ரகிட ரகிட… தனுஷ் பிறந்தநாளுக்கு கர்ணன் & ஜகமே தந்திரம் ஸ்பெஷல்

ரகிட ரகிட… தனுஷ் பிறந்தநாளுக்கு கர்ணன் & ஜகமே தந்திரம் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அவரது ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷின் மற்றொரு படமான கர்ணன் பட டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வாளை பல கைகள் இணைந்து தூக்கி பிடித்துள்ளனர்.

“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என கர்ணன் பட டைரக்டர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, யோகி பாபு, நட்டி என்கிற நடராஜன், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று மாலை இப்படத்தின் மேக்கிங் வீடியோவம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோதிகா சூர்யா கார்த்தி படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து கொள்ளட்டும் – ரோகினி தியேட்டர் பன்னீர் செல்வம் பேட்டி

ஜோதிகா சூர்யா கார்த்தி படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து கொள்ளட்டும் – ரோகினி தியேட்டர் பன்னீர் செல்வம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panneer selvamவிமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வது என்று தான் இருக்க வேண்டும்.

இது போல் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதில் அல்ல.எங்களுக்கும் பெரியார் கொள்கைகள் உடன்பாடில்லை என்றாலும் நாங்கள் அது பற்றிப் பேசுவதில்லை .விமர்சிப்பதில்லை. உங்களுக்குக் கொள்கை எதுவாகவும் இருக்கலாம்.

ஆனால் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி பேச யாருக்கும் உரிமை கிடையாது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது.அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனம். வேலு பிரபாகரனுக்கு எதிராக நாங்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.

இதுபோன்று சுமார் 200 இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படிச் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வேலுபிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவருக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

அவரிடம் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது .

அப்போது பேசும்போது,

“கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது.

இதன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்து விட்டன.

விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத கொரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும் போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்? அரசு திரையரங்கங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம் .அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “என்றார்.

ஒட்டியில் திரைப்படம் வெளியாவது பற்றிக் கேட்டபோது,

“மக்கள் திரையரங்கம் சென்று படம் பார்க்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்குத் திருப்தி அளிக்கும். திரையரங்கத்தில் படம் பார்க்கும்போது வரும் திருப்தி வேறு எந்த தளத்திலும் கிடைக்காது .வேறு வழியில்லாமல் இப்போது ஓடிடியில் பார்க்கலாம்.

ஆனால் அதுவே ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல .திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் இரண்டாவது முறை வேண்டுமானாலும் ஓடிடியில் பார்க்கலாம். இதில் ஒரு முழு திருப்தி கிடைக்காது. ஓடிடியில் தமிழில் வெளியிடப்பட்ட இரண்டு படங்களும் தோல்வி அடைந்துள்ளன .

நெட்ப்ளிக்ஸில் வெளியான படங்களும் படுதோல்வி .தமிழில் மட்டுமல்ல இப்படி இந்தியில் வெளியான படங்களும் படுதோல்வி அடைந்து இருக்கின்றன .

திரையரங்கங்கள்தான் சினிமாவிற்கான ஒரே தளம் என்பது எல்லாருக்கும் தெரியும். மக்கள் ஓடிடியை ஆதரிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார்.

திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஓடிடி ஒரு வாய்ப்பாக இருக்கிறது என்று ஒரு பேச்சு இருக்கிறதே என்று கேட்டபோது ,

“சிறு படங்களுக்குத் திரையரங்கங்கள் கிடைப்பதில்லை என்று சொல்வது தவறான கருத்து. பல நாட்களாக இந்தப் பொய்யைச் சொல்லி வருகிறார்கள் .

இது மிகவும் தவறான கருத்து . சென்ற ஆண்டு வெளியான 240 படங்களில் 200 படங்கள் சிறு படங்கள்தான். தமிழ்நாட்டில் 1070 திரையரங்குகள்தான் உள்ளன.சென்ற ஆண்டு 240 தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன.

நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்குப் படங்கள் , நேரடி ஆங்கிலப் படங்கள், ஆங்கில டப்பிங் படங்கள், மலையாள, இந்திப் படங்கள் என்று வெளியாகி உள்ளன. இப்படியிருக்கும்போது திரையரங்கம் கிடைக்கவில்லை என்பது பொருத்தமில்லாத வாதம் தானே?

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக திரையரங்குகளை அதிகரிக்க வேண்டும். பெரிய திரையரங்குகளை இரண்டாகவோ மூன்றாகவோ மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சில ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்.

ஓடிடியில் வெளியிட்ட சிவகுமார் குடும்பத்துப் படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்ததாக பேசப்படுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற போது,

” ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது,எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படிச் செய்யும்போது நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று தான் சொன்னனோம்.

அப்போது அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த பிளாட்பாரத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை” என்று கூறினார்.

ரோகினி ஆர் .பன்னீர்செல்வம் தமிழ்நாடு வாணியர் சங்கம் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தமிழ்நாடு வாணியர் பேரவை நிர்வாகிகள் ஜி.மோகனசுந்தரம், யூரோ சரவணன், கல்யாணசேகரன், கே. ஞானசேகரன், பி. ஆனந்தன் , எம். சரவணகுமார் , வி.சோபன்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மோடி மீது நம்பிக்கை கொண்ட ரஜினியை பாஜக.வில் இணைப்பேன்.. – பிரமிட் நட்ராஜன்

மோடி மீது நம்பிக்கை கொண்ட ரஜினியை பாஜக.வில் இணைப்பேன்.. – பிரமிட் நட்ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pyramid Natarajanவட இந்திய பிரபலங்கள் பலர் பாஜக.வில் இணைந்து வருகின்றனர். அதுபோல் தென்னிந்தியாவிலும் பாஜக.வில் சில திரை பிரபலங்கள் இணைவதை பார்க்க முடிகிறது.

ராதாரவி, மதுவந்தி, கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜக.வில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன்.

அவரின் அண்மை பேட்டியில் ரஜினியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

‘பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரஜினிகாந்த்.

அவர் தமிழ்நாட்டு பாஜகவுக்கு தலைமையேற்க வேண்டும் என்று ரொம்ப வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

அவர் பாஜகவுக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பாஜக பலம் அதிகரிக்கும்.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், அவரை பாஜகவுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன்.

நான் பாஜகவில் இணைந்ததிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்”

இவ்வாறு தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் இறப்புக்கு முத்தம்.. சேகர் கபூர் கருத்து..; ரசூல் பூக்குட்டியும் பாலிவுட்டில் புறக்கணிப்பு

ஆஸ்கர் இறப்புக்கு முத்தம்.. சேகர் கபூர் கருத்து..; ரசூல் பூக்குட்டியும் பாலிவுட்டில் புறக்கணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

resul pookkuttyபாலிவுட் சினிமாவில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை கூறியிருந்தார் ஏஆர். ரஹ்மான்.

ஏஆர். ரகுமானுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனரான சேகர் கபூர்.. ‘உங்களுடைய பிரச்னை என்ன தெரியுமா? நீங்கள் ஆஸ்கர் விருது வாங்கிவிட்டீர்கள். பாலிவுட்டில் ஆஸ்கர் என்பது இறப்பை முத்தமிடுவது. இது, பாலிவுட் உங்களை கையாள்வதைவிட நீங்கள் திறமையானவர் என்பதை நிருபித்துள்ளது’ என ரகுமானுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, தன்னையும் பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அவரின் ட்விட்டர் பக்கத்தில் (சேகர் கபூரை டேக் செய்து) அவர் பதிவிட்டுள்ளதாவது..

“ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் என்னை விலக்கி வைத்தது. யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை.

சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்துக்கு நேராகவே, நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறினர்.

என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்.

என்னால் எளிதாக ஹாலிவுட்டுக்கு செல்ல முடியும். ஆனால் நான் செல்லவில்லை. போகவும் மாட்டேன்.

இந்தியாவில் பணியாற்றிதான் ஆஸ்கர் வென்றேன். அமெரிக்காவில் உள்ள மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றிருக்கிறேன்.

மற்றவர்களை விட எனது மக்கள் மீது, எனக்கு நம்பிக்கை உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

சாதனை படைத்த மகேஷ் பாபு ரசிகர்கள்..; நம்ம புள்ளீங்கோ என்ன செய்வாங்களோ..

சாதனை படைத்த மகேஷ் பாபு ரசிகர்கள்..; நம்ம புள்ளீங்கோ என்ன செய்வாங்களோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu birthday cdpதெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் பிரின்ஸ் என அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு.

இவர் ஏஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் தமிழ் படத்திலும் (இரு மொழி படம்) நடித்தார். ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியது.

இவரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 9ம் தேதி வர உள்ளது.

எனவே #MaheshBabuBdayCDP என்ற ‘காமன் டிபி’ ஒன்றை டிசைன் செய்து ட்விட்டரில் அவரது ரசிகர்கள் பகிர்ந்தனர்.

பதிவான 24 மணி நேரத்தில் அந்த ஹேஷ்டேக் மூலம் 31.1 மில்லியன் அதாவது 3 கோடியே 11 லட்சம் டுவீட்டுகளை எட்டியது.

இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர் மகேஷ்பாபு ரசிகர்கள்.

இதற்கு முன்பு பவன் கல்யாண் ரசிகர்கள் 27.3 மில்லியன், ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் 21.5 மில்லியன் சாதனை புரிந்ததை மகேஷ் பாபு ரசிகர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம புள்ளீங்கோ சும்மா இருப்பாங்களா.. இனி என்னென்ன சாதனைகளை உடைக்க போகிறார்களோ… பொறுத்திருந்து பார்ப்போம்..

‘சந்திரமுகி 2’ படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக ‘LUST STORIES’ நடிகை.?

‘சந்திரமுகி 2’ படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக ‘LUST STORIES’ நடிகை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chandramukhi 2பிரபு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் சாதனை படைத் படம் ‘சந்திரமுகி’.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.

தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது.

இதில் முதல் பாகத்தில் நடித்த ரஜினி, ஜோதிகா ஆகியோர் நடிக்கவில்லை.

ராகவா லாரன்ஸ் நடிக்க பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

இந்நிலையில், படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சனா பட ஹிந்தி ரீமேக்கை லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளவர்தான் இந்த கியாரா அத்வானி. இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

மேலும் அண்மையில் ஆன்லைனில் வெளியான லஸ்ட் ஸ்டோரி வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்று நடித்து ரசிகர்களை கிறங்கடித்தவர் கியாரா அத்வானி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows