முதன்முறையாக விஜய்க்காக தனுஷ் பாடிய சரக்கு பாட்டு

முதன்முறையாக விஜய்க்காக தனுஷ் பாடிய சரக்கு பாட்டு

dhanush new stillsநடிகர் தனுஷ், தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் பாடிக் கொடுப்பது வழக்கம்.

தற்போது தன் நண்பர் விஜய்யேசுதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படை வீரன் என்ற படத்திலும் ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதன்விவரம் வருமாறு….

EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது.

கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக் ராஜாவின் அருமையான டியூனிர்க்கு பிரியனின் வரிகளில் “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்தார் தனுஷ்.

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை.

இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் – சதீஷ் குமார், பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், ஒலிவடிவமைப்பு – S. சிவகுமார், நடனம் – விஜி சதீஷ், சண்டை காட்சிகள் – தில் தளபதி, STILLS – A. ராஜா, PRO – நிகில்.

Dhanush croon for Vijay Yesudas in Padai Veeran movie

dhanush aishu

விஜய்யின் மெர்சல் டைட்டில் பிரச்சினை; விஷால் முடிவு என்ன?

விஜய்யின் மெர்சல் டைட்டில் பிரச்சினை; விஷால் முடிவு என்ன?

vijay and vishalமெர்சல்’ படத்தலைப்பில் நிலவும் பிரச்சினை என்னவென்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தனது படத்தின் பெயரில் இருந்தே மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு வைத்துள்ளார். எனவே ‘மெர்சல்’ படத்தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று (செப்டம்பர் 22-ம் தேதி) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

‘மெர்சல்’ படத்தலைப்பில் உள்ள பிரச்சினை என்னவென்று, தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராஜேந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஏ.ராஜேந்திரன் என்கிற நான் ‘மெர்சலாயிட்டேன்’, ‘நான் மெர்சலாயிட்டேன்’ என இருபெயரில் திரைப்பட தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

மேலும், ‘மெர்சல்’ என இன்னொரு தலைப்பை பதிவு செய்ய முயலும் பொழுது ‘மெர்சல்’ எனது ‘மெர்சலாயிட்டேன்’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளதால் அது சேம்பர், கில்டு மூலமாகவோ ‘மெர்சல்’ என்கிற வார்த்தை பதிவு செய்ய முடியாது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி இல்லாமல் யாரும் பதிவு செய்ய முடியாது.

எனவே, மூன்று தலைப்பை பதிவு செய்ய வேண்டியதில்லை எல்லாமே ஒரே தலைப்புதான் என கூறினீர்கள். சேம்பர், கில்ட் என எல்லோரிடமும் NOC வாங்கி EC Memberகள் கையெழுத்திட்டு எங்களுக்கு தலைப்பை கொடுத்தீர்கள்.

தற்போது வரை எங்கள் திரைப்படத்தின் தலைப்பிற்காக நான் சந்தா தொகையை கட்டி வருகிறேன். அதன்படி இந்த தலைப்பை 27.01.2018 வரை எங்கள் நிறுவனத்திற்குத்தான் உரிமம் உண்டு.

தமிழ்நாடு திரைப்படம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த வாக்குறுதியை ‘மெர்சல்’ தலைப்பைக் கேட்டு நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் அவர்கள் 2016 ஆண்டு இந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்ய முயலும்பொழுது சேம்பரிலிருந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் NOC நிராகரிக்கப்பட்டது.

அதை எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இந்த தலைப்பு AR FILM FACTORY என்கிற நிறுவனத்திற்குத்தான் சொந்தம் என்று கூறியிருக்கிறீர்கள். எங்கள் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் ‘மெர்சல்’ தலைப்பை கொடுக்கவில்லை

நடிகர் விக்ரமின் ‘இருமுகன்’ படத்திற்காக ‘மெர்சல்’ தலைப்பைக் கேட்டபொழுது அப்பொழுதும் NOC தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கவில்லை. நிராகரிக்கப்பட்டது. நாங்களூம் கொடுக்கவில்லை நிராகரித்துவிட்டோம்.

தற்போது 20/06/2017 அன்று TSL நிறுவனம், விஜய் நாயகனாக நடிக்க இயக்குநர் அட்லீ ‘மெர்சல்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. சவுத் இந்தியன் சேம்பரில் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து NOC வாங்காமல் TSL நிறுவனம் ‘மெர்சல்’ என்கிற தலைப்பில் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக 21/06/2017 அன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று ஞானவேல்ராஜா அவர்களிடம் என்னுடைய பிரச்சனையை கூறி எங்கள் திரைப்படத்தின் எல்லா விவரங்களையும் ஒப்படைத்தேன்.

அதற்கு தயாரிப்பாளர் சங்கம் எனது புகாரை கொடுத்ததிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் தற்போதுவரை எனக்கு பதில் தரவில்லை. எங்களுக்கு இந்த புகாரின் பெயரில் இதுவரை தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று எழுத்துபூர்வமாக பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

TSL நிறுவனத்திற்கு தலைப்பு சம்பந்தமாக நாங்கள் NOC கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் தற்போது மீண்டும் ‘மெர்சல்’ தலைப்பில் 20.08.2017 அன்று பாடல்களை வெளியிடப்போவதாக எல்லா பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் ‘மெர்சல்’ என்கிற தலைப்பு வைத்தால், என்னுடைய படம் பாதிக்கப்படும் பெரும் பணம் முதலீடு செய்திருப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். தயாரிப்பாளர் சங்கம் சிறு தயாரிப்பாளர்களின் நியாயத்தை கேட்க வேண்டும்.

ராமசாமி என்கிற நபர் தங்களது சுயநலத்திற்காக சேம்பர் சங்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களா. தற்போது அவர் சேம்பரில் செயலாளராக உயர்பதவியில் இருக்கிறார்.

2016-ல் தியாகராஜனுக்கு தலைப்பைக் கொடுக்காத இதே சேம்பர் TSL தயாரிப்பாளர் ராமசாமி அவர்களுக்கு சேம்பர் தன்னிச்சையாக உரிமை கொடுத்திருக்கிறதா?

நான் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இருந்து சங்கத்திற்கு நேரில் வந்து புகார் கடிதம் கொடுத்தும் எனது திரைப்படத்தின் தக்க ஆவணங்களை கதிரேசன், ஞானவேல்ராஜா ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றேன்.

ஆயினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் ஒரு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினருக்கு சங்கத்திலிருந்து யாரும் குரல் எழுப்பவில்லை. தயாரிப்பாளர் சங்கம் இதுவரை TSL நிறுவனத்தின் மீது தன்னிச்சையாக செயல்பட்ட சேம்பர் மீதோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள். இதற்கு முன்பு இதுபோல் கில்டில், சேம்பரில் தலைப்பை பதிவு செய்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் நாங்கள் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக ஆகி ஒரு சிறிய முதலீட்டில் படத்தை துவங்கிய பட்சத்தில் 100 திரைப்படம் தயாரித்த பெரிய நிறுவனமான TSL நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் NOC பெறாமல் சேம்பரில் தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறது.

எங்களது சிறிய படைப்பை காப்பாற்றிக் கொள்ள உங்களைப் போல நியாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிற நீங்கள் எங்களைப் போல வளரும் நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்தப் புகாரை நியாயமான முறையில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….

‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி

‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி

shrutihaasan and disha pataniபாகுபலிக்கு இணையாக சங்கமித்ரா படத்தை எடுக்க தயாரானார் இயக்குனர் சுந்தர் சி.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

திரு ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிகிறார்.

உலகப்புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் இதற்கான பர்ஸ்ட் லுக் அறிமுகவிழாவும் நடைபெற்றது.

இதன்பின்னர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன்.

எனவே ஸ்ருதிக்கு பதிலாக ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் எப்போது.?

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் எப்போது.?

Mahesh Babu and Rajamouliமகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படம் நாளை மறுநாள் செப். 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு.

இதன்பின்னர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு 2018-ம் ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை மகேஷ்பாபுவும் ‘ஸ்பைடர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய்யுடன் மோத 2; சூர்யாவுடன் மோத 1; விஷால் போட்ட ப்ளான்

விஜய்யுடன் மோத 2; சூர்யாவுடன் மோத 1; விஷால் போட்ட ப்ளான்

vijay vishal suriya2017 தீபாவளி மற்றும் 2018 பொங்கல் தினங்களில் நிறைய படங்கள் வெளியாகவுள்ளன.

தற்போது தீபாவளி நெருங்குவதால் ஒவ்வொன்றாக அறிவிக்க தொடங்கிவிட்டனர்.

வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று விஜய் நடித்துள்ள மெர்சல் படம் கேரளா, ஆந்திரா மற்றும் உலகமெங்கும் ரிலீஸாகிறது.

அன்றைய தினம் விஷாலின் இரண்டு படங்கள் இந்த படத்துடன் மோதவுள்ளன.

துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு பதிப்பு டிடெக்டிவ் என்ற பெயரில் வெளியாகிறது.

மேலும் மோகன்லால் உடன் விஷால் இணைந்துள்ள வில்லன் என்ற மலையாள படம் கேரளாவில் வெளியாகிறது.

மேலும் 2018 பொங்கல் தினத்தில் (ஜனவரி 12) சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படமும் விஷால் நடித்துள்ள இரும்பு திரை என்ற படமும் மோதவுள்ளன.

பேய் இல்லை என்பதை நிரூபிக்க ராம்கி எடுத்த அவதாரம்

பேய் இல்லை என்பதை நிரூபிக்க ராம்கி எடுத்த அவதாரம்

Actor Ramki new movie titled English Padam releasing on Oct 6th 2017ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ், படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத்.

இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் கூறியதாவது…

இத்திரைப்படத்திற்கு இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.

இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார்.

அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட ,அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்கிறார்.

எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது.

அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம்.

இப்படம் ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும்.

இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். படத்தில் சிங்கம் புலி பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார் அவர் வரும் காட்சிகள் முழுவதும் பயங்கற அலப்பறையாக இருக்கும் என்றும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றும் கூறினார்.

Actor Ramki new movie titled English Padam releasing on Oct 6th 2017

More Articles
Follows