ரஜினி குடித்த தேநீருக்கும் பெயர் வைத்த டார்ஜிலிங் ரிசார்ட்

rajinikanth villaரஜினிகாந்த் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றி உள்ள மலை பிரதேசங்களில் நடந்து வருகிறது.

30 நாட்கள் இந்த படத்துக்காக தனது தேதிகளை கொடுத்து இருக்கிறார் ரஜினி.

இந்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்.

இந்த விடுதியில் உள்ள டைரக்டர்ஸ் பங்களா என்னும் இல்லத்தில் தங்கினார்.

ரஜினி தங்கியதால் இந்த விடுதி பிரபலமாக மாறிவிட்டது. அவர் தங்கியதை நினைவு கூறும் வகையில் அந்த இல்லத்தின் பெயரையே ரஜினிகாந்த் வில்லா #3 என்று மாற்றி இருக்கிறார் விடுதியின் அதிபர்.

இது குறித்து விடுதியின் இயக்குனர் மேகுல் பரேக் கூறும்போது…

‘சூப்பர் ஸ்டார் எங்கள் விடுதியில் தங்கியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

அவரது நினைவாக ஒரு மரம் நட்டு, அதற்கு புதிதாக வண்ணம் பூச உள்ளோம்.

இனி அவர் தங்கிய அந்த விடுதி இல்லம் ரஜினிகாந்த் பெயரிலேயே அழைக்கப்படும்’ என்று கூறி இருக்கிறார்.

ரஜினி தங்கி இருந்த நாட்களில் பருகிய தேநீருக்கு தலைவா ஸ்பெ‌ஷல் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

அந்த தேநீர், விடுதியின் வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டிரேயில் வைக்கப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post