தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி 30 வயதில் மரணம்

தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி 30 வயதில் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhaayam director Kannan Rangasamy 30 age passed away

‘தாயம்’ படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் இன்று காலமானார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான தாயம் என்ற தமிழ் திரைப் படத்தை இயக்கியவர் கண்ணன் ரங்கசாமி. இவருக்கு வயது 30.

இன்னும் திருமணம் ஆகவில்லை. இளம் வயதிலேயே இயக்குனராகியுள்ளார் இவர்.

இவர் கடந்த மாதம் மாரடைப்பு எற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

15 நாட்கள் கோமாவில் இருந்து நினைவு திரும்பியது. 40 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Dhaayam director Kannan Rangasamy 30 age passed away due to heart attack

நிவின்பாலி-நட்ராஜ் இணைந்துள்ள ரிச்சி பட ரிலீஸ் தேதி

நிவின்பாலி-நட்ராஜ் இணைந்துள்ள ரிச்சி பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivinpauly and Natty starring movie Richie release date is hereகன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி.

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ‘ரிச்சி’ என தலைப்பிட்டுள்ளனர்.

முக்கிய வேடத்தில் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ்பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளர்.
இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்து தணிக்கைக்கு தயாராகி வருகிறது.

தற்போது டிசம்பர் 1-ம் தேதி ‘ரிச்சி’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் கூறியதாவது…

“தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும்.

தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி’ என்றார்.

Nivinpauly and Natty starring movie Richie release date is here

ஹார்வேர்டு பல்கலை. தமிழ் இருக்கை; ஏஆர்.ரஹ்மான்-விஷால் நிதியுதவி

ஹார்வேர்டு பல்கலை. தமிழ் இருக்கை; ஏஆர்.ரஹ்மான்-விஷால் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman and Vishal donates for Tamil Chair at Harvard Universityஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இது தொடர்பான விழிப்புணர்வை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழக இளைஞர்களிடையே உருவாக்கி வருகிறார்.
ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற வேண்டும் ‘தமிழானோம்…’ என்ற பாடலை உருவாக்கியிருந்தார்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை சந்தித்து பேசினார் ஜி.வி.பிரகாஷ்.

‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய தமிழரோடு இனிய சந்திப்பு. ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஒன்றாக இணைவதில் பெருமை எனவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் தமிழக அரசு ரூ. 10 கோடியை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் பங்களிப்பாக 25 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார்.

“இது ஒரு சிறு பங்களிப்புதான். ஆனால் உலகத் தமிழர்கள் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்,” என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்.

தற்போது இவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் தன் பங்களிப்பாக ரூ. 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன் என அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன.

ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது.

தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!

தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது.

எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். என விஷால் தெரிவித்துள்ளார்.

AR Rahman and Vishal donates for Tamil Chair at Harvard University

அரசியலில் ரஜினி நிச்சயம் ஜெயிப்பார்; தகுதிகள் சொல்லும் எஸ்வி.சேகர்

அரசியலில் ரஜினி நிச்சயம் ஜெயிப்பார்; தகுதிகள் சொல்லும் எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sv shekarமிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்தும் எஸ்வி. சேகரும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது அரசியலில் எஸ்வி. சேகர் அவர்கள் தீவிரம் காட்டி வந்தாலும் அவ்வப்போது மேடை நாடகம் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது நீண்ட கால நண்பரான ரஜினிகாந்த் பற்றியும் அவரின் அரசியல் தகுதிகள் குறித்தும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருமுன் கற்றுக் கொள்ள நிறைய குணங்கள் ரஜினியிடம் உள்ளது என்றும் அவர் அரசியலில் நிச்சயம் ஜெயிப்பார் என பதிவிட்டுள்ளார்.

S.VE.SHEKHER‏ @SVESHEKHER

சினிமாtoஅரசியல் வருமுன் #RAJINIயிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை.நிதானம்,பொறுமை,சிறிய அறிக்கைகள்,தேவையின்றி வீராப்பான எதிர்ப்புஅவர் ஜெயிப்பார்.

Rajini will sure win in politics says SVe Shekar

ட்விட்டர் தளம் டூ அரசியல் களம்; மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கமல்

ட்விட்டர் தளம் டூ அரசியல் களம்; மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanஅண்மைக்காலமாக ட்விட்டரில் அரசியல் குறித்த பதிவுகளை அதிரடியாக பதிவிட்டு வந்தார் கமல்ஹாசன்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர், ட்விட்டர் தளத்தை விட்டு அரசியல் களத்திற்கு வந்து பணியாற்ற சவால் விட்டனர்.

இதனையடுத்து இன்று அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

அதன் விவரம் வருமாறு….

கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டதை நாம் நேற்று வடசென்னைக்கு ஆபத்து என்ற பெயரில் பார்த்தோம்.

இந்நிலையில் இன்று அதிகாலை எண்ணூர் துறைமுகப் பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்தா ஜெயராமனும் கமல்ஹாசனுடன் சென்று பாதிப்புகள் குறித்து விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ட்விட்டரில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) October 28, 2017

மீண்டும் தன் வேலையை தொடங்கிய வேலைக்காரன்

மீண்டும் தன் வேலையை தொடங்கிய வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி பிரச்சினைகளால் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இதன் ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதுநாள் வரை பணியாற்றிய படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனை மாற்றி எடிட்டராக ரூபனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.

After some issues Velaikkaran shooting starts at Rajasthan

More Articles
Follows