டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதரானார் இமான்

டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதரானார் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

D Imman is ambassador at University of Torontos Tamil Chair100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள டி இமான் தற்போது தான் முதன்முறையாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக இமானுக்கு விசேஷ கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.இமான் தெரிவித்துள்ளதாவது….

“உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல், நாகரீகம் மற்றும் கலாச்சாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும்.

மொழிகளின் தாய் என தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன்.

பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம். டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

கனடாவின் முதல் தர பல்கலைக் கழகமான டொராண்டாவில் நமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமைமிகு தருணம்.

டொராண்டோ பல்கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், தாய் மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

D Imman is ambassador at University of Torontos Tamil Chair

நடிகை எம்.என்.ராஜத்தின் கணவரும் பாடகருமான AL ராகவன் மரணம்

நடிகை எம்.என்.ராஜத்தின் கணவரும் பாடகருமான AL ராகவன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor and Play back Singer AL Raghavan passed awayதென்னிந்திய மொழிகளில் பழம்பெரும் பாடல்களை பாடியவர் ஏ.எல்.ராகவன்.

1950-களில் இருந்து 1970 வரை வெளியான திரைப்படங்களில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.

இந்த நிலையில் ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாவன, எங்கிருந்தாலும் வாழ்க… சீட்டுக்கட்டு ராஜா… அங்கமுத்து தங்கமுத்து… பொம்பளை ஒருத்தி இருந்தாளாம் உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் பிரபலம்.

இறுதியாக ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்திலும் இவர் பாடியிருந்தார்.

ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ராகவன் பற்றிய சிறுகுறிப்பு…

சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகரும், திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரும் ஆவார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம்.

1950-களிலிருந்து 1980 வரை தமிழ்த் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 1947-ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்குள் நுழைந்தார். 1950-இல் வெளிவந்த “விஜயகுமாரி” என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். குமாரி கமலாவுக்காக பெண் குரலில் இப்பாடலைப் பாடினார். தமிழுடன் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற எங்கிருந்தாலும் வாழ்க என்ற மிகப் பிரபலமான பாடலைப் பாடியவர்.
கல்யாண் குமார், ஜெமினிகணேசன் போன்றோர் நடித்த பல படங்களுக்குப் பின்னணி பாடியவர்.

இவர் 1948-இல் தயாரிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் 1951-இல் வெளிவந்த “சுதர்ஸன்” என்ற படத்தில் பகவான் கண்ணனாக நடித்திருக்கிறார். கல்லும் கனியாகும் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கல்லும் கனியாகும், கண்ணில் தெரியும் கதைகள் இரு படங்களைத் தயாரித்துள்ளார். கல்லும் கனியாகும் படத்தை பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தயாரித்தார்.

இப்படம் சுமாராகவே ஓடியது. அத்துடன் .சௌந்தரராஜன் படம் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் இவர் 1980-இல் கண்ணில் தெரியும் கதைகள் படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், ரி.ஆர்.பாப்பா, இளையராசா உள்ளிட்ட 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார்.

பாடல்கள் பிரபலமானாலும், கதையில் வலுவில்லாததால் படம் தோல்வியைத் தழுவி இவரைப் பல லட்சங்களை இழக்கச்செய்தது.

நாகேஷ் அவர்களுக்கு இவரது குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆதலால் நாகேஷுக்குப் பல படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியவர்.

வாடா மச்சான் வாடா (அன்று கண்ட முகம்), உலகத்தில் சிறந்தது எது (பட்டணத்தில் பூதம்), சாப்பிடத்தான் தெரியும் எனக்கு சமைக்கத் தெரியலியே (பவானி) ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா'(குழந்தையும் தெய்வமும்), ‘அங்கமுத்து தங்கமுத்து’ (தங்கைக்காக), கடவுளும் நானும் ஒரு ஜாதி, அன்று ஊமை பெண்ணல்லோ உள்ளிட்ட பல பாடல்களால் அறியப்பட்டவர்.

எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டை கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான்.

எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்டிரா குழுவை உருவாக்கியவர். புதையல் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் முதன் முதலாக பாடியவர்.

Actor and Play back Singer AL Raghavan passed away

BREAKING கடைக்கு நடந்து போங்க; பழைய ஈபாஸ் செல்லாது..; மாஸ்க் இல்லனா மாட்டீனீங்க.. லாக்டவுன் கன்டிசன்ஸ்

BREAKING கடைக்கு நடந்து போங்க; பழைய ஈபாஸ் செல்லாது..; மாஸ்க் இல்லனா மாட்டீனீங்க.. லாக்டவுன் கன்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lockdown New conditions Dont use Bike Car Old EPass invalidசென்னை செங்கல்பட்டு திருவள்ளுர் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் நாளை ஜூன் 19 முதல் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை நிறைய நிபந்தனைகள் உள்ளது. அதன் தொகுப்பு இதோ…

சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்.

* முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

*கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க வேண்டும்

*நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்

*காய்கறி, மளிகை பொருட்களை வாங்க பைக், கார்களில் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது… அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்.

*உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

*ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – பழைய இ-பாஸ் செல்லாது.

*திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது.

*போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை.

*காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

*தேநீர் கடைகளுக்கு அனுமதியில்லை. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள் திறக்கலாம்.

*சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு கிடைக்கும்.

*சென்னையில் பணியாற்றும் செய்தியாளர்கள் தங்கள் நிறுவன அடையாள அட்டையை காண்பித்தால் மட்டும் போதுமானது.

*சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

*முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

*அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும்.

*முழு ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லை.

*அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

*பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை… அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது.

*சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிப்பு.

இவ்வாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

#ChennaiLockDown | #CoronaVirus | #filmistreet l #TNFightsCorona l #Chennai | #EPass | #Lockdown l #Corona l

Lockdown New conditions Dont use Bike Car Old EPass invalid

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாயுடன் நிபுணர்கள் சோதனை

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாயுடன் நிபுணர்கள் சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bomb Threat to Rajini home Police Begins Search Operationசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது.

அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் 108-க்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் வீட்டில் வெடிகுண்டும் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்த மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

ஆனால் அது வெறும் புரளி என தற்போது தெரிய வந்துள்ளது.

Bomb Threat to Rajini home Police Begins Search Operation

‘கொரோனா’ குறித்து முதல்வருடன் ரஜினி ஆலோசனை.; நடந்தது என்ன.?

‘கொரோனா’ குறித்து முதல்வருடன் ரஜினி ஆலோசனை.; நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Rajini spoke to TN Chief Minister regarding Corona கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக அரசு.

ஆனால் நோய் தொற்று பரவலாக அதிகரித்து வருவதால் தினம் தினம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனையடுத்து நாளை ஜீன் 19 முதல் 30 வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்ககப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரிடம் போனில் தொடர்பு கொண்டு கொரோனா நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் அப்படியொரு செய்தி பதிவாகவில்லை.

ஆனால் முதலமைச்சரிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் பேசவில்லை என தெரிய வந்துள்ளது.

ஆனால் ஏன்? இதுபோன்ற தவறான செய்திகள் வலம் வருகின்றன என்பது தான் புரியாத புதிராகவே உள்ளது.

Did Rajini spoke to TN Chief Minister regarding Corona

ஜகமே தந்திரம் ஸ்டைலில் விக்ரம்60 படத்திற்கு பெயரிட்ட கார்த்திக் சுப்பராஜ்

ஜகமே தந்திரம் ஸ்டைலில் விக்ரம்60 படத்திற்கு பெயரிட்ட கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Is Thiravukol Mandhirvadhi the title of Vikram 60 filmவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படம் கொரோனா பிரச்சினைக்கு பிறகு வெளியாகவுள்ளது.

விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் தற்போது தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடிக்கவுள்ளார் விக்ரம்.

இப்படத்திற்கு தற்காலிகமாக சியான் 60 என்று பெயரிட்டுள்ளனர்.

லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி என்ற தலைப்பு வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ஜகமே தந்திரம் என்று பெயரிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

Is Thiravukol Mandhirvadhi the title of Vikram 60 film

More Articles
Follows