கௌதம் கார்த்திக் – மஞ்சிமா இணையும் *தேவராட்டம்* பட தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கி வரும் படம் ‘தேவராட்டம்’.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் இது.

கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது.

தற்போது மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்களைப் போல் இப்படமும் கிராமத்து பின்னணி கதை தான்.

இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.

முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார் சிம்ரன்; டேராடூனில் சூட்டிங் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

நேற்று முன்தினம் இதன் 2ஆம் கட்ட சூட்டிங்கில் கலந்துக் கொள்ள டேராடூனுக்கு சென்றார்.

ரஜினி தங்குவதற்காக ஜே.பி ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கின்றனர். தினசரி அங்கிருந்து படப்பிடிப்புக்குச் செல்கிறார்.

தற்போது சிம்ரனும் சென்றுள்ளார்.

டேராடூனில் நடக்கும் படப்பிடிப்புக்காக ஜூலை 17-ம் தேதி புறப்பட்ட சிம்ரன், இன்று (18-ம் தேதி) நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறாராம்.

டேராடூனில் உள்ள ரிசார்ட்டை சிம்ரன் வீடு போன்ற தோற்றத்துடன் ஆர்ட் டைரக்டர் உருவாக்கியிருக்கிறார்.

அங்கேதான் ரஜினி, சிம்ரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் சினிமாவில் கோலோச்சிய சிம்ரன் ரஜினியுடன் இணைவது இதுதான் முதன் முறையாகும்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ரிலீசுக்கு தயாராக 3 படங்கள்; எதை வெளியிடுவது என குழம்பும் தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’.

அந்தப் படம் வெளியாகி கிட்டதட்ட 1 வருடத்தை நெருங்கி வருகிறது.

இவரது நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘வட சென்னை’ படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பாலாஜி மோகன் இயக்கி வரும் ‘மாரி 2’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கௌதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பும் நடந்து வருகின்றன.

வடசென்னை மற்றும் மாரி 2 படங்கைளை தனுஷே தயாரித்துள்ளார்.

வடசென்னை படத்தின் மீது அதிக நம்பிக்கையில் இருப்பதால் அந்த வெற்றியின் எதிரொலியில் மாரி 2 படத்தை வெளியிடலாமா? என யோசிக்கிறாராம்.

அதற்குள் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரெடியாகிவிட்டால் எதை முதலில் வெளியிடலாம் என குழப்பத்தில் இருக்கிறாராம்.

காரணம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் இவருடைய தயாரிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமும் திரைக்கு வரவுள்ளது.

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வர்மா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் மகன் துருவ்.

அவர் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்குப் பிறகு துருவ் நடிக்க உள்ள 2வது படம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கிய சேகர் கம்முலா தான் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்க உள்ளார்.

வம்சம் சீரியலில் நடித்த பிரியங்கா தற்கொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.

இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணா இருந்தா ரேப் செஞ்சிருப்பேன்.; ஓவரா பேசி சிக்கிய மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் இயக்கிய பேரன்பு படத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு ஓவராக பேசினார்.

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகர்களே இல்லை. நடிக்கவே தெரியாது.

மம்முட்டி மலையாளி இல்லை. அவரும் தமிழன்தான். அவரை கொண்டாடுவோம்.

“மம்முட்டிக்கு வயது கம்மியாக இருந்தா நான் பெண்ணாக இருந்தால் காதலித்து இருப்பேன்.

இந்நேரம் நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரை ரேப் பண்ணியிருப்பேன்” என கூறினார்.

மிஷ்கினின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Mysskin Controversy speech in Peranbu audio launch

More Articles
Follows