தனுஷின் ஹாலிவுட் பட சூட்டிங் தகவல்கள்

தனுஷின் ஹாலிவுட் பட சூட்டிங் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush hollywood movie The Extraordinary Journey of the Fakir updatesகோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் தனுஷ், முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

ஆனால் இப்படத்தின் தகவல்கள் மட்டுமே வந்த நிலையில், இதன் சூட்டிங் குறித்த தகவல்கள் இல்லை.

இந்நிலையில், அதற்கான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் வருகிற மே 14 முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பகிர் எனும் கேரக்டரை மையப்படுத்தியே இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடியாக தயாராக உள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ (ஆர்ட்டிஸ்ட் திரைப்படம்) முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanush hollywood movie The Extraordinary Journey of the Fakir shooting updates

dhanush hollywood movie

புற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் வினோத் கண்ணா காலமானார்

புற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் வினோத் கண்ணா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Actor Vinod Khanna passes away in Mumbaiபிரபல பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான வினோத் கன்னா இன்று 70 வயதில் காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் பாஜக எம்.பியான வினோத் கண்ணா, கடந்த 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.

கடந்த 1968-2013 ஆண்டு வரை சுமார் 141 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான மேரி அப்னே, மேரா கோன், மேரா தேஷ், கத்தார், ஜெயில் யாத்ரா, இமிதிஹான், இன்கார், குச் தாகே, அமர் அக்பர் அந்தோணி, ராஜ்புட், குத்ராத், கார்நமா உள்ளிட்ட படங்கள் பிரபலமானவை.

பா.ஜ.க கட்சியை சேர்ந்த வினோத் கன்னா, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர்.

வினோத் கன்னா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Bollywood Actor Vinod Khanna passes away in Mumbai

vinodh kanna passed away

ரஜினி இடத்தில் ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயன்

ரஜினி இடத்தில் ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans Velaikkaran movie Malaysia scheduleமோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக மலேசியா செல்லவிருக்கின்றனர்.

இத்தகவலை இயக்குனர் மோகன்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அங்குள்ள ஐடி கம்பெனி மற்றும் இதர மால்களில் இதன் சூட்டிங் நடைபெற உள்ளதாம்.

ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் 90% சூட்டிங் மலேசியாவில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyans Velaikkaran movie Malaysia schedule

அஜித்-விஜய்-சூர்யா-சிம்பு வரிசையில் இணையும் விஷால்

அஜித்-விஜய்-சூர்யா-சிம்பு வரிசையில் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal plays First time Triple role on Naalai Namadhe movieவரலாறு படத்தில் அஜித், 24 படத்தில் சூர்யா ஆகியோர் 3 வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது அட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு 3க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்து விஷாலும் இந்த வரிசையில் இணையவுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனரும் பொன்ராமின் உதவியாளருமான வெங்கடேசன் இயக்கவிருக்கிறாராம்.

தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிக்கும் இந்த 20வது படத்திற்கு நாளை நமதே எனப் பெயரிட்டுள்ளனர்.

இது எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்கா அல்லது புதிய படமா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இதில் பிரபல காமெடியன் சதீஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Vishal plays First time Triple role on Naalai Namadhe movie

அஜித் பிறந்த நாளுக்கு முன்பே அசத்திய விஜய் ரசிகர்கள்

அஜித் பிறந்த நாளுக்கு முன்பே அசத்திய விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans making trends with his favorite stillsஅஜித்தின் பிறந்தநாள் வருகிற மே 1ஆம் தேதி வருகிறது.

இதனை கொண்டாட அஜித் இந்தியாவில் இருக்கிறாரோ இல்லையோ. அதனை கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பான பழைய நினைவுகளையும் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இளைய தளபதி ரசிகர்கள் விஜய் படத்தை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு விஜய் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த விஜய் போட்டோவை பகிர்ந்து, #MyFavouriteVijayPic என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி, அதை ட்ரெண்டாக்கினர்.

இதில் விஜய்யுடன் நடித்த சதீஷ் உள்ளிட்ட பிரபலங்களும் அவர்களுக்கு பிடித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

அஜித் ரசிகர்களும் #4DaysToAJITHBdayCarnival என்ற பெயரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் படத்தை பாடமாக படிக்கப் போகும் மாணவர்கள்

விஜய் படத்தை பாடமாக படிக்கப் போகும் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Shankar combo Nanban movie will be a subject for Delhi University Studentsபிரபல நாவல் எழுத்தாளர் சேத்தக் பகத்.

இவர் எழுதியுள்ள நாவல்களில் சில நாவல்கள் படமாக உருவாக்கப்பட்டது.

சமீபத்தில் இவர் எழுதிய Half Girlfriend என்ற புத்தகம் அர்ஜுன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிக்க அதே பெயரிலேயே படமாக்கப்பட்டது.

வருகிற மே 19ம் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இவர் எழுதிய மற்றொரு நாவலான Five Point Someone என்ற கதை தற்போது டெல்லி யூனிவர்சிட்டியில் இலக்கிய பாடமாக அமையவுள்ளதாம்.

இதே நாவல்தான் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற பெயரில் உருவானது.

மேலும் இந்த படத்தை நண்பன் என்ற பெயரில் விஜய் நடிக்க, ஷங்கர் ரீமேக் செய்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay and Shankar combo Nanban movie will be a subject for Delhi University Students

More Articles
Follows