WhatsApp Status 15 நொடியாக குறைய இதான் காரணம்; பாத்து செய்யுங்கப்பு

WhatsApp Status 15 நொடியாக குறைய இதான் காரணம்; பாத்து செய்யுங்கப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

COVID 19 WhatsApp reduces Status video time to 15 seconds கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளிலும் இது போன்ற நடவடிக்கைகள் உள்ளதால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிகின்றனர். இதனால், இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
செல்போனிலேயே தங்கள் நேரத்தை கழிக்கின்றனர்.

மேலும் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

அதே சமயத்தில் கொரோனா குறித்த வரும் தகவல் உண்மையா? என ஆராயாமல் பார்வேட் செய்கின்றனர்.

இதனால் தவறான தகவல்களும் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

இதனால் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த, வாட்ஸ் அப் வீடியோ ஸ்டேட்டஸ்க்கான கால அளவு குறைத்துள்ளது.

இதற்கு முன்பு வரை 30 நொடிகள் வீடியோ ஸ்டேட்டஸ் இருந்தது. ஆனால், தற்போது முதல் 15 நொடிகளே வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

மேலும் பல செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் இண்டர்நெட் டேட்டாவை பார்த்து சிக்கனமாக பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்தனர்.

ஆக.. மக்களே பாத்து செய்யுங்கப்பா…

COVID 19 WhatsApp reduces Status video time to 15 seconds

BREAKING ஆயுதமின்றி வீரர்களை போருக்கு அனுப்பலாமா.? அரசுக்கு கமல் கேள்வி

BREAKING ஆயுதமின்றி வீரர்களை போருக்கு அனுப்பலாமா.? அரசுக்கு கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal request to Govt regarding Medical equipment for Doctorsஉலகமெங்கும் கொரோனா வைரஸ் தன் கோரதாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால் பல உயிர்கள் தினம் தினம் செத்து மடிகிறது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 1 வாரம் ஆகி விட்டநிலையில் மக்கள் வெளியே சென்றுவருவதால் இதன் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது.

ஒரு பக்கம் மருத்துவர்கள் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த போராடி கொண்டிருக்க மற்றொரு பக்கம் வெட்டியாக வெளியே திரியும் மக்களை கட்டுப்படுத்த காவல்துறை போராடி வருகிறது.

துப்புரவு தொழிலாளர்களும் பத்திரிகையாளர்களும் கொரோனா பீதியிலும் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமங்லஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் கூறியுள்ளதாவது…

Kamal Haasan
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

என அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

Kamal request to Govt regarding Medical equipment for Doctors

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Daksha team is helping the TN Govt to battle Corona Virusகொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் தீவிரமாக பணியாற்சி வருகின்றனர்.

அரசின் உள்ளாட்சித் துறை மூலமாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினியும் வீதி வீதியாக தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியானது பெரிய பணி என்பதால் சுகாதாரத் துறை பணியாளர்களைக் கொண்டு முழுமையாக செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

ட்ரோன்களிலும் வைத்து பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?

இந்த நிலையில் உள்ளாட்சி துறைக்கு உதவிடும் வகையில் நடிகர் அஜித் ஆலோசனை வழங்கிய தக்ஷா என்ற அமைப்பைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலரும் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Ajiths Daksha team is helping the TN Govt to battle Corona Virus

கையாலாகாத பேரனாய்… பரவை முனியம்மாவுக்கு அபி சரவணன் அஞ்சலி

கையாலாகாத பேரனாய்… பரவை முனியம்மாவுக்கு அபி சரவணன் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abi Saravanan attend Paravai Muniammas death funeral இன்று அதிகாலை மரணமடைந்த நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நடிகர் அபி சரவணன்.

பரவை முனியம்மா அவர்களின் இறுதி காரியங்கள் முடியும் வரை அங்கேயே இருந்து தற்போது தான் மதுரை புறப்பட்டார்.

அபி சரவணன் முக புத்தக பதிவில் இருந்து..

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பரவை முனியம்மா வீட்டில் இருந்து ஒரு போன். இரண்டு மணிக்கு போன் என்பதால் பயத்துடன் எடுத்தபோது பரவை முனியம்மா அவர்களுக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக தகவல் வந்தது.

பரவை முனியம்மா நலம் பெற்று வருகிறார்..; வதந்திகளை நம்பாதீர்

உடனடியாக அடுத்த போன் அம்மாவின் உயிர் பிரிந்தது என்று தகவல் வந்தது. அதிர்ந்துபோனேன்.. உடைந்து போனேன்.. அப்பத்தாவின் இறுதி மூச்சு பிரிந்ததை அறிந்து இறுக்கத்துடன் கிளம்பினேன் .

ஒரு மாலை கூட வழியில் வாங்க இயலாத கையாலாகாத பேரனாய் பரவை முனியம்மா பாட்டியை பார்க்க சென்றேன்.

சென்ற வழி எல்லாம் நினைவுகள் அபி அபி என்று அழைக்க வந்த ஆறுதலான வார்த்தைகள், அன்பான சிரிப்பு. இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்த போது கூட அபி தைரியமாக கோர்ட்டுக்கு சென்று வா. அப்பாத்தா நான் இருக்கிறேன் எதுவானாலும் பார்க்கலாம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதல் கொடுத்தார். இன்று உயிரோடு இல்லை.

இறுதி ஊர்வலம் இடுகாடு இறுதி மரியாதை இன்றுடன் எல்லாமே முடிந்தது.

கண்ணீருடன் பேரன் அபி சரவணன்.

Abi Saravanan attend Paravai Muniammas death funeral

மக்களை காக்க கொரோனா யாகம் நடத்திய ரோஜா செல்வமணி

மக்களை காக்க கொரோனா யாகம் நடத்திய ரோஜா செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attackகொரோனா வைரஸ் தன் தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் போராடி வருகின்றனர்.

மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார்.

இந்து மதம் இருப்பதால் கொரானா பாதிப்பு இந்தியாவில் இல்லை.; சூர்யா கார்த்தி பட நடிகை விளக்கம்

தன் தொகுதி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்மணிக்கு சிகிச்சை கொடுக்க வசதி இல்லாததால் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு தனது சொந்த காரில் அந்த பெண்ணை அனுப்பி வைத்திருந்தார் ரோஜா.

தற்போது ஆந்திராவிலுள்ள தனது இல்லத்தில் கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து கொரோனாவிலிருந்து கடவுள் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சிறப்பு யாகத்தை நடத்தியிருக்கிறார் ரோஜா.

Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attack

Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attack

ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?

ரஜினி படத்தை முடித்து விட்டு மீண்டும் அஜித்துடன் இணையும் சிவா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siva plans to join with Thala Ajith for 5th Timeசில ஆண்டுகளுக்கு முன் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வரிசையில் சரண் இருந்தார்.

தற்போது அந்த வரிசையில் சிவா இடம் பிடித்துள்ளார்.

அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட 4 படங்களை அடுத்தடுத்து இயக்கியிருந்தார் சிவா.

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூர்யா படத்தை சிவா இயக்குவார் எனவும் அந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அஜித்தின் தக்ஷா குழு

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்க சென்றுவிட்டார் சிவா.

இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர்.

தற்போது கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ரஜினி அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறாராம் சிவா.

Siva plans to join with Thala Ajith for 5th Time

More Articles
Follows