அரசு உத்தரவை மீறி பாஜக.வினர் வேல் யாத்திரை; போலீசார் வழக்குப்பதிவு

அரசு உத்தரவை மீறி பாஜக.வினர் வேல் யாத்திரை; போலீசார் வழக்குப்பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Defying TN Govts order TN BJP launches Vel Yatra todayஇன்று நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை செல்லவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும் தடையை திட்டமிட்டபடி இன்று திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து வேலுடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.

யாத்திரைக்காக வடிவமைக்கப்பட்ட வண்டியில் சென்ற அவருடன் எச்.ராஜா, அண்ணாமலை, கருநாகராஜன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து செங்குன்றம் புழல் வழியாக வெற்றிவேல் யாத்திரை மேற்கொண்டு அறுபடைவீடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், பாஜக தலைவர்‌‌ முருகன்‌ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருத்தணியில் யாத்திரை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக வினரை கைது செய்த போலீசார் அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அப்போது அங்கு மின்சாரம் இன்றி இருந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் சட்டையை பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பரபரப்பு ஏற்படவே அண்மையில் பாஜக.வில் இணைந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கட்சியினரை சமரசம் செய்தார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரை சென்ற வந்த பாஜகவினர் மீதுவழக்குப்பதிவு செய்துள்ளனர்

Defying TN Govts order TN BJP launches Vel Yatra today

திருமணம் முடிந்தவுடன் புது வீட்டில் குடியேறிய காஜல் அகர்வால்

திருமணம் முடிந்தவுடன் புது வீட்டில் குடியேறிய காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal and Gautam celebrating new beginning at new homeவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால்.

தெலுங்கு சினிமாவிலும் இவர் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்கிறார். ஆனால் கொரோனா பிரச்சினைக்கு பிறகு இன்னும் சூட்டிங் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் கவுதம் கிச்லு என்பவரை கடந்த மாதம் 30ம் தேதி மும்பையில் திருமணம் செய்துக் கொண்டார்.

இதனையடுத்து தன் கணவருடன் உள்ள பல புகைப்படங்களை இணையத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

தற்போது திருமணத்திற்குப் பிறகு கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்குப் குடி பெயர்ந்துள்ளார்.

புதுமனை பூஜைகளை புதுமணத் தம்பதியினர் இருவரும் செய்துள்ளனர். இந்த படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

Kajal and Gautam celebrating new beginning at new home

பிக்பாஸ் ஷோவில் ரொமான்டிக் சீன்ஸ்..; இந்த காதலாவது நிலைக்குமா?

பிக்பாஸ் ஷோவில் ரொமான்டிக் சீன்ஸ்..; இந்த காதலாவது நிலைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balaji Shivani new pair romantic in Bigg Boss home என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கிண்டலடித்தாலும் அதற்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

வேலையில்லாத நடிகர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் என இதை கிண்டலடிப்பவர்களும் இதை பார்த்து தான் வருகின்றனர்.

சோஷியல் மீடியாக்களிலும் அது பற்றிய மீம்ஸ்களுக்கு குறைவில்லை.

தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

100 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது ஒரு மாதத்தை கடந்துவிட்டது.

தற்போது அதற்கேற்ப காதல் ஜோடிக்கும் குறைவில்லை என்றே தெரிகிறது.

போட்டியாளர்கள் பலரும் ஒன்றாக பாட்டு பாடிக் கொண்டிருக்க, பாலாஜி மற்றும் ஷிவானி ஜோடி மட்டும் தனியாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

சில பாடல்கள் கூட அந்த ரொமான்டிக் ஜோடிக்கு ஏற்றவாறே இருந்தன.

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா – ஆரவ் ஜோடி படு பாப்புலர் ஆனது.

2வது சீசனில் மஹத் – யாஷிகா ஆனந்த் ஜோடி பேசப்பட்டது.

கடந்தாண்டு 3வது சீசனில் கவின் – லொஸ்லியா காதல் ஜோடி பேசப்பட்டது.

ஆனால் இந்த மூன்று காதல் ஜோடிகளும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் பிரிந்துவிட்டனர்.

தற்போது இணைந்துள்ள பாலாஜி ஷிவானி ஜோடி வீட்டை விட்டு வந்தபின் என்ன செய்கிறார்கள்? என பார்ப்போம்.

Balaji Shivani new pair romantic in Bigg Boss home

நாளை கமல்ஹாசன் பிறந்தநாளில் லோகேஷ் தரும் மெகா ட்ரீட்

நாளை கமல்ஹாசன் பிறந்தநாளில் லோகேஷ் தரும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal 232 title reveal teaser on Kamalhassan birthdayஉலகநாயகன் கமல்ஹாசன் நாளை நவம்பர் 7ல் தன் 66வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருந்தபோதிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.

விரைவில் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் பின்னர் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு கமலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வெளியாகும் என படக்குழுவின்ர அறிவித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு பிறகு கமல் பிறந்தநாளில் அவரின் படம் தொடர்பான அறிவிப்பு வருவது அனைத்து ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

Kamal 232 title reveal teaser on Kamalhassan birthday

அப்பாகிட்ட விஜய் பேசுறது இல்ல.; கட்சியிலிருந்து விலகிட்டேன்.. – ஷோபா

அப்பாகிட்ட விஜய் பேசுறது இல்ல.; கட்சியிலிருந்து விலகிட்டேன்.. – ஷோபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shobha Chandrasekar statement regarding Vijay Political party launchபுரட்சி இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கி அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மேலும் ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம். என் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்…

ஒரு மாதத்திற்கு முன்பு அசோசேஷியன் தொடங்கப்போவதாக தான் என்னிடம் எஸ்ஏசி கையெழுத்து கேட்டார். நானும் கையெழுத்து போட்டேன்.

ஆனால் தற்போது ஒரு வாரம் முன்பு பொறுப்பாளர் பதவிக்கு என்னை கையெழுத்து போட சொன்னார். நான் போடவில்லை. கட்சியிலிருந்து விலகி விட்டேன்.

கட்சி பற்றி மீடியாக்களிடம் பேச வேண்டாம் என விஜய் சொன்னார். ஆனால் எஸ்ஏசி பேசிக் கொண்டிருக்கிறார். எனவே இருவரும் தற்போது பேசுவது கிடையாது என ஷோபா பேசினார்.

Shoba Chandrasekar statement regarding Vijay Political party launch

நிறைய மைக் முன்னாடி பேசி பழக்கமில்ல..; இப்போ டைம் இல்ல..; விஜய் கட்சி குறித்து SAC பேட்டி

நிறைய மைக் முன்னாடி பேசி பழக்கமில்ல..; இப்போ டைம் இல்ல..; விஜய் கட்சி குறித்து SAC பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA Chandrasekar reaction for Acto Vijays statement நடிகர் விஜய் பெயரில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்ஏசி பதிவு செய்துள்ளார்.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இதை நடிகர் விஜய் மறுத்து ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அப்பா தொடங்கியுள்ள அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்“

இவ்வாறு நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் தீடீரென எஸ்ஏ. சந்திரசேகரை சந்தித்து இந்த கட்சியின் அவசியம் என்ன? இது விஜய்க்கு தெரியாதா? என்று பல கேள்விகளை அடுக்கினர்.

எஸ்ஏசி அளித்த பேட்டியில்…

நான் உங்களை அழைக்கவில்லை. நீங்களாக வந்து விட்டீர்கள். எனக்கு பேச நேரம் இல்லை என்றே தொடங்கினார்.

விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மற்றவர்களின் கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது.

கட்சி தொடங்கியது விஜய்க்கு தெரியலன்னு அவர் சொல்வாரு. 1993ல் அவரது பெயரில் ரசிகர் மன்றமாக ஆரம்பமானது. பின்னர் நற்பணி மன்றமாக மாறியது. பிறகு மக்கள் இயக்கமாக மாறியது.

அரசியல் கட்சி எனக்கு அவசியம். ஆனால் இப்போதைக்கு அதற்கான அவசியத்தை சொல்ல எனக்கு நேரமில்லை.

நிறைய மைக் முன்னாடி பேசி எனக்கு பழக்கமில்லை. இப்போ டைம் இல்லை. தனியாக வாருங்கள் சொல்றேன்..

இவ்வாறு எஸ்ஏ சந்திரசேகர் பதிலளித்தார்.

SA Chandrasekar reaction for Acto Vijays statement

More Articles
Follows