தனுஷ் படத்திற்கு வித்தியாசமான தலைப்பிட்ட ‘ராட்சசன்’ இயக்குநர்

தனுஷ் படத்திற்கு வித்தியாசமான தலைப்பிட்ட ‘ராட்சசன்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ram kumar dhanushமாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தை அண்மையில் முடித்து கொடுத்தார் நடிகர் தனுஷ்.

தற்போது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘அந்தரங்கி ரே’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படங்களை அடுத்து தான் ‘ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் இயக்கத்ல் நடிக்க தேதிகளை ஒதுக்கவிருக்கிறார் தனுஷ்.

இப்படத்துக்கு ‘வால் நட்சத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அதன் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Dhanush – Director Ram Kumar’s new film is titled Vaal Natchathiram

மாதம்பட்டி ரங்கராஜ் & வாணி போஜன் இணையும் ‘கேசினோ’

மாதம்பட்டி ரங்கராஜ் & வாணி போஜன் இணையும் ‘கேசினோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casino tamil movie‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற வித்தியாசமான படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இதில் நாயகியாக வாணி போஜன் நடிக்கிறார்.

இவர்களுடன் விஜய்யின் ‘சச்சின்’ பட இயக்குநர் ஜான் மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் மூலம் இவரும் நடிகராகிறார்.

‘கேசினோ’ என இந்தப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ஜே.கே, இசையமைப்பாளராக ஸ்டான்லி சேவி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

Madhampatty Rangaraj and Vani Bhojan joins for Casino

அதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் !

அதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kavalthurai ungal nanban“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் மொத்த படக்குழுவும் முன் திரையிடல் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பிலும், பாராட்டிலும் பெரும் மகிழ்ச்சியில் உள்ள்னர். படத்தினை பற்றி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, நிறைய திரையரங்குகளில் படம் வெளியாக காரணமாக அமைந்துள்ளது.

Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது…

ஒரு அற்புதமான பயணம் “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் எனக்கு அமைந்தது. பல்வேறு இடர்பாடுகளையும், பெரும் தடைகளையும் தாண்டி இப்படம் வெளிவந்துள்ளது. இப்படகுழுவின் அயராத உழைப்பும், ஒன்றினைந்த உற்சாகத்திற்கும் இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. இந்த நீண்ட பொது முடக்க காலத்திலும் இப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்கிற எண்ணம் என்னுள் ஆழமாக இருந்தது. தியேட்டரில் வெளியாகும்போது கண்டிப்பாக பெரும் பாராட்டுக்களை குவித்து, அனைவரையும் ஈர்க்கும் என உறுதியாக நம்பினேன். பத்திரைகையாளர்கள் காட்சிக்கு பிறகு ஊடக நண்பர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக பாராட்டுக்கள் கிடைத்தது. மக்களின் நேரடியான அசைக்க முடியாத பாராட்டுக்கள், நேர்மறை விமர்சனங்கள் படத்திற்கு வியாபார தளத்தில் மிகுந்த நல்ல பெயர் பெற்று தந்தது. அதோடு மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளும் கிடைத்தது. இப்படத்தினில் பங்கு கொண்டு இப்படத்தை பெரிய அளவில் முன்னெடுத்து சென்றதற்கு “காவல்துறை உங்கள் நண்பன்” படக்குழு சார்பாக இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தென்னிந்தியா முழுவதிலும் 334 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரசிகர்களிடம் இப்படம் பெரும் பாராட்டை பெறும் என நம்புகிறோம்.

“காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் சென்னை 18, செங்கல்பட்டு 62 , தெற்கு மற்றும் வடக்கு ஆற்காடு பகுதிகளில் 55, கோயம்புத்தூர் 56, மதுரை 36, திருச்சி 30, சேலம் 40, திருநெல்வேலி 16 மற்றும் கர்நாடகா 21 திரையரங்குகளில் வெளியாகிறது.

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் சுரேஷ் ரவி, ரவீணா ரவி மையப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள்.
ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.

இயக்குநர் RDM இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை
பாஸ்கரன், ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்கள். வெற்றிமாறனின் Grassroot film company உடன் இணைந்து Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

Kaval Thurai Ungal Nanban released in 300+ theatres in Tamil Nadu

அனைத்திலும் ஜெயம்.. அசத்தும் அமைச்சர்..; முதல்வர் பழனிச்சாமி பாராட்டு

அனைத்திலும் ஜெயம்.. அசத்தும் அமைச்சர்..; முதல்வர் பழனிச்சாமி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Jayakumar got appreciation from CM Edappadi Palanisamyநிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை.

இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர்.

தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார் அவர்.

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் இந்த அமைச்சரின் வாடிக்கையான விஷயமாக மாறியிருக்கிறது.

காரில் வலம் வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து அதற்கு தீர்வு காண்பது என பல தளங்களில்,களங்களில் நின்று பணியாற்றி வருகிறார் அந்த அமைச்சர்.அவரது உதவும் மனப்பான்மை முதலமைச்சரின் பார்வைக்கு எப்படியோ சென்றிருக்கிறது.

இதையடுத்து உடனடியாக அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவரது செயலை பலரும் அறிய வேண்டும் என்பதற்காக பொதுவெளியில் அதாவது முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.

ஆம் அந்த அமைச்சர் யார் என்பது தானே உங்கள் அனைவரது கேள்வியாக இருக்கிறது? வேறுயாருமல்ல எப்போதும் மக்களோடு மக்களாகவே பயணிக்கும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர், அமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர் என தேர்தலையும் மக்கள் மனதையும் சேர்த்தே வென்ற அமைச்சர் ஜெயக்குமார் தான் அவர்.

TN Minister Jayakumar got appreciation from CM Edappadi Palanisamy

tn minster jayakumar

லிஜோ ஜோஸ் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டி.!

லிஜோ ஜோஸ் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jallikattu 2019 movieலிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமாத் & சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ) சார்பில் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு எருமையை ஒரு கிராமம் அதைப் பிடிக்க முயற்சிக்கிறது. இது மனித நாகரிகம் பற்றிய ஒரு உருவகக் கதையாகும்.

இந்த இயக்குனர் இயக்கிய 7வது படம் இது.

இதற்கு முன்பு ஆமென், அங்கமாலி டைரிஸ் மற்றும் ஈ.மா.யு போன்ற இவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை.

கடந்தாண்டு 2019 ஆம் ஆண்டு சோயா அக்தரின் கல்லி பாய் படம் தேர்வானது.

இதில் ரன்வீர் சிங் & ஆலியா பட் ஆகியோர் நடித்து இருந்தனர்.

ஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்தியன், நியூட்டன், பார்பி, பீப்லி லைவ் போன்ற திரைப்படங்கள் முந்தைய ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை, எந்த இந்திய படமும் சிறந்த சர்வதேச பிரிவில் விருதை வென்றவில்லை.

குரு (1997) மற்றும் ஆதாமின்டே மகன் அபு (2011) ஆகிய படங்களுக்கு பிறகு அகாடமி விருதுகளுக்கு இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டது.

தற்போது 3வது திரைப்படம் ஜல்லிக்கட்டு (மலையாளம்) ஆகும்.

93 வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 25, 2021 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

Jallikattu by Lijo Jose is india’s official entry to the oscars 2021

யார் நீங்க..? உங்க படம் பார்த்ததில்லையே.. மிஷ்கினை அடையாளம் தெரியாத தியேட்டர் முதலாளி

யார் நீங்க..? உங்க படம் பார்த்ததில்லையே.. மிஷ்கினை அடையாளம் தெரியாத தியேட்டர் முதலாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மிஷ்கின் சினிமா மீது கொண்டிருக்கும் அளவில்லாத காதல், சினிமா மீதான பெரும் வேட்கை மற்றும் மரியாதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பல பொது இடங்களில் அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் உண்மையான காதலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.

இயக்குநர் மிஷ்கின் தனது ‘பிசாசு 2’ படத்திற்காக திண்டுக்கல் மாநகர் பகுதியில் லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில், பல வருடங்களுக்கு முன்னர் தன் சிறு வயதில் தனது தந்தையுடன் சென்று திரைப்படங்கள் பார்த்த திரையரங்கை சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கிருந்த வயதான தியேட்டர் முதலாளி இயக்குநர் மிஷ்கினை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

யார் நீங்க..? உங்க படங்கள பார்த்ததில்லையே என தெரிவித்துள்ளார்.

இதில் தன் ஆணவம் உடைந்து போனதாக தெரிவித்தார் மிஷ்கின்.

பின்னர் தியேட்டரை பார்வையிட வந்ததை கேட்டு மகிழ்ந்து, மரியாதை நிமித்தமாக தியேட்டரை சுற்றி காட்டியதுடன், சில காட்சிகளை தியேட்டரில் திரையிட்டு காட்டினார்.

சிறு வயதில் கண்ட அதே உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் அக்காட்சிகளை கண்டு மகிழ்ந்தார் மிஷ்கின்.

தியேட்டர் முதலாளியின் மகன்களால் அவர் அடையாளம் கண்டுக்கொள்ளப்பட்டு அவர் வந்ததில் பெருமையடைந்து அவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் இந்த நேரத்தில் அந்த தியேட்டர் இன்னும் சில காலங்களில் இடிக்கப்படவுள்ள செய்தி கேட்டு மனம் வருந்தினார் மிஷ்கின்.

பிரபலங்கள் களத்தில் இறங்கி திரையரங்குகளை பார்வையிட்டு திரையரங்குகளுக்கு ரசிகர்களை கூட்டி வர வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த கடினமான காலத்தில் திரைப்படங்களுக்கு செய்யும் மிகப்பெரும் மரியாதையாக, பிரபலங்கள் ஒன்று சேர்ந்து திரையரங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். அது ஒன்றே இப்போதைய அவசிய தேவை” என்று அவர் நம்புகிறார்.

NVGP theatre

Director Mysskin emotional post about NVGP theatre

More Articles
Follows