தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ராஜீவ்குமார் இயக்கும் இப்படத்தில் கமலுடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் அண்ட் வக்கீல் ஜெயபால் உள்ளிட்டோர் இப்படத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மனுவை கோவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளனர். அதில்…
“சபாஷ் நாயுடு என்ற தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
இதுபோன்ற சாதி பெயரில் படத்தலைப்புகளை அனுமதித்தால் தவறான செயலுக்கு இதுவே முன்னுதாரணமாய் அமைந்து விடும்.
எனவே, இப்படத்திற்கு வேறு தலைப்பு இடும் வரை, இதன் விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இளங்கோவன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
