தளபதி ரூட்டை பிடிக்கும் தனுஷ்.; நல்லாத் தானே போய்ட்டிருக்கு சாரே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இவையில்லாமல் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா.

இந்த நிலையில் தனுஷ் நடிக்க உள்ள புதிய தெலுங்கு படத்திலும் பூஜா நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தான் இவர்களின் ஜோடி இணையவுள்ளதாம்.

இதற்கு முன்பு ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ர மாளவிகா மோகனனை தனது தனுஷ் 43வது படத்தில் நாயகியாக்கிறார் தனுஷ்.

இப்போது ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா தனது தெலுங்கு படத்தில் நாயகியாக்க நினைக்கிறாரோ தனுஷ்.?

Dhanush follows Vijays formula in Selecting Heroines

பணியாற்றிய 300 பேருக்கு பரிசளித்து ‘மாநாடு’ படக்குழுவினரை மகிழ்வித்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதன் கார்க்கியின் வரிகளில் யுவன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, கே எல் பிரவீண் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகள், உமேஷ் ஜே குமார் கலை இயக்கத்தையும் செய்துள்ளனர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார்.

இப்பட அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் TR ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.

அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் பரிசுகளையும் அளித்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் ‘மாநாடு’ ரிலீசாகவுள்ளது.

Simbu surprises Maanadu movie cast and crew with costly gifts

விருமாண்டி லெவல் கூட ‘விக்ரம்’ இல்லையே..; கமல் விஜய்சேதுபதி பகத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கவுள்ள படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இப்படத்தில் கமலுடன், ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அண்மையில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடைப்பெற்றது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று ஜூலை 10 மாலை 5 மணிக்கு ரலீசானது.

அதில்… கமல்ஹாசன் விஜய்சேதுபதி பகத்பாசில் ஆகியோரது முகங்கள் உள்ளன. CODE : RED எனவும் Slogan குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuththaththaal Adho Adho Vidiyudhu
Saththaththaal Araajagam Azhiyudhu
Raththaththaal Adho Thalai Uruludhu
Sorkkangkal Idho Idho Theriyudhu
Thudikkidhu Pujam!
Jeyippadhu Nijam!
@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial
#Vikram
#VikramFirstLook
#Arambichitom https://t.co/AtZDB5hQCv

என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் லோகேஷ்.

அண்மைக்காலமாக FAN MADE POSTERS கூட பக்கா டிசைன் செய்யப்பட்டு வருகிறது.

15 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் ‘விருமாண்டி’ போஸ்டர் லெவலில் கூட இது இல்லையே.

அதில் கமல் நெப்பொலியன் பசுபதி ஆகியோரது முகங்கள் மீசையுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்த விக்ரம் பர்ஸ்ட் லுக்கில் கமல்ஹாசன் விஜய்சேதுபதி பகத்பாசில் ஆகியோரின் பாக்ஸ் டைப் போல கட்டிங் செய்யப்பட்டுள்ளது.

கமல் சார் இதை கவனிக்கலையா..?

Kamal Vijaysethupathi Fahad combo Vikram first look released

JUST IN தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிப்பு.; எதற்கு அனுமதி.? எதற்கு தடை.? முழுத் தகவல்கள் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

எதற்கு அனுமதி.? எதற்கு தடை.?

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை நீட்டிப்பு.. திரையரங்குகளை திறக்க தடை நீட்டிப்பு

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைக்கு தடை.

புதுச்சேரி மாநில (காரைக்கால் உட்பட) பேருந்து சேவை தொடங்கப்படுகிறது

திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

இறுதி சடங்குகளில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட
செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி.

மத்திய உள்துறை அமைச்சக்கத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களை தவிர சர்வசேத விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியில் பூங்காங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடரும்.

மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்பு தொடர்பான எழுத்து தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த அனுமதி

உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

குளிர்சாதனவசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்களைஅனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவுவாயிலில்பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

TN Govt extended Covid lockdown till 19th July 2021

கமல்ஹாசன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்..; மாஸ்டர் டைரக்டரின் மாஸ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கவுள்ள படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த ‘விக்ரம்’ திரைப்படம் சூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இப்படத்தில் கமலுடன், ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அண்மையில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடைப்பெற்றது.

இந்த படத்தின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரலீசாகவுள்ளது என இநக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Vikram first look from tomorrow evening at 5pm
#Vikram #arambichitom

ரஜினி அங்கிளுக்கு பிறகு பிரபுதேவா அங்கிள்..; ‘மஞ்சப்பை’ ராகவனின் ‘மை டியர் பூதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.

அதில் ஒன்று…

இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் இணை–துணை இயக்குநராக பணியாற்றி ‘மஞ்ச பை’ படம் மூலம் இயக்குநராக முத்திரை பதித்த ராகவன், கடம்பன் படம் மூலம் தனி அடையாளம் கண்டார்.

காதல் – கமர்ஷியல் – ஹாரர் – திரில்லர் என தொடர் வரிசை படங்களிலிருந்து மாறுபட்டு முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து மகிழும்படியான கதை – திரைக்கதையமைப்பில் பேண்டஸி படமாக பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ராகவன்.

இதுவரை ஏற்றிடாத அற்புதமான, அபிமான வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்திற்கு பின் எப்படி ‘ரஜினி அங்கிள்’ என்று அவரை கொண்டாடினார்களோ அதைப்போல் இப்படத்திற்கு பின் அனைத்து குழந்தைகள் PD (பிரபுதேவா) அங்கிள் என கொண்டாடும் விதம் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

மிகுந்த பொருட்செலவில் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்காக அமெரிக்கா மற்றும் லண்டனிலுள்ள VFX நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தயாரிப்பு — அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : ராகவன்

Prabhu Deva to act in Manjappai Raghavan direction

More Articles
Follows