‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ சரியா.? விடை சொல்லும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ சரியா.? விடை சொல்லும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கும் “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேர்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தை கூறி பெரும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படி அமைந்துள்ளது.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு படம் எப்படி இருக்குமென்கிற பெரும் ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தினை தமிழில் ஒரு புதியதாக “ Duplex “ என்ற வகையின் உருவாகும் படம் என்று கூறியுள்ளனர்.

இந்த வகை இரட்டை நிலையில் இருப்பதை குறிப்பது. உதாரணத்திற்கு ஒரு வீடு இரு வாசல் என்பதே இதன் சாராம்சம்.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக இருக்கும்.

இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரோகினி . R S கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால் மற்றும் நக்கலைட்ஸ் தனம் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை திரையுடன் ஒன்றிபோக செய்யும், பொழுதுபோக்கு படமாக அமையும் என படக்குழு உறுதியாக நம்புகின்றனர். சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

“ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, படக்குழு படத்தினை முடித்து, தணிக்கை (UA) சான்றிதழையும் பெற்றுவிட்டது. இருந்தபோதிலும், படக்குழு படத்தின் தலைப்பை மாற்றபோவது இல்லை, முதலில் வைக்கப்பட்ட அதே பெயரில் படத்தினை வெளியிட போகிறார்கள். படம் ஒரு பக்கத்தை சார்ந்ததாக இருக்காது இரண்டு பக்க நியாயங்களை கூறுவதாக இருக்கும் என படக்குழு உறுதியாய் கூறுகிறார்கள்.

இந்த கருவில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி படம் பேசும். இயக்குனர் பிரபு ஜெயராம் படத்திற்காக நிறைய தரவுகளை ஆராய்ந்து அதன்படி படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார்.

கும்பகோணம் மற்றும் சென்னையை சுற்றிய பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடத்தபட்டது. பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த RS கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

படம் முழுக்க முழுக்க கதையை மையப்படுத்தி நகரும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும், ஹீரோ-ஹீரோயின்-வில்லனை மையப்படுத்தி நகரும் படமாக இருக்காது என படக்குழு கூறியுள்ளது.

படத்தின் இசை, ட்ரெயிலர் மற்றும் திரையரங்கு வெளியீடு பற்றி Passion Studios விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்ப குழு விபரம்

குணா பாலசுப்ரமணியம்- இசை
அருண் கிருஷ்ணா – ஒளிப்பதிவு
பிரகாஷ் கருணாநிதி- படதொகுப்பு
Teejay – கலை இயக்கம்
கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு – பாடல் வரிகள்
தேஜா- மேக்கப்
கிருஷ்ணன் சுப்ரமணியம்- ஒலிப்பதிவு
பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன்- பாடகர்கள்
அருண் உமா- டப்பிங் இன்ஞ்னியர்
ராம் பிரசாத் – ஸ்டில்ஸ்
ஶ்ரீராம் -DI

Critics praises Ennanga sir unga sattam movie first look posters

அஜித் பட ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையானார் கீர்த்தி சுரேஷ்

அஜித் பட ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையானார் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியாக ‘சாணி காயிதம்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி தங்கையாக ‘போலா சங்கர்’ படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி.

இது அஜித் & லெட்சுமி மேனன் நடித்த ‘வேதாளம்’ பட ரீமேக் ஆகும்.

ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு ‘போலா சங்கர்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

அந்த போஸ்டரில் சிரஞ்சீவிக்கு ஒரு தங்கையாக ராக்கி கட்டி விடுகிறார் கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthy Suresh is on board for Chiranjeevi’s next film

ஹீரோவாகும் ஆசையில் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்..?

ஹீரோவாகும் ஆசையில் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ்.

இவர் தற்போது திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் அமேசான் ப்ரைமுக்காக புகழ் நடித்துள்ள ‘லொள்ளு’ சீரிஸ் புரோமோஷனுக்காக பங்கேற்றார்.

இவருடன் பவர்ஸ்டார் மற்றும் ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது புகழிடம் ஹீரோவாகும் ஆசை இருக்கிறதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

“ஒரு காமெடியனாக இருந்து மக்களை சிரிக்க வைக்கனும். கதை தான் முக்கியம்.

ஸ்கிரிப்ட்டுக்கு தேவையானால் யாரு வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம்.

ஸ்க்ரிப்டில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். கதாநாயகனாக இருப்பது முக்கியமல்ல”

என புகழ் கூறியுள்ளார்.

Cooku with Comali fame Pugazh turns hero ?

ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் கோரிய சிவசங்கர் பாபா.; அப்போ குழந்தைகள் பெற்றது எப்படி.?

ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் கோரிய சிவசங்கர் பாபா.; அப்போ குழந்தைகள் பெற்றது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சாமியார் சிவசங்கர் பாபா.

இவர் தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஆண்மையற்றவர் என கூறி ஜாமீன் கோரியது அம்பலமாகியுள்ளது.

சிபிசிஐடி விசாரணையின்போது வாக்குமூலம் அளிக்கும் போது தான் ஆண்மையற்றவர் என சாமியார் சிவசங்கர் பாபா இந்த தகவலைக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியது அம்பலமாகியுள்ளது.

இவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சிவசங்கர் பாபாவுக்கு ஏற்கனவே ஒரு மகன், ஒரு மகள் இருப்பதையும், அவர்கள் அமெரிக்காவில் வசிப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது தொடர்பான கேள்வியும் எழுப்பியது.

சிவசங்கர் பாபாவுக்கு மகன், மகள் இருக்கையில் ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? எனக் கூறிய நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

High Court denies bail to POCSO case accused Siva Shankar Baba

இரு மொழிகளில் ரிலீசாகும் கிரைம் திரில்லர் SIDDY.; முக்கிய கேரக்டரில் இந்திய கால்பந்தாட்ட வீரர் விஜயன்

இரு மொழிகளில் ரிலீசாகும் கிரைம் திரில்லர் SIDDY.; முக்கிய கேரக்டரில் இந்திய கால்பந்தாட்ட வீரர் விஜயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும்,
மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விருவிறுப்பானவகையில் படமாக்கப்பட்டுள்ளது.

கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

மலையாள சினிமாவில் இயக்குனரும்,
ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. விஜயன் போலீஸ் அதிகரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை Surya film productions சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.

பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சுற்றுளாதலமான கோவளம் மற்றும், திருவனந்தபுரம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்திற்கு ரமேஷ் நாராயன் இசை அமைக்கிறார்.. இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று கொச்சியில் நடைபெற்றது.

IM Vijayan plays important role in crime thriller Siddy

பார்த்திபன் கௌதம் நடிப்பில் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் நாவலை படமாக்கும் எழில்

பார்த்திபன் கௌதம் நடிப்பில் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் நாவலை படமாக்கும் எழில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களில், சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில், முதல் முறையாக தன் பணியிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படத்தை, இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் இயக்கி வருகிறார்.

தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.

“யுத்த சத்தம்” படம் குறித்து இயக்குநர் எழில் கூறியதாவது…

“யுத்த சத்தம்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாகும். முதல் காரணம் இது என் வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து மாறுபட்டு, மிகவும் நேர்த்திகரமாக உருவாகும் படைப்பு.

நான் இதுவரையிலும் மென் உணர்வுகளை கூறும் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படங்களையே செய்து வந்துள்ளேன்.

ஆனால் இப்படம் மர்மம் நிறைந்த, பரப்பான திரில்லர் திரைப்படம் ஆகும்.

இது திரில்லர் வகையில் மட்டும், என் படங்களிலிருந்து மாறுபட்டதல்ல, படத்தின் உருவாக்கத்திலேயே என் படங்களிலிருந்து முற்றிலும் புதிதானதாக இருக்கும்.

“யுத்த சத்தம்” தலைப்பு படத்தின் கதை உருவான ராஜேஷ்குமார் அவர்களின் நாவலின் அதே தலைப்பாகும்.

படம் அவரது கதையிலிருந்து வேறுபடாமல் சிறப்பாக வந்திருப்பதாக என்னை பாராட்டவும் செய்தார். நான் உதவி இயக்குநராக, நடிகர் பார்த்திபன் அவர்களுடன் பணிபுரிந்துள்ளேன் இப்போதும் அவர் திரைக்கதையில் மாயாஜாலம் புரிந்து, இயக்குநராக அசத்தி வருகிறார். அவரை திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் மிகத்திறமை வாய்ந்த இளம் நடிகர், இப்படத்தில் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி அசத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார்.

இயக்குநர் எழில் இயக்கிய இந்த திரைப்படத்தை , முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார்.

யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து “யுத்த சத்தம்” படத்தை தயாரிக்கின்றனர்.

Parthiban and Gautham Karthik joins for Director Ezhil’s next

More Articles
Follows