‘மருமக மிரட்டுறா… அம்மா காப்பாத்துங்க…’ கதறும் சிவசங்கர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர் என் பன்முகம் கொண்டவர் சிவசங்கர்.

ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மருமகள் இவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிவசங்கர் கூறியதாவது… “எனது மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும் ஜோதிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தற்போது நாங்கள் வரதட்சணை கேட்டதாக மருமகள் ஜோதி தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்கவில்லை.

சில பிரச்சினைகள் எழுந்ததால், அவர்களை தனிக்குடித்தனம் வைத்தோம். ஆனால் பிரச்சினை தீராத காரணத்தால், என் மகன் என் வீட்டுக்கே வந்துவிட்டார்.

தற்போது சமாதானத்திற்கு பிறகு என் மகன் அவருடன் சேர்ந்து வாழ காத்திருக்கிறார்.

ஆனால் எங்களை சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ள ஜோதி, எங்களை மிரட்டுகிறார். ரூ.10 கோடி கேட்டு மிரட்டுகிறார்.

மாண்புமிகு முதல்வர்தான் இப்பிரச்சினையில் தலையிட்டு எங்களை காப்பாற்றவேண்டும்” என்று தெரிவித்துள்ளார் சிவசங்கர்.

அஜித்தின் ரெண்டு பாலிசியை பற்றிக் கொண்ட நயன்தாரா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.

அறிமுக ஹீரோ, டாப் ஹீரோ என பேதம் பார்க்காமல் எவருடன் வேண்டுமானாலும் நடிப்பவர் இவர்.

ஆனால், இவர் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுதான். அதாவது தன் பட புரமோஷன், இசை வெளியீட்டு விழா என எதிலும் கலந்து கொள்ளாதவர் என்பதுதான்.

இதனால் இவரை லேடி அஜித் என்று கூறுவோரும் உண்டு.

தற்போது அஜித்தின் மற்றொரு பாலிசியையும் கடைபிடிக்கிறாராம் நயன்தாரா.

முன்பெல்லாம் தானுண்டு, கேரவன் உண்டு என்றிருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் தன் காட்சி முடிந்துவிட்டாலும் சக நடிகர்கள் நடிக்கும் நடிப்பை தளத்திலேயே உட்கார்ந்து பார்க்கிறாராம்.

அஜித்தும் இப்படிதான் சக நடிகர்களை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றிவேல் நாயகியை விடாத கிடாரி சசிக்குமார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை, வெற்றிவேல் படங்களைத் தொடர்ந்து கிடாரி படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் முருகேசன் இயக்கி வரும் இப்படத்தை படத்தின் நாயகனே தயாரிக்கிறார்.

இவரின் ஜோடியாக வெற்றிவேல் நாயகிகளில் ஒருவரான நிகிலா நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக நடிகர் தர்புகா சிவா அறிமுகமாகிறார். ‪‎

ராஜதந்திரம் படத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹீரோவாகி வரும் நிலையில், ஒரு நடிகர் இசையமைப்பாளராக மாறியிருப்பது ஆச்சரியம்தான்.

கபாலி சீக்ரெட்ஸை வெளியிடும் நயன்தாராவின் அப்பா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படம் கபாலி.

இதன் பாடல்கள் ஜீன் 9ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் படம் பற்றிய எந்த தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என அன்புக் கட்டளை விதித்து இருந்தார் இயக்குனர் ரஞ்சித்.

ஆனால் சில தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கசிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குனரும் நடிகருமான உதயபானு மகேஸ்வரன் தன் கேரக்டர் குறித்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கபாலி படத்தில் மலேசியா போலீஸ் ஆக நடித்துள்ளதை தெரிவித்துள்ளார்.

இவர் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவுக்கு புஷ்பா நன்றி… வழக்கை வாபஸ் பெற்ற வாலிபர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மீது தவறு இல்லாதபோதும், ஒரு பெண் முன்னிலையில் பொது இடத்தில் தன்னை நடிகர் சூர்யா அடித்துவிட்டதாக பிரேம்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால், சூர்யாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதனிடையில் அச்சம்பவத்தில் இடம் பெற்ற பெண்ணான புஷ்பா கிருஷ்ணசாமி தன் ட்விட்டர் பக்கத்தில்

”என்னிடம் தவறாக நடக்க முயன்ற அந்த இளைஞர்களிடம், தன்னை காப்பற்றியதற்கு நன்றி” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நிறைய பின்னணி சம்பவங்கள் நடந்திருந்தாலும் தற்போது சூர்யாவும், பிரேம்குமாரும் சமரசம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம் பிரேம்குமார்.

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

விஜய்சேதுபதியுடன் இணையும் சிபிராஜ்-ஜிவி பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜூன் 1ஆம் தேதி இரண்டு படங்களின் டீசர் மற்றும் இரண்டு பட ட்ரைலர் வெளியீடு நடக்கவிருக்கிறது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி-தமன்னா இணைந்துள்ள தர்மதுரை பட டீசர் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து, அம்மன், அருந்ததி புகழ் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள சிவநாகம் படத்தின் டீசரும் இன்று வெளியாகிறது.

இந்த இரண்டு டீசர்களை தொடர்ந்து, சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்-ஆனந்தி இணைந்துள்ள எனக்கு இன்னொரு பேரு இருக்கு பட ட்ரைலர் வெளியாகிறது.

இதைப்போலவே, சத்யராஜ்-சிபி ராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன் துரை பட ட்ரைலரும் இன்று வெளியாகிறது.

தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

More Articles
Follows