தனுஷின் மூன்றாவது இந்திப்படம் குறித்த தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் கலக்கிய தனுஷை ராஞ்சனா என்ற இந்திப் படத்திற்காக பாலிவுட் அழைத்துச் சென்றார் இயக்குனர் ஆனந்த் எல். ராய்.

இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.

முதல் இந்திப்படம் வெற்றிப்பெறவே பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தார் தனுஷ்.

அதன்பின்னர் கோலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் 3வது இந்திப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம் தனுஷ்.

தற்போது ஷாரூக்கானின் இந்திப்படத்தை இயக்கி வரும் ஆனந்த் எல்.ராய் அடுத்த வருடம் 2018ல் தனுஷின் இந்திப் படத்தை தொடங்கவிருக்கிறாராம்.

Dhanush 3rd hindi movie updates

மாறுவோம் மாற்றுவோம்; சீனாவை வீழ்த்தி ஆரி செய்த கின்னஸ் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு, திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது.

இதில் சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ஜே.பி.ஆர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார்.

மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வு 2017 பேரை கொண்டு சீனா நடத்திய கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் சேர்ந்து நடத்தியது.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் கின்னஸ் சாதனை பெறவேண்டும் என்பது மட்டும் இல்லாமல், விவசாயத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக அமைந்தது.

Actor AAri made Guinness World Records by his Maaruvom Maatruvom

ஓணம் ரிலீஸில் நிவின்பாலியின் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேமம் படத்தில் நண்பர்களாகவே வாழ்ந்த நிவின் பாலியும் அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ள ‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா’ இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படம் வரும் ஓணம் பண்டிகை வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

கேரளாவை தாண்டியும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் நிவின் பாலியே இப்படத்தை தயாரித்துள்ளார்.

பெரும் வெற்றி பெற்ற ‘ஆக்ஷன் பிஜு’ படத்திற்கு பிறகு இவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

இப்படத்தின் டீசரும், ‘எந்தாவூ’ பாடலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். முன்னாள் பிரபல நடிகை ஷாந்தி கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் நடிப்பில் மீண்டும் பலவருடங்கள் கழித்து களமிறங்கியுள்ளார்.

இவரின் வருகையாலும் ‘ப்ரேமம்’ நடிகர்களின் கூட்டணியாலும் இந்த ஜனரஞ்சகமான குடும்பப்படம் அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Nivin Paulys Njandukalude Nattil Oridavela on Onam 2017 release

பாகுபலி2-க்கு அடுத்த இடத்தை பிடித்த விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் வசூலில் மோசம் இல்லை என தியேட்டர்கள் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையை சேர்ந்த ரோகினி தியேட்டர் நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

அதில்… இந்த 2017ஆம் ஆண்டில் பாகுபலி2 படத்திற்கு பிறகு எங்கள் தியேட்டரில் அதிக வசூல் செய்த படம் விவேகம்தான் என பதிவிட்டுள்ளனர்.

Nikilesh Surya‏ @NikileshSurya
#Vivegam now 2017’s second highest grosser as well as footfalls @RohiniSilverScr #ThalaRage

Vivegam is 2nd highest grosser after Baahubali2

விஜய்சேதுபதியுடன் சமந்தாவுக்கு முதன்முறை; காயத்ரிக்கு 6வது முறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து அநீதிக் கதைகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா.

இதில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒரு நல்ல கதையில் நடிப்பதால், இதில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறார்களாம்.

இந்நிலையில் மற்றொரு கேரக்டரில் நடிக்க காயத்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பே விஜய்சேதுபதியுடன் 5 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியுடன் சமந்தா நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

Gayathiri teams up with Vijay Sethupathi for sixth time in Aneethi Kathaigal

2வது முறையாக மோதும் விஜய்-கார்த்தி; அதே மேஜிக் நடக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகிறது.

இதே நாளில் இந்த படத்துடன் 3 படங்கள் வெளியாகும் என இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

1) கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம்
2) சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம்
3) அர்ஜீன் இயக்கி தயாரித்து அவரது மகள் நடித்துள்ள சொல்லிவிடவா

இந்நிலையில் இதே நாளில் சதுரங்கவேட்டை புகழ் வினோத் இயக்கி, கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் விஜய்யின் காவலன் மற்றும் கார்த்தியின் சிறுத்தை படங்கள் வெளியானது.

இவை இரண்டும் வெற்றிப்பெற்றது. அதே போன்ற வெற்றி மேஜிக் இந்தாண்டும் நடந்தால் சந்தோஷம்தானே. பொறுத்திருந்து பார்ப்போம்.

Mersal and Theeran Adhigaram Ondru clash on Diwali 2017

More Articles
Follows