80 லட்சத்தை விளம்பரமின்றி விவசாயிகளுக்கு கொடுத்த தனுஷ்

80 லட்சத்தை விளம்பரமின்றி விவசாயிகளுக்கு கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush helped 125 farmers family and sponsor Rs 80 lakhs to themஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பார்கள். ஆனால் தற்போது நம் நாட்டில் அந்த முதுகெலும்பே வளைந்துள்ளது எனலாம்.

அதிலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசம்.

கடந்த 4 மாதங்களாக இவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரி வினோதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தினம் ஒரு விவசாயி தற்கொலை என்ற செய்திகளை பார்க்க முடிகிறது.

ஒரு சில பிரபலங்கள் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வறட்சியால் பலியான 125 குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒரு குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி செய்துள்ளார் தனுஷ்.

இதற்காக கிட்டதட்ட ரூ. 80லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவு செய்ய செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் நண்பரும் இயக்குனமான சுப்ரமணிய சிவா மற்றும் தனுஷ் ரசிகர்கள் இதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த தொகையை யார் மூலமாகவும் கொடுக்காமல், முதல் கட்டமாக 125 குடும்பங்களை நேரில் வரவழைத்து கொடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கும் இதுகுறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த உதவியை விளம்பரப்படுத்த வேண்டாம் எனவும் தனுஷ் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Dhanush helped 125 farmers family and sponsor Rs 80 lakhs to them

dhanush helped farmers

 

ஒரே வாரத்தில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

ஒரே வாரத்தில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவருடத்திற்கு ஆறு படம் கொடுத்து திரையுலகினரையே ஆச்சரியப்பட செய்பவர் விஜய்சேதுபதி.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஓரிரு மாதங்களில் மாதத்திற்கே இரண்டு படங்களை கொடுத்திருந்தார்.

அதே டிரெண்ட்டை இப்போதும் செய்யவிருக்கிறார் விஜய்சேதுபதி.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள புரியாத புதிர் படத்த செப்டம்பர் 1ம் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள கருப்பன் படத்தை செப்டம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த இரு படங்களின் ரிலீசும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 96, அநீதிக்கதை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

தன் அடுத்த பட கலைஞர்களை அறிவித்தார் சிம்பு

தன் அடுத்த பட கலைஞர்களை அறிவித்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu stillsஓரிரு தினங்களுக்கு முன்பு சிம்பு தன் அடுத்த படம் பற்றி தெரிவித்தார் சிம்பு.

இப்படத்தில் பாடல் இல்லை; இடைவேளை இல்லை; என பதிவிட்டுருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எடிட்டிராக பணிபுரிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வென்றவர் சந்தோஷ்சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

என் மேல் நம்பிக்கை வைத்து அவர் இப்படத்தில் இணைந்தது மகிழ்ச்சி என சிம்பு பதிவிட்டுள்ளார்.

இன்னும் சில தினங்களில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் படத்தின் தலைப்பு பற்றி அறிவிப்பார் என நம்பலாம்.

STR aka Simbu announced his next movie technicians

STR‏Verified account @iam_str
Proud & happy to announce @santoshsivan the visionary will be the cinematographer. Thank u sir for believing in me and my vision #Blessed

A @santoshsivan visuals , @thisisysr musical , Antony cuts for A #SilambarasanTRFilm God bless #Excited #Humbled

ஓவியா பெயரில் சினிமா; பிக்பாஸ் போட்டியாளர்களும் நடிக்கிறார்கள்

ஓவியா பெயரில் சினிமா; பிக்பாஸ் போட்டியாளர்களும் நடிக்கிறார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviyaஒரே நிகழ்ச்சி… ஓஹோன்னு புகழ்…

இது மற்றவர்களுக்கு எவ்வளவு பொருந்துமோ தெரியவில்லை.

ஆனால் நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்தளவுக்கு புகழ் கிடைத்துள்ளது.

நிகழ்ச்சி முடித்துவிட்டு வரும்போது அவரே ஆச்சயரிப்படும் அளவுக்கு புகழின் உச்சம் அடைந்திருப்பார்.

எனவே அவரை வைத்து படங்களை இயக்க இயக்குனர்கள் கதையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஓவியாவை விட்டா யாரு? என்ற பெயரில் ராஜதுரை என்பவர் ஒரு படம் இயக்கவிருக்கிறாராம்.

மதுரை செல்வம் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள கஞ்சா கருப்பு, வையாபுரி உள்ளிட்டவர்களும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

சினிமாவிலேயே இதுதான் முதல்முறை; சிம்பு-யுவன் புது முயற்சி

சினிமாவிலேயே இதுதான் முதல்முறை; சிம்பு-யுவன் புது முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu yuvanசிம்பு அடுத்த நடிக்கவுள்ள படத்திற்கு யுவன் இசையமைக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் எவரும் செய்யாத புதிய முயற்சியாக இடைவேளை இல்லை என்பதை தெரிவித்திருந்தார்.

இன்னும் சில தினங்களில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

இதற்காக பின்னணி இசை பணியில் யுவன் சங்கர் ராஜா ஈடுப்பட்டு வருகிறார்.

இசைப் பணிகளை முழுவதுமாக முடித்து விட்டு சூட்டிங்குக்கு செல்கிறோம்.

இப்படி செல்வது இதுதான் முதன்முறை எனவும், உங்கள் ஆதரவு படத்திற்கு தேவை எனவும் சிம்பு தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தில் பாடல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu plans to start his movie shoot once BGM is over

STR‏Verified account @iam_str
@thisisysr has already started composing the background score. First time finishing the score and then shooting. Need all ur support n love

அஜித்திடம் பேசுவதும் நல்ல புத்தகத்தை படிப்பதும் ஒன்று – கபிலன் வைரமுத்து

அஜித்திடம் பேசுவதும் நல்ல புத்தகத்தை படிப்பதும் ஒன்று – கபிலன் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and kabilan vairamuthuகவிஞர் வைரமுத்துவின் மகன், பாடலாசியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து.

இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் திரைக்கதையிலும் பங்காற்றியுள்ளார்.

இதுகுறித்து கபிலன் கூறியுள்ளதாவது…

இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது எனது பங்களித்தேன்.

இயக்குனர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார்.

இப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது.

அவரது தொலைநோக்கு பார்வை,தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது.

விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன.

ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து.

More Articles
Follows