அரசாங்கமே திருடுகிறது: விழித்தெழுவோம் மக்களே… கமல் எச்சரிக்கை

அரசாங்கமே திருடுகிறது: விழித்தெழுவோம் மக்களே… கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanநடிகர் கமல்ஹாசன் முழு மூச்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது தன் ரசிகர்களையும் மக்களையும் இணைக்கும் வகையில் மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார்.

மேலும், விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தற்போதுள்ள அரசை பற்றி விமர்சித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே.

ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது.

மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்

எனக்கு பிறகு சீமத்துரை டைரக்டர்தான் அப்படி செய்திருக்கிறார்.. மிஷ்கின்

எனக்கு பிறகு சீமத்துரை டைரக்டர்தான் அப்படி செய்திருக்கிறார்.. மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemathurai audio launch stillsபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள்.

குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவராகிய நடிகை விஜி சந்திரசேகரும் வந்திருந்து விழாவை சிறப்பாக்கினார்.

இயக்குநர் மிஷ்கின், தனது வழக்கமான பேச்சு நடையால் விழாவை கலகலப்பாக்கினார். “பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம்.

விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன்.

இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது.

தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.

இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார். ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான்.

பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதை குறைத்திருக்கலாம்.

ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.” என்று பேசி முடித்தார்.

விஜி சந்திரசேகர், “இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன்.

இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன்.

ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன். நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவுவது நல்லது. சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, “கோயில் திருவிழாக்களில் எத்தனை கடைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும் யானையை எல்லோரும் வியப்பாக பார்ப்பார்கள்.

அப்படி இந்த சீமத்துரை படத்தில் இந்த இளைஞர் படைக்கு நடுவில் யானையாக விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவர் மதயானை கூட்டம் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்தார், அப்போதே அவர் நடிப்பில் வியந்திருக்கிறேன்.

நிச்சயம் இந்த படத்திலும் மதயானை கூட்டம் படத்தில் வருவது போல வலுவான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருப்பார்.

கதாநாயகன் கீதன் மிக அழகாக இருக்கிறார், அவரது சிரிப்பு எல்லோரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கிறது. அவர் நிச்சயமாக சாதிப்பார்.

அதே போல் வர்ஷா பொல்லம்மாவும் அழகாக இருக்கிறார். இருவருக்கும் என் வாழ்த்துகள். பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று பேசினார்.

Mysskin speech at Seemathurai audio launch

seemathurai stills

 

 

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இரண்டு பெரிய ஸ்டார்கள்

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இரண்டு பெரிய ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamoulis next film to feature Ram Charan and Jr NTRபல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ராஜமௌலி கடந்த ஆண்டு பாகுபலி2 என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட படத்தை கொடுத்திருந்தார்.

எனவே அவரின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

யாருடைய படத்தை அடுத்து அவர் இயக்கப்போகிறார்? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அந்த போட்டோவில் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் ராஜமௌலியுடன் அமர்ந்துள்ளனர்.

எனவே ராஜமௌலியின் அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இப்படத்தை ராஜமௌலி தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Rajamoulis next film to feature Ram Charan and Jr NTR

ramcharan rajamouli junior NTR

இணையத்தில் வைரலாகும் சீயானின் சிக்ஸ் பேக் போட்டோ

இணையத்தில் வைரலாகும் சீயானின் சிக்ஸ் பேக் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaan Vikrams Six pack photo goes viral on Social Mediasதான் நேசிக்கும் சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து வருபவர் நடிகர் சீயான் விக்ரம்.

ஒவ்வொரு படத்திற்கும் இவர் மேற்கொண்டு வரும் சிரமங்கள் தமிழ் சினிமாவையே பெருமைப்பட வைக்கிறது.

இந்நிலையில் இவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

அதில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் ஒரு டவல் கட்டியுள்ளார்.

அந்த படம் ரசிகர்களை கவரவே, தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

Chiyaan Vikrams Six pack photo goes viral on Social Medias

சஜன் சகஜமாக ரொமான்ஸ் சொல்லிக் கொடுத்த அஞ்சனா கீர்த்தி

சஜன் சகஜமாக ரொமான்ஸ் சொல்லிக் கொடுத்த அஞ்சனா கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sajan Anjana Keerthy starrer Yaagan movie updates‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார்.

படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்க, முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது இந்த ‘யாகன்’.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற தனது தீராத ஆர்வம் குறித்தும், ‘யாகன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பட நாயகன் சஜன்.

“நினைவு தெரிந்த நாளில் இருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை பார்த்து பார்த்து, நடிக்கவேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே எனக்குள் வந்துவிட்டது.

டென்மார்க்கில் சில குறும்படங்களில் நடித்துள்ளேன்.. தமிழில் நடிகனாக அறிமுகமாக வேண்டும் என இங்கே வந்தபோது வினோத் தங்கவேல் சொன்ன இந்த ‘யாகன்’ கதை என்னை கவர்ந்தது.

இங்கே கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.

சிறுவயதில் இருந்தே டான்ஸ் கற்றுக்கொண்டதாலும், நிறைய மேடைகளில் நடனமாடி பரிசுகள் பெற்றதாலும் இங்கே பாடல் காட்சிகளில் நடிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

நான்கு நாட்கள் திட்டமிட்ட பாடலை இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க அது உதவியது.

ஆனால் நடனம் எளிதாக வந்ததைப்போல, ரொமான்ஸ் காட்சிகளில் அவ்வளவு எளிதாக என்னால் ஆரம்பத்தில் பொருந்தமுடியவில்லை.. கூச்சமாக இருந்தது.

எனது தந்தை கூட முதலில் நான் சிரமப்படுவதை பார்த்து ‘உனக்கு இது புதிது தானே’ என்றார்.

அவர் சினிமாவில் நடிப்பதை சொல்கிறாரா இல்லை ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதை சொல்கிறாரா என்று எனக்கு கொஞ்சம் குழப்பமாக கூட இருந்தது.

ஆனால் படத்தின் நாயகி அஞ்சனா கீர்த்தி எனது கூச்சத்தை போக்கி நடிப்பதற்கு உதவி செய்தார். தொடர்ந்து வந்த நாட்களில் ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்தேன்.

எந்தளவுக்கு என்றால் அந்தக்காட்சிகளை படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் என் தந்தை நிற்கிறார் என்பதே எனக்கு மறந்துபோகும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளேன்.

படக்குழுவினர் கூட எனக்கும் கதாநாயகிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக பாராட்டினார்கள்.

சண்டைக்காட்சிகள் தான் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டது.. ஒருமுறை மேலிருந்து ஜம்ப் பண்ணும்போது என் கழுத்தை சுற்றி கயிறு வீசும் காட்சி படமாக்கப்பட்டது.

முதல் தடவை பண்ணும்போது டைமிங் கொஞ்சம் மிஸ்ஸாகி கயிறு என் கழுத்தை இறுக்கி கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பினேன்.

ஆனால் அடுத்த காட்சியிலேயே அதில் வெற்றிகரமாக நடித்து முடித்து மாஸ்டரிடம் பாராட்டு பெற்றேன்.

அதேமாதிரி இந்தப்படத்தின் கேரக்டர் இதுதான் என இயக்குனர் சொல்லிவிட்டாலும், அதில் எந்தமாதிரி நடிக்கலாம் என அந்த மூடுக்கு ஏற்றவாறு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

ஹாலிவுட்டில் இதை மெத்தேட் ஆக்டிங் என்பார்கள். குறிப்பாக படத்தின் பாடல்களை முன்கூட்டியே கேட்டு வாங்கி ஒவ்வொரு காட்சிக்கான மூடுக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

ஆரம்பத்தில் இயக்குனர் கூட என்னடா இவன் பாடல்களை எல்லாம் தேவையில்லாமல் முன்கூட்டியே கேட்டு வாங்கி, அதிகம் தலையிடுகிறானே என்று நினைத்தார்.

ஆனால் இதற்காகத்தான் என நான் விளக்கம் சொன்னதும் அவரும் புரிந்துகொண்டு ‘அட இது நல்லா இருக்கே’ என எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் தான் நடந்தது. இங்கே கிராமத்தில் ஒவ்வொருவரும் உறவுகளுக்கு கொடுக்கும் அன்பும் மரியாதையும் அவர்களின் ஒற்றுமையும் பார்த்தபோது டென்மார்க் தமிழரான எனக்கு புதிதாக, ஆச்சர்யமாக இருந்தது.

படப்பிடிப்பின்போது ஒருமுறை காய்ச்சலால் நான் அவதிப்பட்டபோது கிராமத்தில் இருந்த ஒரு பாட்டி, எனக்கு பாட்டி வைத்தியம் பார்த்து குணப்படுத்தியது மறக்கமுடியாத அனுபவம்.

இன்னொரு விஷயம் நான் இலங்கை தமிழர் என்பதால் நான் பேசும் தமிழுக்கும் இங்கே உள்ள தமிழுக்கும் குறிப்பாக கிராமத்தில் உள்ள பேச்சு வழக்கு தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன்.

அதனால் படப்பிடிப்பு நடந்த கிராமங்களில் மதிய, இரவு நேரங்களில் அப்படியே கிராமத்தை சுற்றி, அங்குள்ள மக்களுடன் பேசிப்பழகி ஓரளவு எனது பேச்சுமுறையை மாற்றிக்கொண்டேன்.

இது முதல் படம் என்பதால் எனக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியுள்ளார்.. அடுத்தடுத்த படங்களில் நானே டப்பிங் பேசும் அளவுக்கு மாறிவிடுவேன்..

யாகன் படத்தின் கதை அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை பற்றியது. நிஜத்தில் சொல்லவேண்டுமென்றால் எனது தந்தை யோகராஜா சின்னத்தம்பி (இந்தப்படத்தின் தயாரிப்பாளர்) சினிமாவில் தீராத ஆர்வம் கொண்டவர்.
ஆனால் அவர் காலத்தில் சினிமாவுக்குள் அவரால் நுழைய முடியவில்லை.. அதேசமயம் எனக்குள் அந்த ஆசை இருப்பதை உணர்ந்து, என்னை நடிகனாக்க தமிழ் சினிமாவில் களம் அமைத்து கொடுத்துள்ளார்.

இந்தப்படத்தில் நடித்த அனுபவத்தை வைத்து சொல்லவேண்டும் என்றால் இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.. நம் தொப்புள் கொடி உறவுகள் என்னையும் தங்கள் பிள்ளையாகக் கருதி வெற்றிப் படிகளில் ஏற்றி வைப்பார்கள் , மனதார ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்” என்கிறார் சஜன் நம்பிக்கையாக.

Sajan Anjana Keerthy starrer Yaagan movie updates

yaagan

சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara celebrated her Birthday with Sivakarthikeyan and Velaikkaran teamதமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறக்கும் நடிகை என்றால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான்.

ஹீரோவுக்கு இணையான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து அசத்தி வருகிறார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான அறம் படம் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இவரது நடிப்பில் வேலைக்காரன், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளன.

இந்நிலையில் இவர் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடந்த வேலைக்காரன் பட பிரிவு விழாவில் சர்ப்ரைஸாக நயன்தாராவின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடினர்.

இதில், சிவகார்த்திகேயன், இயக்குனர் மோகன் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு கேக் ஊட்டி விட்டார். அதே போன்றும், நயன்தாராவும், சிவகார்த்திகேயனுக்கு கேக் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Nayanthara celebrated her Birthday with Sivakarthikeyan and Velaikkaran team

velaikkaran farewell day

More Articles
Follows