தனஞ்ஜெயன் மகள் திருமணம்.; திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்த சிவகுமார்

தனஞ்ஜெயன் மகள் திருமணம்.; திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்த சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார்.

தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார்.

G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில் முடித்துவிட்டு அங்கே தற்போது முன்னனி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

இரண்டு மகள்களது திருமணமும் இந்த வருடம் நவம்பர் – டிசம்பர் என ஒரு மாத இடைவெளியில் குடும்பத்தினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

G. தனஞ்ஜெயன் அவரது மூத்த மகளான ரேவதியின் திருமணம் நவம்பர் 20, 2022 அன்று அபிஷேக் குமாருடன் அம்பத்தூரில் உள்ள PSB கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது.

இதில் தமிழ் சினிமாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பிரபல பேச்சாளருமான சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார்.

*திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்:*

*முன்னணி தயாரிப்பாளர்கள்:*
கலைப்புலி எஸ். தாணு, ‘சூப்பர் குட்’ ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்புசெழியன், அபிராமி ராமநாதன், டி.ஜி. தியாகராஜன், பிரமிட் நடராஜன், T. சிவா, K.E. ஞானவேல்ராஜா, PL. தேனப்பன், புஷ்பா கந்தசாமி, கதிரேசன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்‌ஷ்மணன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கமல்போஹ்ரா, பி. பிரதீப் மற்றும் பலர்.

*முன்னணி இயக்குநர்கள்*:

கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், ‘சிறுத்தை’ சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனு ராமசாமி, மோகன் ராஜா ஃ லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதாமோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், கருணாகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, அருண் வைத்யநாதன், பாலஜி குமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா, கவுரவ் நாராயணன், ஆர். கண்ணன், மிலிந்த் ராவ், ஆண்ட்ரூ லூயிஸ், கேபிள் சங்கர் மற்றும் பலர்.

*முன்னணி நடிகர்கள்:*

விஜய் ஆண்டனி, கெளதம் கார்த்திக், சிபி சத்யராஜ், மனோபாலா, சுஹாசினி, ரோகினி, லிசி, பிரசன்னா, சிநேகா, ஆர்.கே. சுரேஷ், சச்சு, தியாகராஜன், பிரசாந்த், நகுல், சதீஷ், கணேஷ் வெங்கட்ராம், குட்டி பத்மினி, விதார்த், நட்டி, பஞ்சு சுப்பு, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சிதார்த்தா சங்கர், அஷ்வின் காக்குமனு, கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ், சுரேஷ் ரவி, VJ ரம்யா, விச்சு மற்றும் பலர்.

இவர்கள் மட்டுமல்லாது, ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பாடகர்கள் என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூடி திருமண நிகழ்வில் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறினர்.

அஜித்தின் வெறித்தனமான கேரக்டர் பெயரை டைட்டிலாக்கிய யோகி பாபு

அஜித்தின் வெறித்தனமான கேரக்டர் பெயரை டைட்டிலாக்கிய யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’ படத்தில் அவரது கேரக்டர் பெயர் ‘தூக்குத்துரை’.

தற்போது இந்த கேரக்டர் பெயரை புதிய படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர்.

இந்த படத்தில் யோகிபாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், செண்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா, வெற்றி பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மூன்று விதமான காலகட்டங்களில் படத்தின் கதை நகர்வதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இணையங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இதோ..

இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத்,

ஒளிப்பதிவு: ரவி வர்மா.கே,

இசை – கே.எஸ்.மனோஜ்,

படத் தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத், கலை இயக்கம் – ஜெய்முருகன், பாக்கியராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – மான்ஸர் முகேஷ், ராம்குமார், பாடல்கள் – அறிவு, மோகன்ராஜன், நடனப் பயிற்சி இயக்கம் – ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர் – நிவேதா ஜோசப், உடைகள் – பாலாஜி, ஒப்பனை: ஏ.பி.முகமது, Effects & Logics (VFX): அரவிந்த்,

நடிகர்கள் தேர்வு (Casting): ஸ்வப்னா ராஜேஷ்வரி, படங்கள்: சாய் சந்தோஷ்,

தயாரிப்பு மேலாளர்: மனோஜ் குமார், தயாரிப்பு நிர்வாகி: பாலாஜி பாபு.எஸ், நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெயசீலன், பத்திரிகை தொடர்பு – டீம் D’One,

விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ், இணை-தயாரிப்பு : வினோத் குமார் தங்கராஜூ.

மீண்டும் அஜித் – விஜய்யை இயக்குவது எப்போ.? SJ. சூர்யாவின் ஆச்சர்ய பதில்

மீண்டும் அஜித் – விஜய்யை இயக்குவது எப்போ.? SJ. சூர்யாவின் ஆச்சர்ய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ படத்தை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ்.

இவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘வதந்தி’. வெப் தொடராக உருவாகியுள்ள இதில் எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.

அவருடன் பாலிவுட் நடிகை சஞ்சனா ஸ்மிருதி வெங்கட் லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொலைகாரன் படத்திற்கு இசையமைத்த சைமன் கிங் என்பவர் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இந்த வெப் தொடரை தயாரித்துள்ளனர்.

டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் பட குழுவினர் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தனர்.

அப்போது எஸ்.ஜே சூர்யாவிடம் செய்தியாளர்கள் அஜித் மற்றும் விஜய் மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டோம்.

அப்போது அவர்..” என்னையே என்னால் இயக்க முடியாமல் நான் இருக்கிறேன். தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகள் வருவதால் நடித்து கொண்டிருப்பதால் படங்களை இயக்க முடியவில்லை.” என்றார் சூர்யா

விவாகரத்து வதந்திகளுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் கண்டனம்

விவாகரத்து வதந்திகளுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீகாந்த் சமீபத்தில் ‘இதே மா கதை’ போன்ற படங்களில் நடித்தார்.

அவரும் மனைவி ஓஹாவும் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று வதந்தி பரவியது.

இந்த வதந்தியை ‘பெல்லி சண்டாடி’ நடிகர் கடுமையாக மறுத்துள்ளார்.

ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவர் கடுமையாக சாடினார்.

“சில மலிவான வலைத்தளங்கள் மற்றும் பயனற்ற யூடியூப் சேனல்களால் நான் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

இதுபோன்ற முட்டாள்தனமான வதந்திகளை உருவாக்குவது யார்?” என்று கேட்டார் ஸ்ரீகாந்த்.

‘வால்டேர் வீரய்யா’: ப்ரோமோ காட்சி வெளியீடு !

‘வால்டேர் வீரய்யா’: ப்ரோமோ காட்சி வெளியீடு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ‘பாஸ் பார்ட்டி’யின் ப்ரோமோ வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ப்ரோமோவில் சுருக்கமாகவும் ஸ்டைலாகவும் நுழைந்த சிரஞ்சீவி மீது படமாக்கப்பட்டது, ஐட்டம் பாடலில் ஊர்வசி ரவுத்தேலாவும் இடம்பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அழகான சாதாரண மொழியைப் பயன்படுத்தி பாடலுக்கு மெகா அறிமுகம் கொடுத்துள்ளார். இந்த சாதாரணம் தான் எல்லா மந்திரங்களையும் செய்கிறது. டிஎஸ்பியின் பாடல் வரிகள் எப்பொழுதும் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

புதன்கிழமை மாலை 4:05 மணிக்கு லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்படும்.

ஹிருத்திக் ரோஷன் தனது இளம் காதலிக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு

ஹிருத்திக் ரோஷன் தனது இளம் காதலிக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மும்பையில் ஜூஹு-வெர்சோவா இணைப்புச் சாலைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடிகளில் பரந்து விரிந்திருக்கும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரித்திக் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவு செய்தார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 38,000 சதுர அடியில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தனது காதலிக்கு பரிசளித்ததாக சொல்லப்படுகிறது.

செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டிய, ஹிருத்திக் “இதில் எந்த உண்மையும் இல்லை.

ஒரு பொது நபராக, நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் தவறான தகவல்களைத் தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows