சட்டம் என் கையில்..: கமல் டைட்டிலை எடுத்துக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்

சட்டம் என் கையில்..: கமல் டைட்டிலை எடுத்துக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டம் என் கையில்… கமல் டைட்டிலை எடுத்துக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்

மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான ‘கபாலி’-யில் ரஜினியின் மகளாக நடித்திருந்தவர் சாய் தன்ஷிகா.

இந்த படத்தில் ஆக்ஷனிலும் அவர் அசத்தியிருந்தார்.. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல படங்களில் ஆக்சன் வேடங்களே வந்தன. இந்த நிலையில் புதிய படத்திற்கு கமலின் சூப்பர் ஹிட் படமான சட்டம் என் கையில் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது..

கமல் – ஸ்ரீப்ரியா நடித்திருந்த இந்த படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இதே பெயரில் சாய் தன்சிகா நடிப்பில் புதிய படம் உருவாகியுள்ளது.

அது பற்றி விவரம் வருமாறு…

சாய் தன்ஷிகாவின் “சட்டம் என் கையில்”  ஜூன் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர்ஸ் பேனரில் சாய் தன்ஷிகா, அமித் திவாரி நடித்துள்ள படம் “சட்டம் என் கையில்” . இந்தப் படத்தை A.அபிராம் இயக்க, டி.ராஜேஸ்வர ராவ் தயாரித்துள்ளார்.

படம் கிராமத்து பின்னணியில் உருவானது. இந்த படத்தில் சாய் தன்ஷிகா இல்லத்தரசியாக நடிக்கிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் எம்.அபிராம் இயக்கியுள்ளார். கோடி இசை அமைத்துள்ளார்.

இசையும், பின்னணி இசையும் படத்துக்கு மிக பெரிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து ஜூன் 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும் என்றும் சாய் தன்ஷிகாவின் நடிப்பு படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் டி.ராஜேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தெலுங்கில் ‘அந்திம தீர்ப்பு” என்ற பெயரில் வெளியாகிறது.

Dhanshikas new movie titled Sattam En Kaiyil

DHONIMA.. ‘வணங்கான்’ பட நாயகியை வளைத்து போட்ட காளி வெங்கட்

DHONIMA.. ‘வணங்கான்’ பட நாயகியை வளைத்து போட்ட காளி வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DHONIMA.. ‘வணங்கான்’ பட நாயகியை வளைத்து போட்ட காளி வெங்கட்

*சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!*

சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது.

இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது.

தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார்.

இந்த தம்பதியின் மகன் கடுமையான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது.

இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும்.

காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

Learn and teach நிறுவனத்தின் சார்பில் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்து உள்ள ‘தோனிமா’ படத்தை ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கியுள்ளார். பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்பிஆர் ஸ்டுடியோஸ் எஸ்பி ராஜா சேதுபதி கைப்பற்றியுள்ளார்.

Kaali Venkat and Roshini Prakash starrer Dhonima

பிறக்காத உயிருக்காக ஏன் அழிவு.?. புதிய பிரபஞ்சத்தை அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’

பிறக்காத உயிருக்காக ஏன் அழிவு.?. புதிய பிரபஞ்சத்தை அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிறக்காத உயிருக்காக ஏன் அழிவு.. புதிய பிரபஞ்சத்தை அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’

தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் ‘கல்கி 2898 AD ‘ பட முன்னோட்டம்.. பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்துகொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில்…

” இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில்…

” இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது… குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்… 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி… அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்… இதை தடுக்க நினைக்கும் கும்பல் … புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்…‌ பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா… புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.

ரசிகர்களுக்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புஜ்ஜி எனும் வாகனம் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. பிரபாஸின் ஸ்டைலான தோற்றமும் .. ஆக்சன் பாணியிலான வசனங்களும்.. இது பிரபாஸின் படம் என்பதை அவரின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில் தயாராகி இருக்கிறது.

சுவாரசியமான கற்பனை கதை – சர்வதேச தரத்திலான படமாக்கம் – மாஸான காட்சிகள் – கண்களை இமைக்க மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான வி எஃப் எக்ஸ் காட்சிகள்- நட்சத்திர கலைஞர்களின் நேர்த்தியான மற்றும் வித்தியாசமான திரைத்தோன்றல் – மயக்கும் பின்னணி இசை… என ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதன் காரணமாகவே இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

அற்புதமான திரையரங்க அனுபவத்தை பெறுவதற்காக காத்திருக்கும் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ‘கல்கி 2898 ஏ டி ‘ படம் உருவாகி இருக்கிறது.‌

Kalki 2898 AD movie trailer trending

17 நாடுகளுக்கு பைக் டூர்.. உலக அனுபவத்தை வைத்து ‘பயமறியா பிரம்மை’ படத்தை ஓவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. – ‘கபாலி’ விஷ்வந்த்

17 நாடுகளுக்கு பைக் டூர்.. உலக அனுபவத்தை வைத்து ‘பயமறியா பிரம்மை’ படத்தை ஓவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. – ‘கபாலி’ விஷ்வந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் வெரோனிகா பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறேன்.‌ கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர்ரியலிசம் மற்றும் இருள் முகத்தைப் பற்றிய நிறைய கவிதைகளை எழுதி இருக்கிறேன். இதைப்போல் திரைப்படத்தில் பாடல்களை எழுதுவதற்கு வாய்ப்புகள் வந்ததில்லை. இதுதான் முதல் முறை. இயக்குநர் ராகுல் கபாலி மூலமாக இந்த வாய்ப்பு கிடைத்தது. இயக்குநருடனான முதல் சந்திப்பில்… ஒரு கொலை குற்றவாளி கதாபாத்திரம் கொலையை கலையாகப் பார்க்கிறது. இதன் பின்னணியில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார்.

ஊரில் என்னுடைய உறவினர் ஒருவர் ரவுடி. தற்போது அவர் உயிருடன் இல்லை. அவரை கொலை செய்து விட்டார்கள். என்னுடைய சிறிய வயதில் நடந்த இந்த சம்பவம் எனக்கு மனதில் ஆழமாக பதிந்தது. இந்த சம்பவத்தால் பெண்கள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டார்கள் என்று யோசித்தேன் அங்கிருந்து ஏதேனும் பாடல் வரிகள் கிடைக்கிறதா..! என யோசிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து கிடைத்த பாடல் தான் இந்தப் பாடல். இசையமைப்பாளர் கே உடன் பணியாற்றுவது எனக்கு சவுகரியமாக இருந்தது. மேலும் இந்த குழுவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் நந்தா பேசுகையில், ” இந்தப் படத்தின் இயக்குநர் ராகுலும் , நானும் பால்ய கால நண்பர்கள். இந்தப் படத்திற்கான விஷுவல் எப்படி இருக்க வேண்டும் என்பதனை திரைக்கதை எழுதும் போதே வடிவமைத்தோம். விண்டேஜ் லுக் வேண்டும் என்றால் அதற்கேற்ற வகையில் லென்ஸ், கேமரா போன்றவற்றை தேர்ந்தெடுத்தோம். திரைக்கதைக்கு என்ன தேவையோ.. அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த திட்டமிட்டோம். அதை மட்டுமே திரையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறோம்.‌ ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்த படைப்பு பிடிக்கும் என்று நம்புகிறோம். ஆதரவு தாருங்கள்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரவீண் பேசுகையில், ” நானும், இயக்குநரும் பால்ய கால சிநேகிதர்கள். பட்ஜெட்டை நிர்ணயித்து விட்டு, அதன் பிறகு திரைக்கதை எழுத சொன்னாலும் இயக்குநர் ராகுல் கபாலி அதைவிட அதிகமாகவே எழுதுவார். பயமறியா பிரம்மை படைப்பு சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.‌ இயக்குநர் ராகுல் கபாலி சிறந்த இயக்குநராக வருவார் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில், ” இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லலாம். 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இந்த படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதமே புதிதாக இருக்கும். அதை கேட்டு நடிக்கும்போது சற்று பதட்டமும் இருக்கும். இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் நடிக்க முடியுமா..! என தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. இதை கவனித்த இயக்குநர் உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சகோதரரை போல கொண்டாடினார்கள்.‌

இந்தப் படத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தை பார்த்து.. எப்படி இவரால் நடிக்க முடிகிறது என்று வியந்திருக்கிறேன். ‘மின்னல் முரளி’ படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து, நம்மால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரைப் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன் ” என்றார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில், ” இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டதற்கு இப்படத்தின் கதை தான் காரணம். இதனை இப்படத்தில் பாடல்கள், டீசர் ஆகியவற்றை காணும் போது உணர்ந்திருப்பீர்கள். வழக்கமான படங்களிலிருந்து இந்த திரைப்படம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற பரிசோதனை முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் புதிய புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியது.‌ இதற்காக இயக்குநரும், படக் குழுவினரும் எனக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார்கள். இயக்குநர் ராகுல் கபாலி அடிப்படையில் ஒரு ஓவியக் கலைஞர். அவருடைய ஓவிய அனுபவத்தை இத்திரைப்படத்தில் காட்சிகளாக செதுக்கியிருக்கிறார். இந்த படைப்பு அவரின் நேர்மையான.. உண்மையான.. முயற்சி.‌

இந்தப் படத்திற்கான இசை கோர்ப்பு பணிகளை இன்று காலையில் தான் நிறைவு செய்தேன். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. என்னுடைய பணியை ரசித்து செய்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றிய வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் ராகுல் கபாலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நான் தற்போது வேறு மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறேன். ” என்றார்.

நடிகர் விஸ்வாந்த் பேசுகையில், ” கபாலி படம் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்காக முதன் முதலில் அழைத்தவர் இயக்குநர் ராகுல் கபாலி. தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். அவர் அடிப்படையில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக் கலைஞர். அவருடைய அலுவலகம் முழுவதும் ஓவியங்களால் வண்ணமயமாக நிறைந்திருந்தது. படத்தின் திரைக்கதையை வாசிக்க கொடுத்தார்கள். வாசிக்கும்போதே இது ஒரு வழக்கமான தமிழ் படம் அல்ல என்பது தெரிந்தது. வாசித்து முடித்தவுடன் சின்னதாக டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள்.‌ அதை நான் இயல்பாக செய்தேன். உடனே இயக்குநர் ராகுல் கபாலி.. கபாலி படத்தில் உங்களது நடிப்பை பார்த்து தான் உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். அந்தப் படத்தில் தலைவருடன் கலகலப்பாக நடித்திருப்பீர்கள். அதேபோன்றதொரு நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கும் அவசியமாக தேவைப்படுகிறது என்றார்.

இந்தப் படத்தில் ஜெகதீஷ் என்ற முதன்மையான கதாபாத்திரத்துடன் என்னுடைய கதாபாத்திரம் இணைந்து பயணிக்கிறது. ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். அவர் ஒரு திறமையான நடிகர் என சொன்னார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான்.. அந்த திறமையான நடிகர் குரு சோமசுந்தரம் என தெரிய வந்தது. அவரைப் போன்ற ஒரு நடிப்பு ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்.

நான் பெரும்பாலும் நடிக்கும் காட்சிகளை முதல் அல்லது இரண்டாவது டேக்கில் ஓகே செய்து விடுவேன். இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.‌ முதல் ஷாட்டில் நடிக்கும்போது ஐந்தரை நிமிடத்திற்கு பிறகு இயக்குநர் கட் சொன்னார். அதன் பிறகு இந்த ஷாட் ஓகே என்று நினைத்தேன். குரு சோமசுந்தரம் மீண்டும் அந்த காட்சியை படமாக்கலாம் என்றார். அடுத்த டேக் ஆறரை நிமிடம் வரை சென்றது.‌ அதுவும் திருப்தி இல்லை. மீண்டும் அடுத்த டேக்.. இந்த முறை எட்டு நிமிடம் வரை சென்றது. திருப்தியில்லை. அடுத்த டேக்கும் ஒன்பதரை நிமிடம் வரை நீடித்தது. அதிலும் திருப்தியில்லை.‌ அதன் பிறகு அன்று மாலையில் தொடர்ச்சியாக பதினைந்து நிமிடம் வரை அந்த டேக் சென்றது. அதுதான் இயக்குநருக்கு திருப்தி அளித்தது. சிங்கிள் டேக்கில் நானும் குரு சோமசுந்தரமும் நடித்திருக்கிறோம். இதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அளவிற்கு காட்சிகளை தெளிவாக திட்டமிட்டு இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். இதனை நீங்கள் திரையில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக இருக்கும். சர்வதேச தரத்திலான இந்த முயற்சியை படக்குழுவினர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.‌

இயக்குநர் ராகுல் கபாலியை பற்றி ஒரு சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவர் இதுவரை பதினேழு நாடுகளுக்கு டூவீலரில் பயணித்திருக்கிறார்.‌ உலகம் முழுவதும் சுற்றி கிடைத்த அனுபவத்தை கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். ஓவியத்தைப் போல நேர்த்தியாக உருவாக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ” என்றார்.

நடிகை சாய் பிரியங்கா ரூத் பேசுகையில், ” ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் ‘பயமறியா பிரம்மை’ எனும் படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தின் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தை பற்றியும் முதல் நாள் விரிவாக விவரித்தார்கள். அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடித்துவிட்டு வந்து விட்டேன். ஆனால் பட குழுவினர் அனைவரும் பெருந்தன்மையுடன் பழகினர். இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இது போன்ற புதிய முயற்சிகளை இந்த படக்குழு தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதிலும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ” என்றார்.

நடிகர் வினோத் சாகர் பேசுகையில், ” பயமறியா பிரம்மை படத்தைப் பொறுத்தவரை நான் திடீர் மாப்பிள்ளை.‌ ஒரு நாள் இரவு பதினோரு மணி அளவில் ‘ராட்சசன்’ படத்தில் பணியாற்றய கீர்த்தி வாசன் எனும் நண்பர் போன் செய்து, இயக்குநர் ராகுல் கபாலி உன்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னார். இயக்குநர் ராகுல் கபாலி பேசிவிட்டு, நாளை காலையில் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தளத்திற்கு நேராக வந்து விடுங்கள் என்றார். நானும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இயக்குநரை சந்தித்து அவர் அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள். திறமையான தொழில்நுட்ப குழுவினர் இதில் பணியாற்றியிருக்கிறார்கள். நீளமான காட்சிகள் அதிகம் இருக்கிறது. இதில் நடிகர்கள் பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்” என்றார்.

நாயகன் ஜேடி பேசுகையில், ” இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஓராண்டாக இதற்கான முன் தயாரிப்புகளில் நானும், இயக்குநர் ராகுலும் ஈடுபட்டோம். அதற்கு முன்னதாக ஒரு குறும்படத்தை உருவாக்கினோம். அதுவும் பரிசோதனை முயற்சி தான். அதில் தான் நானும், ராகுலும் அறிமுகமாகி நண்பர்களானோம். அதன் பிறகு கதைகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். அதன் பிறகு ‘பயமறியா பிரம்மை’ படத்தை பற்றி பேசி பேசி இன்று படத்தை நிறைவு செய்து இருக்கிறோம். படத்தை விரைவில் வெளியிடுகிறோம். ஊடகம் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவையும் வரவேற்பையும் பொறுத்துதான் எங்களது அடுத்த கட்ட முயற்சி இருக்கும். நன்றி ” என்றார்.

இயக்குநர் ராகுல் கபாலி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும் .. இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை. குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து..‌ எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து.. ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவரையும் உணர்வு ரீதியாக பெரிய அளவில் தொல்லைக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள்.

இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும். வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம்.. எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால்… ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

போலீஸ் என்றதும் முறுக்கிக்கிட்டு வந்தேன்.. ஆனா நடந்தது வேற.. – ‘லாந்தர்’ விதார்த்

போலீஸ் என்றதும் முறுக்கிக்கிட்டு வந்தேன்.. ஆனா நடந்தது வேற.. – ‘லாந்தர்’ விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போலீஸ் என்றதும் முறுக்கிக்கிட்டு வந்தேன்.. ஆனா நடந்தது வேற.. – ‘லாந்தர்’ விதார்த்

விதார்த் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ விஷ்ணு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ”எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், படக் குழுவினருக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. எம் சினிமா புரொடக்ஷன் எனும் பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி, முதல் தயாரிப்பாக ‘லாந்தர்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் ஜூன் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன் பேசுகையில், ”சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பள்ளியில் மாணவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். மாணவர்கள் முன்னிலையில் என்னை மேடையேற்றி பாடுமாறு ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் பாட முடியவில்லை.‌ அப்போது அந்த ஆசிரியர், ‘இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நீ நன்றாக பாடுவாய்’ என ஊக்கமளித்துவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் எனக்கு அது மிகப் பெரிய தோல்வியாக மனதில் பட்டது. மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழுவதும் பயிற்சி அளித்தார்கள். மேடை ஏறி ஒரு வரியை கூட பாடாமல் இறங்கி விட்டேன்.‌ இதனால் எனக்கும், இசைக்கும் தொடர்பே இல்லை என நினைத்து விட்டேன்.

சிறிது நாள் கழித்து நான் விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு ஒருவர் பழைய ஹார்மோனிய இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து இசைக்கிறாயா என கேட்டார். இல்லை எனக்கும், இசைக்கும் வெகு தூரம் என்று சொல்லிவிட்டு, அவர் வாசிப்பதை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன். அவர் சிறிது நேரம் வாசித்து விட்டு வெளியே சென்று விட்டார்.‌ அப்போது ஹார்மோனியத்தை வாசித்துப் பார்க்கலாமே என வாசிக்க தொடங்கினேன். அருகில் இருக்கும் ஆலயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்தி பாடலுக்கு ஏற்ப என்னுடைய கைவிரல்கள் தானாகவே ஹார்மோனியத்தில் வாசிக்கத் தொடங்கின.

ஒரு புள்ளியில் தான் நான் அதனை கவனித்தேன், எனக்கும் இசை வருமென்று உணர்ந்தேன்.‌ பாடல்களைக் கேட்டு வாசிக்க முடியும் என நம்பினேன். அப்போதுதான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. என்னுடைய பெற்றோர்கள், ‘இசையை கற்றுக்கொள். ஆனால் ஒருபோதும் படிப்பை கைவிடாதே’ என்றனர்.

கல்லூரி படிப்பை நிறைவு செய்தவுடன், இசையில் ஏதாவது சாதிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் பாடலாசிரியர் தேவாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கத் தொடங்கினோம். பிறகு திரைப்பட இயக்குநர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க தொடங்கினோம்.

ஒரு நாள் ‘ராட்சசன்’ பட வெளியீட்டின் போது இயக்குநர் ஷாஜி சலீமை சந்தித்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது, முதலில் எங்களது பாடல்களை கேட்டார். ஒரு பாடலை திரும்பத் திரும்பக் கேட்டார் அப்போது ‘இந்த இடம் நன்றாக இருக்கிறது. இந்த வரி நன்றாக இருக்கிறது’ என தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருந்தார். ஒரு கலைஞருக்கு பாராட்டு தான் சிறப்பாக இயங்க வைப்பதற்கான எனர்ஜி.

அதன் பிறகு நிறைய பாடல்களை நானும், தேவாவும் இணைந்து உருவாக்கினோம். எல்லா பாடல்களையும் இயக்குநர் ஷாஜி சலீம் கேட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்.

ஆறு வருட தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் ‘லாந்தர்’ படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். இந்தப் படத்திற்கான முதல் பாடலை இசையமைத்து அவரிடம் வழங்கிய போது, அதைக் கேட்டு அவர் மெலிதாக புன்னகைத்தவுடன் வெற்றி பெற்று விட்டோம் என்ற எண்ணம் எங்களுக்குள் ஏற்பட்டது.‌

அதன் பிறகு இந்த படத்திற்காக நான்கு பாடல்களை உருவாக்கினோம். ஒவ்வொரு பாடலின் போதும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

படத்தின் இசைக்கு சிறப்பாக உதவியவர் ஸ்ரீ விஷ்ணு.‌ அவர் வழங்கிய சின்ன சின்ன ஆலோசனைகள் படத்தின் பாடல்கள் சிறப்பாக வருவதற்கு பேருதவி புரிந்தன. இதற்காக இந்த தருணத்தில் அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

படத்தின் நாயகி ஸ்வேதா டோரத்தி பேசுவையில், ”லாந்தர் என்பது இரவின் அடையாளம். இந்தப் படம் எனக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.‌ இதற்காகவே படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எம் சினிமாஸ் பட நிறுவனம் போல் ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி..படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கண்ணசைவுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் இயங்குவார். அந்த அளவிற்கு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது.

படத்தின் இசையமைப்பாளரான பிரவீனின் பாடல்களுக்கு நான் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். தூய தமிழில் பாடல்களை வழங்கியதற்காக பாடலாசிரியர்கள் தேவா மற்றும் உமாதேவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில்…

”படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இது முதல் படம். அதனால் தங்களது இந்த படைப்பை உயிரைக் கொடுத்து உருவாக்கி இருப்பார்கள். தயாரிப்பாளருக்கும் இது முதல் திரைப்படம் என்பதால் அவரும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார்.‌ இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது முயற்சி எனக்கு வியப்பை அளித்தது. அவரிடம் யாராவது அரை மணி நேரம் பேசினால் போதும், அவரிடம் அவ்வளவு கதைகள் உள்ளன.‌ வித்தியாசமான கதாபாத்திரங்களை பற்றியும், கதைக்கு தேவையான விஷயங்களை பற்றியும் விரிவாக சொல்வார்.

நடிகர் விதார்த்திற்கு நன்றி. அறிமுகமற்ற படைப்பாளிகளை கூட, அவர்களுடைய உணர்வுகளை மதித்து கதையைக் கேட்டு, மிக எளிமையாக பழகும் நபர் அவர். அதனால் அவருடன் இன்று வரை ஒரு நல்ல நட்பு தொடர்கிறது,” என்றார்.

நாயகன் விதார்த் பேசுகையில்…

”நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்கள். இந்த திரைப்படத்தின் மூலம் அவர்களின் திறமை வெளியே தெரியும்.‌

பாடலாசிரியர் தேவாவிற்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நான் ஏராளமான தயாரிப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பத்ரி போன்ற ஒரு தன்னடக்கம் மிகுந்த மனிதரை சந்தித்ததில்லை.‌ பார்ப்பதற்கு எளிமையான மனிதராக இருந்தாலும் அவர் பெரிய ஆள்.

இவரிடம் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான். சினிமா மீது இவர் வைத்திருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இவர் வெற்றி பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.‌ ஏனெனில் இவர் ‘லாந்தர்’ படத்தின் மூலம் வெற்றியை பெற்றால் தொடர்ந்து படங்களை தயாரிப்பார்,” என்றார்.

இயக்குநர் ஷாஜீ சலீம் பேசுகையில்…

”என்னுடைய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.‌ ஏனெனில் நான் சொன்ன கதையை நம்பி முதலீடு செய்து எந்த தடங்கலும் இல்லாமல் படத்தின் பணியை நிறைவு செய்திருக்கிறார்.‌ அவருடன் பழகிய இந்த ஒரு வருடத்தில் தான் என்னுடைய பேங்க் பேலன்ஸ் ஏறி இருக்கிறது.‌

பணத்தை கேட்பதற்கு முன்பே என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி விடுவார். என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக் குழுவினர் மீதும் அவருடைய அக்கறையான அரவணைப்பு இருந்தது.‌

என்னுடைய தந்தையார் கே. எல். முகமது ஷெரிப் என்னுடைய சிறிய வயதில் நாவல்களை வாங்கி தந்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதன் பிறகு வாசித்த கதைகளை சொல்லச் சொல்லி கேட்பார்.‌ அதன் பிறகு சில கதைகளை எழுதச் சொல்லி பயிற்சியும் தந்திருக்கிறார். அவர் இன்று இல்லை என்றாலும் அன்று அவர் அளித்த பயிற்சிதான் இன்று என்னை மேடையேற்றி இருக்கிறது.

நான் திரைத்துறையில் வாய்ப்பு தேடுவதற்கு முன் என் மாமியாரிடம் தான் அனுமதி கேட்டேன். ஏனெனில் எனக்கென்று ஒரு குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, திரைத் துறையில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன்.

அந்த தருணத்தில் ‘உங்களால் வெற்றி பெற முடியும். நீங்கள் சென்று வாருங்கள். நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவர் உறுதிமொழி அளித்தார். அவர் தாயாக இருந்து குடும்பத்தை பாதுகாத்ததால் தான் என்னால் திரைத்துறையில் பணியாற்ற முடிந்தது.

இதனைத் தொடர்ந்து என்னுடைய மனைவி சஜிதா பானு. மற்றவர்கள் செய்த உதவியை வேறு எந்த வகையிலாவது அவர்களுக்கு என்னால் பதிலுக்கு செய்திட இயலும். ஆனால் எனக்காக என்னுடைய மனைவி பதினைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையை தியாகம் செய்தார். அதை எந்த வகையிலும் என்னால் திருப்பித் தர இயலாது. இனிமேல் அவர்களை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.‌ இவர் இல்லையென்றால் இன்று நான் மேடையில் ஏறி பேசியிருக்க இயலாது.

இத்திரைப்படத்தை இருபத்தி மூன்று நாட்களில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு கடுமையாக உழைத்தவர்கள் என்னுடைய உதவி இயக்குநர்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் அல்ல. உதவிய இயக்குநர்கள். இவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு முதல் தற்போது வரை உதவிக் கொண்டிருக்கும் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.

படத்தின் இசையமைப்பாளரான பிரவீன் எங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். பாடல்களையும், பின்னணி இசையும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு விதார்த் போன்றதொரு அனுபவம் வாய்ந்த நடிகர் கிடைத்துவிட்டால் ஐம்பது சதவீத சுமை குறைந்து விடும். ஏனெனில் கதை சொல்லும் போதே அவர் தனக்கான பங்களிப்பை தீர்மானித்து விடுவார். அவரிடம் படபிடிப்பு தளத்தில் காட்சிகளையும், வசனங்களையும் விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நம்பகத்தன்மையுடன் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்.

இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சில வரிகளில் தான் விவரித்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் எதிர்பார்த்ததை விட அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு வருகை தந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் வியந்து விட்டேன்.‌ இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Vidharth speech at Laandhar movie trailer launch

ஒரு பக்கம் கமல் – ரஜினி – அஜித்.; மறுபக்கம் அனுபமா-வுக்கு லைக்கா போட்ட ‘லாக்டவுன்’

ஒரு பக்கம் கமல் – ரஜினி – அஜித்.; மறுபக்கம் அனுபமா-வுக்கு லைக்கா போட்ட ‘லாக்டவுன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் கமல் – ரஜினி – அஜித்.; மறுபக்கம் அனுபமா-வுக்கு லைக்கா போட்ட ‘லாக்டவுன்’

*லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம் “லாக்டவுன்”*

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களுடன், பல தரமான திரைப்படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் “லாக்டவுன்” படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

புதுமையான திரைக்கதையில் லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும், ஒரு அழகான படைப்பாக உருவாகும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் A R ஜீவா இயக்குகிறார்.

“பிரேமம்” படம் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது தில்லு ஸ்கொயர் படம் மூலம், தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

N.R.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோரின் மயக்கும் இசையுடன், K.A.சக்திவேலின் அசத்தலான ஒளிப்பதிவில், “லாக்டவுன்” ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Anupama starring Lockdown produced by Lyca

More Articles
Follows