இளையராஜா இசையில் உருவாகும் ‘தேசிய தலைவர்’… காட்சிகளை லீக்காக்கிய எடிட்டரை நீக்கிய படக்குழு

இளையராஜா இசையில் உருவாகும் ‘தேசிய தலைவர்’… காட்சிகளை லீக்காக்கிய எடிட்டரை நீக்கிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கான டீசரை பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்ட மிட்டிருந்தது. அதற்குள் படத்தின் டீஸர் சோசியல் மீடியாவில் நேற்று லீக் ஆனது.

உடனடியாக காலத்தில் இறங்கிய படக்குழு, இதற்கு காரணம் படத்தின் எடிட்டர் தான் கண்டுபிடித்து அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் லீக் ஆகி சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

மாஸ்டர் பட விவகாரத்திலும், படத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சோனி டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டது பின்னர் தெரிய வந்தது.

Desiya Thalaivar movie scenes leaked by Editor

லிப் லாக் தெரியும்… லவ் லாக் தெரியுமா? தெரிஞ்சிக்க பாண்டிச்சேரி வாங்க

லிப் லாக் தெரியும்… லவ் லாக் தெரியுமா? தெரிஞ்சிக்க பாண்டிச்சேரி வாங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தில் காணப்படும் லவ் லாக் மரத்தை சிலர் நிஜத்தில் பார்த்து இருப்பீர்கள்.

அது போன்ற லவ் லாக் மரத்தை புதுச்சேரியில் உருவாக்கியுள்ளார் சதீஷ் என்றொரு நபர்.

புதுச்சேரியில் சுய்ப்ரேன் வீதியில் அலங்கார விளக்கை அமைத்து அதில் காதல் பூட்டுக்களை மாட்டி வைத்துள்ளார்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் மற்றொரு உருவமாக புதுச்சேரி காணப்படுகிறது.

இங்கு தற்போதும் பிரெஞ்சு நாட்டு உணவு வகைகள், பிரெஞ்சு கால கட்டிடங்கள், பிரெஞ்ச் பெயர்களில் சாலைகள் என இன்றளவும் உள்ளது.

தற்போது பிரெஞ்சு கலாச்சார லவ் லாக் மரம் முறையும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

You Know Lip Lock Do You Know Love Lock

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

இதனை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில்…

“ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்தநாளன்று இது நிகழ்ந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி.

தங்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Kamal Haasan’s MNM gets back battery torch symbol for 2021 election

‘பேட்ட’ படத்தை காப்பியடித்த ‘மாஸ்டர்’… லோகேஷை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

‘பேட்ட’ படத்தை காப்பியடித்த ‘மாஸ்டர்’… லோகேஷை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் & விஜய்சேதுபதி நடித்த ‘பேட்ட’ மற்றும் விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படங்களின் காட்சிகளை நெட்டிசன்கள் ஒப்பீட்டு வருகின்றனர்.

இதோ அந்த ஓப்பீடுகள் ;

ரஜினிகாந்த் – ஹாஸ்டல் வார்டன் (ப்ளாஷ்பேக் சோக பின்னணி கொண்டவர்)

விஜய் – கல்லூரி பேராசிரியர் (ப்ளாஷ்பேக் சோக பின்னணி கொண்டவர்)

விஜய்சேதுபதி – பேட்ட & மாஸ்டர் வில்லன்

சனந்த் – மேகா ஆகாஷ் (பேட்ட) – கல்லூரி காதலர்கள்

சாந்தனு – கவுரி கிஷன் (மாஸ்டர்) – கல்லூரி காதலர்கள்

பாபி சிம்ஹா & சாந்தனு (ஹீரோவை எதிர்த்து அதன்பின் கூட்டணி)

மாளவிகா மோகனன் (பேட்ட) – கணவன் சசிகுமாரின் மரணத்துக்கு பழிவாங்கல்

ஆண்ட்ரியா (மாஸ்டர்) – கணவன் பிரேமின் மரணத்துக்கு பழிவாங்கல்

குரு சோமசுந்தரம் (பேட்ட) – ஹீரோ நண்பர். அவரின் முன்கதை தெரிந்தவர்

நாசர் (மாஸ்டர்) – ஹீரோவுக்கு அட்வைஸ்.. அவரின் முன்கதை தெரிந்தவர்

இத்துடன் ‘பேட்ட’ பட க்ளைமாக்ஸில் ரஜினி ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே வில்லனை கொல்வார்.

அதுபோல விஜய்யும் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை கொல்லும் காட்சிகள் உள்ளன.

Comparison between Rajinis Petta and Vijays Master movie

தம் அடிக்கும் தனுஷ்..பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட செல்வராகவன்.; ரஜினி விஜய்யை எதிர்த்தவர்களே எங்கிருங்கீங்க.?

தம் அடிக்கும் தனுஷ்..பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட செல்வராகவன்.; ரஜினி விஜய்யை எதிர்த்தவர்களே எங்கிருங்கீங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

இது செல்வராகவனின் 12வது படைப்பாகும்.

இதன் முதற்கட்டப் பணிகளைத் தற்போது தொடங்கியுள்ளனர்.

இப்பட ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, கலை இயக்குநராக விஜய் முருகன், எடிட்டராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் & செகன்ட் லுக்கை இன்று ஜனவரி 13் இரவு 7:10 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.

‘நானே வருவேன்’ என்ற தலைப்புடன் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் ஒரு போஸ்டரில் தனுஷ் புகைப்பிடிக்கும் வகையில் உள்ளது.

இதற்கு முன் ரஜினி & விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பட போஸ்டரில் இது போல புகைப்பிடிக்கும் டிசைன்கள் இருந்தன.

அப்போது பாமக. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Selvaraghavan and Dhanush Combo movie titled Naane Varuven

ஜெயக்குமார் மகனுக்கும் பேத்திக்கும் பெயர் சூட்டிய ஜெயலலிதா..; வாரிசு அரசியலை விரும்பாதவர் ஜெயக்குமார் மகனுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்..?

ஜெயக்குமார் மகனுக்கும் பேத்திக்கும் பெயர் சூட்டிய ஜெயலலிதா..; வாரிசு அரசியலை விரும்பாதவர் ஜெயக்குமார் மகனுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர்.

தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.

இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது.

நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி, பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார்.

22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன்.

படித்து முடித்த போது வயது 24 அவருக்கு… 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம்.

2013 டிசம்பர் மாதம் திடீரென போயஸ் தோட்டத்திலிருந்து ஜெயவர்தனை, தனது இல்லத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு வருகிறது. மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய அவர் போயஸ் தோட்டம் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு அமர்ந்திருந்த ஜெயலலிதா, வரும் தேர்தலில் எம்பியாக போட்டியிட உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டுள்ளார். இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவர் சரியென்று சொல்லியிருக்கிறார்.

தென் சென்னை தொகுதியில் நீங்கள் தான் வேட்பாளர், இதை இப்போது யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா.

2014 தேர்தலில் தென் சென்னையில் அபார வெற்றி பெற்று 25 வயதில் இந்தியாவின் இளம் எம்.பி என்ற அங்கீகாரத்தை பெற்றார் ஜெயவர்தன்.

பல்வேறு பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது இவரது குரல். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தந்ததில் இவர் பங்கு மிக முக்கியமானது.

வாரிசு அரசியலை முற்றிலும் விரும்பாத ஜெயலலிதா எப்படி அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு வாய்ப்பு கொடுத்தது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம்.

வட சென்னையில் பிறந்து
வளர்ந்தாலும்கூட, தென்சென்னையிலும்,
அதைத்தாண்டியும், எளிமை, இனிமை, பக்குவம், அடக்கம், அமைதி, புன்சிரிப்பு, உதவும் உள்ளம், அதிகாரத் தோரணை இல்லாமை என பலவிதங்களில் மக்களோடு மக்களாக பயணித்து அனைவரது மனதிலும், குறிப்பாக எதிர்க்கட்சியினர் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றார்.

அதன் பலனாக 2019 தேர்தலிலும் அவருக்கு தென்சென்னையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது, அவருக்கு பெண்குழந்தை பிறந்தது.

மனைவி ஸ்வர்ணலட்சுமியை அழைத்துக்கொண்டு குழந்தையோடு ஜெயலலிதாவை சந்திக்க சென்றார் ஜெயவர்தன்.

தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டுமென்று அவர் சொன்னபோது, ஜெயாவுக்கு அளவில்லா மகிழ்ச்சியாம்.

“உனக்கு பேர் வைத்ததும் நான் தான், உன் குழந்தைக்கும் பேர் வைப்பது மிகுந்த மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.

குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, “ஜெயஸ்ரீ” என்று பெயர் சூட்டி,”அப்பாவைக் காட்டிலும் மிகப்பெரிய ஆளாக நீ வருவாய் என வாயார வாழ்த்தி இருக்கிறார் ஜெயலலிதா.

இத்தனை சம்பவங்களையும் சொல்லி முடித்த ஜெயவர்தன், “தனக்கும்,தன் குழந்தைக்கும் பேர் சூட்டி, ஊர் பாராட்டும் வகையில், எங்களை சீராட்டி வளர்த்த அன்னை, எங்கள் குலதெய்வம், வாழ்நாளெல்லாம் நன்றியுணர்வோடு போற்றி வணங்கும் இதயதெய்வம் யாரென்றால் எங்கள் அம்மா தான் என்கிறார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது…

என் மகள் முகத்தில் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன்” என கண்களில் நீர் வழிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, குழந்தையைப்போல் மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்..

Minister Jayakumars son and Grand daughter name secrets

More Articles
Follows