ஷாஹித் கபூர் – விஜய்சேதுபதி இணையும் ‘ஃபார்ஸி’ ரிலீஸ் தேதி அப்டேட்

ஷாஹித் கபூர் – விஜய்சேதுபதி இணையும் ‘ஃபார்ஸி’ ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஃபார்ஸி.

இதில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது.

மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இது பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.

செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது.

அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.

சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி -யை எழுதியுள்ளனர்.

படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டிகே கூறுகையில்..

“தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளிடையே பயனித்துப் படமாக்கியுள்ளோம்.” என்றார்.

Crime Thriller Farzi Starring Shahid Kapoor and Vijay Sethupathi release updates

இது வதந்தி அல்ல.; பிரின்ஸ் பிக்சர்ஸ் உடன் இணையும் ஆண்ட்ரூ லூயிஸ்

இது வதந்தி அல்ல.; பிரின்ஸ் பிக்சர்ஸ் உடன் இணையும் ஆண்ட்ரூ லூயிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘சிங்கம் 2’.. கார்த்தி நடித்த ‘தேவ்’ & ‘சர்தார்’.. சசிகுமார் நடித்த ‘காரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது தங்களது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களது புதிய படத்தை இயக்குபவர் ஆண்ட்ரூ லூயிஸ்.. இவர் விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைக்காரன்’ படத்தை இயக்கியவர்.

சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘வதந்தி’ என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஆண்ட்ரூ லூயிஸ் இணையும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று ஜனவரி 5ல் வெளியிட்டுள்ளனர்.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.@Prince_Pictures excitedly
announce that they have signed #Kolaigaran and #Vadhandhi fame director @andrewxvasanth for his next film in Tamil. More details soon.

@lakku76 @venkatavmedia @johnmediamanagr https://t.co/q2RrpZbKpw

Prince pictures have signed director andrews for his next

நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பை துவங்கிய சமந்தா . வைரலாகும் புகைப்படம்

நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பை துவங்கிய சமந்தா . வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தாவைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அந்த அழகான பெண் சாகுந்தலம் படத்திற்கு டப்பிங் பேசத் தொடங்கியுள்ளார், மேலும் தனது சமூக ஊடக சுயவிவரத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் இன்ஸ்டாகிராமில் : “இந்த பைத்தியக்காரத்தனம், சோகம் மற்றும் உலகில் உள்ள இழப்புகள் அனைத்திற்கும் கலை எனது மருந்து. அதன் மூலம் நானே வீட்டிற்குச் செல்வேன். -நிக்கி ரோவ் #ஷாகுந்தலம்”

என பகிர்ந்து டப்பிங்கை தொடங்கிய சமந்தாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Samantha resumes work after long time – photo goes viral

மருத்துவமனையில் இருந்து மார்வெல் ஸ்டார் கொடுத்த ஹெல்த் அப்டேட்

மருத்துவமனையில் இருந்து மார்வெல் ஸ்டார் கொடுத்த ஹெல்த் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட கடுமையான விபத்தைத் தொடர்ந்து ‘அவெஞ்சர்ஸ்’ நடிகர் ஜெர்மி ரென்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஜனவரி 2 ஆம் தேதி நடிகரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், புதன்கிழமை தனது உடல்நலம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார் . அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்து ஒரு செல்ஃபியை பதிவிட்டு, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் அன்பை அனுப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Marvel star gives health update on social media after being hospitalised

டாப் ஹீரோவுடன் நடிக்கும் புதிய படத்திலிருந்து வடிவேலு விலகல்?

டாப் ஹீரோவுடன் நடிக்கும் புதிய படத்திலிருந்து வடிவேலு விலகல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளதாக வைகை புயல் வடிவேலுவே உறுதிப்படுத்தினார்.

தற்போது ஆறுமுக குமார் தயாரித்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒரு ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகைப் புயல் பட்ஜெட்டை விட மிகப் பெரிய சம்பளத்தைக் கேட்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் சமீபத்தில் வெளியான நாயி சேகர் ரிட்டன்ஸ் உம் பெரிதாக ஓட வில்லை இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

Vadivelu out of new movie with top hero?

இளையராஜாவின் பழைய பாட்டை வைத்தே ‘சாமானியன்’ ராமராஜனை சமாளித்த இயக்குனர்

இளையராஜாவின் பழைய பாட்டை வைத்தே ‘சாமானியன்’ ராமராஜனை சமாளித்த இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980-90களில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.

இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.

தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ்.

இவர் இதற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தயாரிப்பாளர் V.மதியழகன் இயக்குநர் R.ராகேஷ் ஆகியோருடன் சென்று இசைஞானி இளையராஜாவை சந்தித்து தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நாயகன் ராமராஜன்.

இந்த சந்திப்பின்போது படப்பிடிப்பு குறித்து பல விவரங்களை இசைஞானி இளையராஜா கேட்டு அறிந்துகொண்டார். இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என இயக்குநர் ராகேஷ் கூற, மொத்த படமும் முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்குவதாக உறுதி அளித்தார் இளையராஜா.

இசைஞானி இன்னும் பாடல்கள் கொடுக்காத நிலையிலேயே ஒரு பாடலுக்கான காட்சிகளை படமாக்கிவிட்டு வந்ததாக இயக்குநர் ராகேஷ் கூற ஆச்சரியப்பட்டு போனார் இளையராஜா. அப்போது அவரிடம் இதுவரை எங்களுக்காக ஒரு லட்சம் பாடல்கள் தந்து இருக்கிறீர்கள்..

அதில் ஒரு பாடலை வைத்து கதைக்குப் பொருத்தமான காட்சிகளை படமாக்கி விட்டோம் என்று கூற அவர்களை பாராட்டியுள்ளார் இளையராஜா.

இந்தப்படத்தில் ராமராஜனுடன் முக்கிய வேடங்களில் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, லியோ சிவா, நக்ஷா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி உள்ளிட்ட 25 பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார்.

விரைவில் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி நான்கே நாட்களில் நிறைவடைய இருக்கிறது.

The director tackled Ramarajan with ‘Samanian’ based on Ilayaraja’s old song

More Articles
Follows