காலா டீசர்; ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

காலா டீசர்; ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush apologies to Rajini fans for postpone of Kaala teaserரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டீசர் மார்ச் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அப்பட தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வந்த 2 மணி நேரத்திற்கு பிறகு காலா டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியாகாது. மார்ச் 2ஆம் தேதிதான் வெளியாகும் என அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது…

காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவரது மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக ‘காலா’ படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார் தனுஷ்.

மேலும் டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush apologies to Rajini fans for postpone of Kaala teaser

மும்பையில் ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

மும்பையில் ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srideviதுபாய் நாட்டில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அம்பானி அனுப்பிய தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.

இதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர், இறுதியஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.

அவரது உடல் போனி கபூருக்குச் சொந்தமான செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் காலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பொது மக்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் இரவு பகலாக வந்து காத்திருந்தர்.

பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் விஐபிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் 3 மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

கபூர் குடும்ப வழக்கத்தின்படி சேலை, பாரம்பரிய தங்க ஆபரணங்கள் மாலை அலங்காரத்துடன் ஸ்ரீதேவியின் பூத உடலை தாங்கி செல்லும் வாகனத்தை காண சாலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பிற்பகல் 4.30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இப்படியெல்லாமா படத்துக்கு டைட்டில் வைப்பாங்க… சிம்பு ஓபன் டாக்

இப்படியெல்லாமா படத்துக்கு டைட்டில் வைப்பாங்க… சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and azarஒரு தனியார் டிவியில் விஜேவாக அறிமுகமானவர் அசார்.

இவர் நாயகனாக நடித்து அண்மையில் வெளியான படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’.

தற்போது அந்தப் படத்தின் தலைப்பை பற்றியும் அதில் நடித்துள்ள அசார் குறித்தும் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது அந்த வீடியோ இணைங்களில் வைரலாகி வருகிறது.

அதில் சிம்பு கூறியதாவது… “ஏண்டா தலையில எண்ண வெக்கல இப்படியெல்லாமா ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பாங்கன்னு ஆச்சர்யப்பட்டேன்.

அந்தப் படத்தில் நடித்துள்ள அசாருக்கு என் வாழ்த்துகள்.

இளம் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை நான் அடையாளம் கண்டு பாராட்டுவேன். அது எனக்குப் பிடிக்கும்” என பேசியுள்ளார் சிம்பு.

காலா Vs தாதா; ரஜினியுடன் மோதும் கமல் அண்ணன் சாருஹாசன்

காலா Vs தாதா; ரஜினியுடன் மோதும் கமல் அண்ணன் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamal charuhassanகமல்ஹாசன் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள வரும் படம் ‘தாதா 87’.

நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா அவர்கள் சாருஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை காசிமேட்டில் நடைபெற்று வருகிறது.

லேண்டர் என்பவர் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலை சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில், பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வண்ணம் ‘வெண்மேகம்’ என்ற பாடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா, தமிழ் மற்றும் ஹிந்தியில் பாடியுள்ளார்.

படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீ இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை நாளை மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஏஆர் முருகதாஸ் வெளியிடவுள்ளார்.

இதே நாளில்தான் (மார்ச் 1) ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kaala and DhaDha 87 teaser clash on 1st March 2018

dhadha 87

பேரழகி ஐ.எஸ்.ஓ பர்ஸ்ட் லுக்கை டைரக்டர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட்டார்

பேரழகி ஐ.எஸ்.ஓ பர்ஸ்ட் லுக்கை டைரக்டர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

perazhagiகிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.

‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் ‘காளி’ நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்..

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடு விரைவில் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா ரசிகர்களுக்கு மார்ச் 5ல் செல்வராகவன் விருந்து

சூர்யா ரசிகர்களுக்கு மார்ச் 5ல் செல்வராகவன் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 36தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அண்மையில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இருவரும் நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5 ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தாண்டு 2018 தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு படக்குழு பணியாற்றி வருகிறது.

More Articles
Follows