இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா.? தனுஷுக்கு எதிராக ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட தனுஷுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவரது ரசிகர்களே அவருக்கு எதிராக போஸ்டர்கள் அடித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில்…

இவனெல்லாம் ஹீரோவா? இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா? என்று ஆரம்பகாலத்தில் வந்த விமர்சனங்களைத்தாண்டி நின்றவர்கள் நாங்கள். ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும், ராஜாவும் யார்?

பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள் என் ரசிகர்கள். அவர்களை எப்போதும் கைவிடமாட்டேன் என்று சொன்னாயே தலைவா? ஆனால் இன்றைக்கு உழைத்த தலைவர்களை மறந்து விட்டாயே தலைவா?

நாங்களா தனுஷ்க்கு பேனர் கட் வைக்க சொன்னோம் என்று பேசிய டச்சப்மேன் ராஜா மீது நடவடிக்கை எடு தலைவா? இல்லையேல் போராட்டம் வெடிக்கும் என்று அந்த போஸ்டரில் அடித்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷ் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush fans slams their Hero and printed Controversial Poster

சசிகுமாரை இயக்கும் சலீம் பட இயக்குனர் நிர்மல்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் சசிகுமார்.

தற்போது இவரது நடிப்பில் கிட்டதட்ட 5 படங்கள் உருவாகி வருகிறது.

எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதே நிர்மல்குமார் தான் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2ம் பாகத்தை இயக்கினார். ஆனால் அது இன்னும் ரிலீஸாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சசிகுமார் மற்றும் நிர்மல்குமார் இணையும் படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.
படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Sasikumars next with Salim director Nirmal kumar

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் இணைந்த இந்துஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேயாதமான், 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இந்துஜா.

இவர் தற்போது அட்லி இயக்கும விஜய்யின் 63வது படத்திலும் நடித்து வருகிறாராம்.

கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நடிகர் கதிரும் விளையாட்டு வீர்ராக நடித்து வருகிறார்.

அவருடன் தற்போது கால்பந்தாட்ட வீராங்கனையாக இந்துஜாவும் இணைந்திருக்கிறாராம்.

விஜய்யின் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இதற்காக சென்னை அருகே ஒரு பிரம்மாண்ட மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

Meyaadha Maan fame Indhuja joins with Vijay in Thalapathy 63

அசத்திட்டார் தல..; அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனிகபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் மறைந்த பின்னும் அவரின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இதில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இதன் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.

இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ரஷ்ஷைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளதாவது…

“நேர் கொண்ட பார்வை’ படத்தின் ரஷ்ஷைப் பார்த்தேன். மகிழ்ச்சி. அஜித் அற்புதமாக நடித்திருக்கிறார்.

விரைவில் ஹிந்திப் படங்களில் நடிக்க அவர் சம்மதிப்பார் என நினைக்கிறேன். கைவசம் மூன்று ஆக்சன் கதைகளை வைத்திருக்கிறேன்.

குறைந்தபட்சம் ஒரு படத்திலாவது அவர் நடிக்க சம்மதிப்பார் என நினைக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

அவரின் அழைப்பை ஏற்று ஹிந்தி சினிமாவில் நடிப்பாரா அஜித்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Boney Kapoor invites Actor Ajith to act in Hindi movies

ஆண்ட்ரியா ஒரு சகலகலாவல்லி… விஜய் ஆண்டனி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது,

“இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகை ஆண்ட்ரியா பேசும்போது,

“இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை.

நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள்.

ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன்.

இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார்.

ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’ என்றார்.

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,

“நான் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது.

இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும்.

சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்” என்றார்.

Andrea is multifaceted person says Vijay Antony in Maaligai Teaser launch

லதாவை தடவிய எம்ஜிஆர்..; கஸ்தூரியின் கருத்துக்கு லதா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கஸ்தூரி அவ்வப்போது ட்விட்டரில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லிவிட்டு சர்ச்சையாக்கி கொண்டே இருப்பார்.

தற்போது எம்ஜிஆர் மற்றும் லதாவை இணைத்து ஒரு தடவல் ட்விட் போட்டுள்ளார்.

அதில்…

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar
என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)
எனவே அவரின் கருத்துக்கு பிரபல நடிகை லதா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…

“ நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன்.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..?

கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..

இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படிக்கு
நடிகை லதா

தற்போது லதாவின் கண்டனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கஸ்தூரி தெரிவித்துள்ளதாவது…

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar
MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.

Kasthuri under trouble for vulgar tweet Actress Latha condemn her

More Articles
Follows