.

கோயில்களில் இருக்கும் சாதி திரையரங்களில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தான்.

நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்று தான் போராடுகிறோம். அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் முந்திரிக்காடு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும்.

இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகப் பார்க்கிறேன். இந்தப்படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்” என்றார்.

நடிகர்கள், நடிகைகள்..

செந்தமிழன் சீமான்
புகழ்
சுபப்பிரியா
”தியேட்டர்லேப்” ஜெயராவ்
கலைசேகரன்
அ.வெ.பார்த்திபன்
சக்திவேல்
சோமு

தொழிற்நுட்ப கலைஞர்கள்

எழுத்து – இயக்கம் : மு. களஞ்சியம்
இசை : ஏ.கே. பிரியன்
ஒளிப்பதிவு : ஜி.ஏ. சிவசுந்தர்
படதொகுப்பு : எல்.வி.கே.தாசன்
கலை : மயில்கிருஷ்ணன்
பாடல்கள் : கவிபாஸ்கர் – இளையகம்பன்
நிழற்படம் : தஞ்சை ரமேஷ்
மூலக்கதை : எழுத்தாளர் இமையம்
மக்கள் தொடர்பு : மெளனம் ரவி
வரைகலை : பவன்குமார்
தயாரிப்பு : ஆதி திரைக்களம்

Director Raju Murugan indirectly slams Super Star and Thalapathy title

More Articles
Follows