ஆர்கே. நகர் அப்டேட்ஸ்: ஜெ. அண்ணன் மகள் தீபா-விஷால் மனுக்கள் நிராகரிப்பு

ஆர்கே. நகர் அப்டேட்ஸ்: ஜெ. அண்ணன் மகள் தீபா-விஷால் மனுக்கள் நிராகரிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepa and vishalஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

31 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதில் விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

விஷால் மனுவில் கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் கூறினார்.

இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாக கூறப்படுகிறது.

இவரைப் போல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அவரது வேட்புமனுவில் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஞானவேல்ராஜா திடீர் ராஜினாமா

தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஞானவேல்ராஜா திடீர் ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer gnanavel rajaசூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்தவர் ஸ்டூடீயோ க்ரீன் நிறுவனர் ஞானவேல்ராஜா.

இவர் விஷால் தலைமையிலான அணியில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ஆனார்.

இந்நிலையில் இவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏனென்றால், சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் வேறு திரைப்பட துறை சார்ந்த சங்கங்களில் நிர்வாக பதவிகளில் இருக்க கூடாது என்பது சங்க விதிமுறையாகும்.

அதனால் தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பதவியை

ஞானவேல்ராஜா ராஜினாமா செய்திருக்கிறாராம்.

சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தலைவர் பொறுப்புக்கு தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

சந்தானம் படத்தில் இசையமைப்பாளர் சிம்பு; யாருக்கு அதிக சம்பளம்..?

சந்தானம் படத்தில் இசையமைப்பாளர் சிம்பு; யாருக்கு அதிக சம்பளம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VTV Ganesh reveals Simbu or Santhanam Who got bigger salaryசேதுராமன் இயக்கத்தில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு.

இப்படத்தின் பாடல்களை நாளை தனுஷ் வெளியிட பிரம்மாண்ட முறையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று சந்தானம், ரோபோ சங்கர் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது விடிவி கணேஷிடம் பேசும்போது…

சிம்பு மிகப்பெரிய நடிகர். அவர் எங்கள் படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டது மகிழ்ச்சி.

ஆனால் அவருக்கு படத்தின் ஹீரோ சந்தானத்தை விட குறைவான சம்பளம்தான் கொடுத்தேன்.” என்று தெரிவித்தார்.

VTV Ganesh reveals Simbu or Santhanam Who got bigger salary

விஜய்-சூர்யா படங்கள் மாபெரும் சாதனை; ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்-சூர்யா படங்கள் மாபெரும் சாதனை; ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya2017 ஆண்டின் கோல்டன் தருணங்கள் என்ற பட்டியலை ட்விட்டர் தளம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய ட்விட்டர் பயனானிகள் அதிகம் விவாதித்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழில் மெர்சல் படத்துக்கு முதன்முதலாக ட்விட்டர் இமோஜி என்கிற ட்விட்டர் சின்னம் கிடைத்தது.

இது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்றும், அதன் மூலம் மூன்று நாட்களில் 1.7 மில்லியன் ட்வீட்டுகள் பதிவேற்றப்பட்டன என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதனால் #Mersal என்ற ஹாஷ்டாக், இந்த வருடத்தின் முதன்மை ஹாஷ்டாக் ட்ரெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை தனது பக்கத்தில் வெளியிட்டார் சூர்யா.

இது கோல்டன் ட்வீட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 2017, இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் இது. மொத்தம் 68,856 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Mersal and Thaana Serndha Kootam movies made record in Twitter 2017

நயன்தாரா வெற்றிக்கு அவரது குணம்தான் காரணம்..: சிவகார்த்திகேயன்

நயன்தாரா வெற்றிக்கு அவரது குணம்தான் காரணம்..: சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

வழக்கம்போல நாயகி நயன்தாரா இந்த விழாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் நயன்தாரா பற்றி சிவகார்த்திகேயன் பேசினார்.

அவர் பேசியதாவது….

அஜித் நடித்த ஏகன் படத்தின் சூட்டிங்கின்போதுதான நான் நயன்தாராவை முதன்முதலில் பார்த்தேன்.

அதன்பின்னர் எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய போது அவரை சந்தித்தேன்.

அதன்பின்னர் 3வது முறையாக வேலைக்காரன் சூட்டிங்கில்தான் அவரை நேரில் சந்தித்தேன்.

இன்றும் அவர் மிகப்பெரிய நடிகையாக வந்துவிட்ட போதிலும் அந்த நேரம் தவறாமை மற்றும் நேர்மை அவரிடம் உள்ளது.

இன்றும் அதே குணத்துடன் இருக்கிறார்.” என்று பேசினார்.

வெங்கட்பிரபு-பிரேம்ஜியின் தந்தை ஆஸ்பத்தியில்அனுமதி

வெங்கட்பிரபு-பிரேம்ஜியின் தந்தை ஆஸ்பத்தியில்அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gangai amaren stillsநடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தமுறை ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட கங்கை அமரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் என்பவர் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

More Articles
Follows