அப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..

அப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது.

Virtual Print Fee எனப்படும் விபிஎஃப் கட்டணங்களை எங்களால் செலுத்த முடியாது. எனவே படங்களை வெளியிட மாட்டோம் என நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்தார்.

இதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்புக்கும் பிரச்சினை உருவானது.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் டிஜிட்டல் நிறுவனத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் 60 சதவீத கட்டணத்தை குறைத்துக்கொள்ள முன்வந்து இருப்பதால் புதிய திரையரங்குகளை வெளியிடலாம் என பாரதிராஜா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில்…

“கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே விபிஎஃப் கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி, க்யூப் நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31.3.2021 தேதிக்குள், இந்த விபிஎஃப் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

31.3.2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து விபிஎஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், 31.3.2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்”. இவ்வாறு பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Decks cleared for release of new movies in TN

பீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

பீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu devaநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா.

இவர் நடன இயக்குனராக இருந்தபோது துணை நடிகை ரமலத் என்பவரை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதன் பின்னர் விஜய் நடித்த வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவை காதலித்தார். இதனால், மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்,

நயன்தாராவும் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார்.

ஆனால், இவர்களின் காதல் திடீரென முறிந்தது. 2012-ல் பிரிந்தனர்.

இந்த நிலையில், தற்போது பீகாரை சேர்ந்த பிசியோதெரபி டாக்டரை காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்டுகிறது.

தற்போது தம்பதிகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவா வீட்டில் வசித்து வருவதாக தவல்கள் வந்துள்ளன.

Actor Prabhu Deva gets married for the second time ?

‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மகேஷ் பாபு பாராட்டு

‘சூரரைப் போற்று’ சூர்யாவுக்கு மகேஷ் பாபு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu suriyaசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமா பிரபலம் மகேஷ் பாபுவும் பாராட்டியுள்ளார்.

“சூரரைப் போற்று, என்ன ஒரு எழுச்சியூட்டும் படம். அற்புதமான இயக்கம், அற்புதமான நடிப்பு. டாப் பார்மில் சூர்யா. பிரகாசிக்கிறீர்கள் பிரதர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.

“மிகவும் நன்றி பிரதர், டன் நன்றிகள், ‘சரக்குவாரி பாட்டா’வுக்காகக் காத்திருக்கிறேன்,” என மகேஷ்பாபுவுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Mahesh Babu praises Suriya’s Soorarai Pottru

இந்து மத நம்பிக்கைக்களை கொச்சைப்படுத்தும் ‘மூக்குத்தி அம்மன்’..; பொது மன்னிப்பு கேட்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை

இந்து மத நம்பிக்கைக்களை கொச்சைப்படுத்தும் ‘மூக்குத்தி அம்மன்’..; பொது மன்னிப்பு கேட்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mookuthi ammanநயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் தன் பாணியில் அரசியல் நையாண்டி செய்திருந்தார் ஆர்ஜே. பாலாஜி.

இந்து மத போலி சாமியார்களையும் அவர்களின் அராஜகங்களையும் அப்பட்டமாக காட்டியிருந்தார்.

ஆனால் கிறிஸ்தவ மத போலி சாமியார்களின் காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தார். (அது ஏனோ..?)

தீபாவளியை முன்னிட்டு இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்து தமிழர் கட்சி ‘மூக்குத்தி அம்மன்’ படக்குழு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது.

இது தொடர்பான அந்த கட்சியின் அறிக்கையில்.. ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதாகவும், இந்து மத சாமியார்களை வில்லன்கள் போல் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்து கடவுள் குறித்து அவதூறாக படமெடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்.

படத்தின் தயாரிப்பாளரை (ஐசரி கணேஷ்) திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

படக்குழுவினர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mookuthi Amman team should ask public apology says Hindu Tamilar Party

விக்ரம் மருமகனை கழட்டி விட்ட இயக்குனர் இமயம்..; கை கொடுத்தார் ‘PUBG’ டைரக்டர் விஜய்ஸ்ரீ

விக்ரம் மருமகனை கழட்டி விட்ட இயக்குனர் இமயம்..; கை கொடுத்தார் ‘PUBG’ டைரக்டர் விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிகர்களின் வாரிசுகளுக்கோ அல்லது அவர்களின் உறவினர்களுக்கோ வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடும்.

அப்படி கிடைத்த வாய்ப்பு சரியாக பயனளிக்க அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் திறமை என்ற ஒன்றும் கூடவே பயணித்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை அடைய முடியும்.

அப்படியாக, தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்க அறிமுக நாயகனாக 2018ல் களமிறமிறங்கியிருக்கிறார் நாயகன் அர்ஜுமன்.

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர் விக்ரமின் சகோதரி அனிதா வின் மகன் தான் இந்த அர்ஜுமன்…

தொடர்ந்து 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் இமயம், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி படத்தை கைவிட, பிறகு, பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் அர்ஜுமனை நாயகனாக களம் இறக்கினார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

வீட்டில் முடங்கி இருக்கும் நடிகர்களுக்கும், பல முன்னனி நடிகர்களால் கைவிடப்பட்ட துணை நடிகர்களுக்கும் தொடர்ந்து வாய்பளித்து வரும் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி, அர்ஜுமனுக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலமாகவே அர்ஜுமன், நாயகனாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டப்படவிருக்கிறார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறதாம்…

விரைவில் இசையும் , படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும், இது தமிழ் சினிமாவில் யாரும் தொடாத ஒரு கதை எனவும் இயக்குனர் தரப்பு கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

Vikram’s nephew Arjuman to debut in Director Vijay Sri’s PUBG

arjuman in pubg

மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கல்தா’ ஹீரோ சிவ நிஷாந்த் !

மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கும் ‘கல்தா’ ஹீரோ சிவ நிஷாந்த் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shiva nishanthஇயக்குநர் ஹரி உத்தாரா இயக்கத்தில் I Creations தயாரிப்பில் வெளிவந்த “கல்தா” படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகர் சிவநிஷாந்த்.

சமூகநோக்கத்தோடு அரசியல் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் நடிகர் சிவநிஷாந்த் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

எல்லா இளம் நடிகர்களும் தங்களுடைய அறிமுகபடமாக காதல் படங்களில் நடிப்பதையே விரும்புவார்கள்.

ஆனால் அதிலும் வித்தியாசமாக இவர் சமூகத்திற்கான அரசியல் படத்தில் அறிமுகமானார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டியிருந்தார்கள்.

முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கத்தில் PGP Enterprisers தயாரிக்கும் “துப்பாக்கியின் கதை” படத்தில் ஒரு வித்தியாசாமான பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இது தவிர மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் தயாரிப்பில் ஒரு படத்திலும் மற்றுமொரு பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

திரையுலக கலைஞர்களால் இளம் நெஞ்சங்களை ஈர்க்கும் வசீகரத்துடன், நடிப்பு திறமை கொண்டவர் எனும் பாராட்டையும் பெற்றுள்ள இவர், திரையுலகில் முதல் படத்திலேயே பாராட்டு பெற்று, உடனடியாக அடுத்தடுத்து, முக்கியமான படங்களில் நடிக்கும், இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதோடு, வித்தியாசாமான கதாப்பாத்திரங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தரமான நல்ல படங்களை தருவதே எனது குறிக்கோள்.

ஒரு நட்சத்திரமாக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நடிகர் என்றும் பெயரெடுக்க வேண்டும் அதுவே தனது ஆசை எனக் கூறியுள்ளார்.

Actor Shiva Nishanth next movie updates

More Articles
Follows