விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை.; வீட்டிலேயே வணங்க உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் நீர்நிலைகளில் கடவுள் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறிய வழிப்பாட்டு தலங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் வழிப்பாடு நடத்த அனுமதி.

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை என என்ற உத்தரவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு கலவரம் : 3 மரணம்; 150 பேர் கைது.. சேதப்படுத்தியவர்களிடம் நஷ்ட ஈடு பெறும் அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்காள் மகன் நவீன் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையானது. இதனால் கோபமடைந்த இஸ்லாமிய மக்கள் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.

குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால், உயிர் தப்பினர்.

நவீன் வீட்டுக்கும், கோவிலின் நிர்வாகியான முனே கவுடா என்பவரின் வீட்டுக்கும் தீவைத்தனர். எம்.எல்.ஏ.வின் வீட்டு வாகனங்களுக்கும் தீக்கிரையாக்கப்பட்டது.

போலீஸ் வாகனங்களுக்கும், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல்பைர சந்திரா பகுதிகளில் தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வள்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர்.

போலீசார் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கண்ணீர்புகை வீசியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதனையடுத்து டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200 மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனையடுத்து வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாசின் பாட்‌ஷா(வயது 28), வாஜித் அகமது(25) மற்றும் நாகவாராவை சேர்ந்த சேக்சுதீன்(24) ஆகிய இளைஞர்கள் பலியானார்கள்.

இதனால் இரு தரப்புக்கு பெரும் மோதல் உருவானது.

காவல்துறை மீது வன்முறையாளர்கள் கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வன்முறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 78 பேர் காயமடைந்தனர். கிட்டதட்ட 300 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.

தற்போது, அந்த பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது.

வன்முறைக்கு வித்திட்டதாக எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த முஜாமீல் பாட்ஷா, ஆயாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் , செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி, ”குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடத்திலிருந்து உத்தரபிரதேச அரசு நஷ்ட ஈடு வசூலித்தது. அதேபோல, கர்நாடகத்திலும் வசூலிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலீசிடம் இருந்து தப்பிட முடியாது” என தெரிவித்துள்ளார்.

லாக்டவுனில் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம்.; யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ என சமூக ஆர்வலர்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதி முதல் நாடெங்கிலும் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் மூடப்பட்டன.

கிட்டதட்ட 6 மாதங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதால் இந்தாண்டு 2020 டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் எந்த அரசு பணியையும் செய்யாமல் அரசு ஆசிரியர்கள் மட்டும் லட்சணக்கணக்கில் சம்பளம் வாங்குவது சரியா? என கேள்வி நாடெங்கிலும் எழுந்துள்ளது.

ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிக்காக சில ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்படியே இருந்தாலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கு ஏன்? முழு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கேள்வியும் கூடவே வருகிறது.

கொரோனா லாக்டவுனால் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குவது எப்படி முறையாகும்? என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.

மேலும் கொரோனா பணிக்காக தமிழக அரசு கிட்டதட்ட ரூ 6000 கோடியை செலவழித்துக் கொண்டிருக்கும்போது ஆசிரியர்களுக்கு சம்பளத்தை குறைத்து அதை அரசு நலப்பணிக்களுக்காக செலவிடலாமே என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

ஒரு சில ஆசிரியர்கள்.. நாங்கள் பள்ளிக்கு சென்று வந்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு நீ போடுறீங்க என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை அள்ளி விடுகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரிலையன்ஸ் உதவியுடன் மீண்டும் இந்தியாவில் நுழையும் டிக்டாக்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் சீனா எல்லையில் போர் மூண்டது.

கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

சீன தரப்பிலும் 42 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் நாடெங்கிலும் சீனாவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்.

இதனையடுத்து ஜூன் 29-ஆம் தேதி இந்தியாவில் டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட மொபைல் ஆப்கள் தடை செய்யப்பட்டது.

இந்தியாவில் மட்டும் டிக்டாக் 20 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது.

இதனால் டிக்டாக் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’க்கு ரூ 45,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் டிக் டாக் நுழைய டிக்டாக் நிறுவனர் பைட்டான்ஸ் இந்தியாவில் டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் ஒரு முடிவுநிலையை எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

புதுச்சேரியில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு; செவ்வாய்கிழமைகளில் முழு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத புதிய உச்சமாக 481 பேர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

எனவே ஆகஸ்ட் 14 முதல் 31 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது… ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 31 வரை.. காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.

இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 25 தேதி மட்டும் (செவ்வாய்கிழமை) முழு ஊரடங்கு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் நாளை ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது புதுச்சேரியில் 254 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 9 பேர் என 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,680 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 3,828 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்கள் மூத்த குடிமக்களுக்கு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் வியாபார நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர கொண்டாடப்பம உள்ளது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூத்த குடிமக்களின் வயது மூப்பைக் கருத்தில்கொண்டும், கொரோனா நோய் தடுக்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் பத்து சுதந்திரத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.

காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.

மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக மக்கள் செய்தி தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows