தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கொரோனா 3வது அலை மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. கொரோனா தொற்றின் வேகமும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வருவதால் ஷாப்பிங் மால்களில் & தெரு கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதனால் சமூக இடைவெளியை மக்கள் காற்றில் பறக்கவிடுகின்றனர். இதனால் கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது.
எனவே ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிகளில் மீன் வியாபாரத்துக்கு தடை விதிப்பது குறித்து, சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறதாம்
மேலும் தி.நகர் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மக்கள் கூடுவதால், தடுப்பு வேலிகளை அமைத்து, கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது..
சென்னையில் தினசரி, 22 ஆயிரம் முதல், 25 ஆயிரம் பேருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒரு குடும்பத்தில், ஒருவர் பாதிக்கப்பட்டால், அக்குடும்பத்தில் மூன்று பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் குடும்ப தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
எனவே, வெளியே செல்லும் போது, தங்கள் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்”.
இவ்வாறு சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் கூறினார்.
Covid restriction again in chennai city ?
