விஜய்யின் ரீமேக் படத்தில் ரஜினியின் அனிமேஷன் நாயகி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முழு நேர அரசியலில் ஈடுபட்ட சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ள இப்படம் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகிறது.

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண், இப்படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது.

தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தஞ்சையில் விவசாயம் செய்ய நிலம் வாங்கும் விஷால்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கத்தில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் விஷால் கலந்துக் கொண்டார்.

அப்போது ‘நெல் செய்தி’ என்ற காலாண்டு இதழை வெளியிட்டு அவர் பேசியதாவது:

ஒரு நடிகராக இருந்தாலும் விவசாயியாக வாழ்வதே எனது நோக்கம். எனவே, டெல்லா பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்யவுள்ளேன்.

எனக்கு விதை விதைக்கும் பணிகள் ரொம்ப பிடிக்கும்.

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

கடன் பிரச்சினைகள் வந்தாலும் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு செல்ல கூடாது. தங்களின் பிரச்சினைக்கு அது ஒரு தீர்வாகாது” என்றார்.

சினிமா விநியோகத்தில் புரட்சி செய்யும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் சார்பாக சரவணன் என்பவர் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தார்!.

மற்ற விநியோகஸ்தர்களை காட்டிலும் இவர் விநியோக முறையில் புதிய முறைகளை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தியேட்டர்களிலும் வசூல் விவரங்களை பெற்று சம்பந்தபட்ட தயாரிப்பாளருக்கு புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகிறாராம்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தின் விநியோக உரிமையை பெற்றார்.

இதனை புரமோசன் செய்யும் வகையில் 300 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டரை பொருத்தி  டிரெய்லர், பாடல் காட்சிகளை ஒளிப்பரப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ‘காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ‘குற்றமே தண்டனை’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது கே.ஆர்.பிலிம்ஸ்.

எனவே, குற்றமே தண்டனை படத்தின் விளம்பரத்திற்காக 1,000 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டரை பொருத்த திட்டமிட்டுள்ளாராம் இந்த சரவணன்.

காட்சிப்படுத்துங்கள்.. காயப்படுத்தாதீர்கள்…’ இறைவி இயக்குனருக்கு ரெட் கார்டு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இறைவி படம் நேற்று வெளியானது.

இதில் சில காட்சிகளில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்துள்ளதற்கும், அவதூறாகப் பேசியதற்கும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எனவே, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்டு விதிக்குமாறு தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே இன்று தயாரிப்பாளருக்களுக்கான சிறப்பு காட்சியை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் கங்காரு, லட்டு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனருக்கு அறிக்கை எழுதியுள்ளார். அதில்…

“உங்களின் இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அற்புதம்.

சிறிய வயதிலேயே இயக்குநராகும் அதுவும் தயாரிப்பாளர் மனது வைத்ததால் இயக்குனராகும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். தற்போது 3வது படத்திலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்டீர்கள்.

இதற்கு காரணமான தயாரிப்பாளர்களை என்கிற ஒரு இனத்தையே விஜி முருகன் என்பவரின் கேரக்டர் மூலம் அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளீர்கள்.

தயாரிப்புக்கு முன்னாடி நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்னு தெரியுமா? என்று கேட்பது முதல் தொடங்கி, ஒரு தயாரிப்பாளர் என்பவன் படு கேவலமானவன் போன்று சித்தரித்துள்ளீர்கள்.

தயாரிப்பாளருக்கு கதை ஞானமே கிடையாது என்பதைப் போலவும் காட்டியுள்ளீர்கள்.

உயிரைச் சிந்தி காசு எடுத்துட்டு ஒருவன் வருவான். அவன் காசில் படமெடுத்துவிட்டு அவனையே காறி உமிழ்வது போன்ற காரியத்தை எப்படி உங்களால் செய்ய முடிந்தது?

ஏவிஎம் சரவணன் சார் மாதிரி பெரியவர்கள் இப்படத்தைப் பார்த்தால் எப்படி நொந்து போவார்கள்?

தயாரிப்பாளர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதை ஒரு தயாரிப்பாளனாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

படம் எடுத்து தோல்வி அடைந்து வாழ்க்கையின் அடித்தட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆனால் நடுத்தெருவுக்கு வந்த இயக்குனர்களை உங்களால் காட்ட முடியுமா? பார்ப்போம்?

காட்சிப்படுத்துதல் முக்கியம்தான். ஆனால் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் கார்த்திக்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

காதல் தேசம் ரீமேக்… பவர் ஸ்டாருடன் இணையும் சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முஸ்தபா முஸ்தபா என்ற பாடலை எப்படி மறக்க முடியாதோ அதுப்போன்று காதல் தேசம் படத்தையும் எவராலும் மறக்கமுடியாது.

இது எல்லாம் ஓகே. இப்போ இந்த படம் ரீமேக் ஆகிறதா? என்பதைதானே கேட்கிறீர்கள்.? ரீமேக் குறித்த பேச்சை இன்று ஒரு விழாவில் கிளப்பி விட்டுள்ளார் மிர்ச்சி சிவா.

திரைவண்ணன் இயக்கத்தில் பவர் ஸ்டாருடன் சிவா இணைந்துள்ள படம் அட்ரா மச்சான் விசிலு. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் சிவா பேசியதாவது…

“இது காமெடி படம் என்றாலும் இதுல ஒரு நல்ல மெசேஜ் இருக்கு. ஒரு நடிகருக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கோம்.

நான் சென்னை பையனாக இருந்தாலும் மதுரை பாஷை பேசி நடிச்சிருக்கேன்.

ஒரு காட்சியில் நடிக்கும்போது இப்படிதான் ரியாக்சன் கொடுக்கலாம்னு நமக்கு தெரியும். ஆனா இப்படி கூட ரியாக்சன் கொடுக்க முடியுமா? அப்படிங்கிறதை பவர் ஸ்டாரை பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

இந்தப்படத்துல பவர் ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நான் நடிச்சிருக்கன். அவருக்கு 22வது பிறந்த நாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் படத்துல இருக்கு.

ஆனா இப்ப நேர்ல பார்த்தா, இவருக்கு 21 வயசு போல தெரியுது.

காதல் தேசம் அப்பாஸுக்கு செம போட்டியா இவரு இருக்காரு. அந்தப்படத்தை ரீமேக் செய்தால், நான் வினீத் ஆகவும் பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நடிக்க ரெடியா இருக்கோம்” என்று கலகலப்பாக பேசினார் சிவா.

கீர்த்திக்கு விஜய்-சிவகார்த்திகேயன் கொடுத்த ஒரே ஃபீல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உன் மேல ஒரு கண்ணு… நீதான் என் முறை பொண்ணு …. இந்தப் பாடலை நாம் அடிக்கடி டிவியில் பார்த்தாலும் சேனலை மாற்றாமல் பார்க்கத் தூண்டும் பாடல் இது.

நமக்கே இப்படி என்றால் கீர்த்தி சுரேஷுக்கு சொல்ல வேண்டுமா? இப்பாடலும் படமாக்கப்பட்ட விதமும் கீர்த்திக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

திருமண விழா, குடும்பம் என அமைந்த இப்பாடலை போன்று ஒரு பாடல் விஜய் 60 படத்திலும் கிடைத்துள்ளதாம்.

இந்தப் பாடலில் தான் விஜய்யும் கீர்த்தியும் சந்திப்பதாகவும் அதனை தொடர்ந்து இப்பாடல் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்பாடல் கீர்த்தி சுரேஷின் மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows