தனுஷின் ‘வாத்தி’ பட ரிலீஸை தள்ளி வைத்த பஞ்சாயத்து.; நீதிமன்றம் தீர்ப்பு

தனுஷின் ‘வாத்தி’ பட ரிலீஸை தள்ளி வைத்த பஞ்சாயத்து.; நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ”திருச்சிற்றம்பலம் ‘ படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த ” நானே வருவேன் ” திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் தேவராளனின் ஆட்டத்திற்கு முன் சரணடைய நேர்ந்தது.

இருப்பினும் அந்த படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ” வாத்தி “. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ” வா…வாத்தி ” பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தின் விநியோக உரிமை சென்னையில் உள்ள சில மீடியேட்டர்களின் தவறான செயல்பாடுகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் – 2ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் செப்டம்பர் – 19ம் தேதி தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்தது. படத்தை வாங்க ஆர்வம் காட்டிய விநியோகஸ்தர்களிடமும் டிசம்பர் – 2ம் தேதி உறுதியாக படம் வெளிவரும் என சொல்லப்பட்டது.

இதனை நம்பிய “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் “ என்ற நிறுவனம் சிட்டி, என்.எஸ்.சி நீங்கலாக 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையை கேட்டது.

இதற்கான விலை ரூ.8 கோடி என பேசி முடிக்கப்பட்டு ரூ.3 கோடி முன்பணம் அக்டோபர் – 18ம் தேதி வழங்கப்பட்டது. அக்டோபர் – 24ம் தேதி தீபாவளி என்பதால், தீபாவளிக்கு பிறகு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என தயாரிப்பாளர் தரப்பு கூறியதை விநியோக நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

ஆனால் சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் தீபாவளி முடிந்து, இருவாரங்கள் கடந்தும் ஒப்பந்தத்தை தரவில்லை.

விநியோக நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக நவம்பர் – 6ம் தேதி ஒப்பந்தத்தின் மாதிரியை அனுப்பிய தயாரிப்பு நிறுவனம், படம் ஏப்ரல் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என அந்தர் பல்டி அடித்தது.

உடனடியாக மறுப்பு தெரிவித்த விநியோக நிறுவனம், கவர்ச்சிகரமான வட்டி அடிப்படையில் பணம் கடனாக பெறப்பட்டு முன்பணம் அனுப்பப்பட்டுள்ளதால் பல மாதங்கள் காத்திருக்க இயலாது என்றும், சொன்னபடி டிசம்பர் – 2ம் தேதி படத்தை வெளியிடவேண்டும் என்றும், இல்லையென்றால் முன் பணத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

படத்தை டிசம்பர் – 2ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் விரும்பாததால் முன்பணத்தை உடனே திருப்பித் தந்துவிடுவதாகவும், வட்டி எதுவும் தர முடியாது எனவும் தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

இதனை ஏற்று கொண்ட விநியோக நிறுவனம் உடனடியாக பணத்தை கொடுத்தால் வட்டி எதுவும் தேவையில்லை என தெரிவித்தது.

ஆனால் சொன்னபடி நவம்பர் – 6ம் தேதி பணத்தை தராமல் நவம்பர் – 23ம் தேதி ரூ.2 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களில் மீதி ரூ.1 கோடியை தருவதாக தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்தது. அதனையும் விநியோகம் ஏற்றுகொண்ட நிலையில் சொன்னபடி நவம்பர் – 26ம் தேதி ரூ.1 கோடி பணத்தை திரும்ப தரவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு உள்ளானது விநியோக நிறுவனம்.

இந்நிலையில் படம் பிப்ரவரி – 17ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதால், வட்டி இழப்பை ஈடுகட்டும் பொருட்டு பேசிய விலைக்கே படத்தை விநியோகம் செய்வதாகவும், ரூ.1 கோடி பணத்தை முன்பணமாக வைத்து கொள்ளுமாறும் மீதி தொகை ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தருவதாகவும் விநியோக நிறுவனம் தயாரிப்பாளர்க்கு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்திற்கு பதில் வராததாலும், ரூ.1 கோடி பணத்தையும் தராததாலும் விநியோக நிறுவனம் டிசம்பர் – 8ம் தேதி சென்னை உயர்நிதிமன்றத்தை அணுகி காப்புரிமை சட்டப்படி தங்களது முன்பணம் தயாரிப்பாளர் வசம் உள்ளதால் படத்தின் உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், பேசிய தொகையில் மீதமுள்ள ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் தரப்பை டிசம்பர் – 15ம் தேதி ஆஜராகுமாறு கூறியது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை டிசம்பர் – 21ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.

காப்புரிமை சட்டப்படி தற்போதைய நிலையில் ஐந்து ஏரியா விநியோக உரிமை “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” வசம் உள்ளதால் மீடியேட்டர்களின் பேச்சை கேட்டு விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாறவேண்டாம் என விநியோக நிறுவன தரப்பு ஆட்கள் எச்சரிக்கிறார்கள்.

Displaying IMG-20221220-WA0048.jpg.

இடைவேளை இல்லாத நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு இன்டர்வல் டைமிங் இதான்

இடைவேளை இல்லாத நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு இன்டர்வல் டைமிங் இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘கனெக்ட்’.

இதில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ளனர்.

இந்த படம் கரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. ‘கேம் ஓவர்’ பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

டிசம்பர் 22 ஆம் தேதி ‘கனெக்ட்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

99 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்திற்கு இடைவேளை இல்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படத்தின் இடைவேளையின் போது தான் தங்களுக்கு கேண்டீனில் வியாபாரம் நடைபெறும். அந்த வியாபாரத்தை விட்டுத்தர முடியாது என்பதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இடைவேளை இல்லாத இந்த படத்திற்கு அவர்களே (தியேட்டரில்) இடைவேளை விடுவார்கள் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி நமக்கு கிடைத்திருந்த தகவல்கள் இங்கே தந்துள்ளோம்…

Nayanthara’s #Connect

1st Half : 59 Mins
2nd Half : 40 Mins
Total Runtime : 99 Mins

In Cinemas From Dec 22nd

விஜய் பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் யூடியுப்பில் செய்த சாதனை.; ரசிகர்கள் குஷி

விஜய் பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் யூடியுப்பில் செய்த சாதனை.; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில் இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

முதல் பாடல் ‘ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அள்ளியது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார்.

இதன் பின்னர் சிம்பு பாடிய ‘தளபதி தீ தளபதி..’ என்ற பாடல் வெளியானது.

தற்போது சற்றுமுன் சின்ன குயில் சித்ரா பாடிய ‘அம்மா தாலாட்டு…’ பாடல் வெளியானது.

இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் இதுவரை யூடியூப்பில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2.5 கோடி (25 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது.

‘ரஞ்சிதமே…’ பாடல் 10 கோடி பார்வைகளை தாண்டியது குறித்து அதன் பாடலாசிரியர் விவேக் கூறியதாவது…

“ரஞ்சிதமே பாடல்… 100 மில்லியனை கடந்துள்ளது. விஜய் சார் என்னை நம்பியதற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

என்னால் கூற முடிந்ததெல்லாம் லவ் யூ விஜய் சார். இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.

என தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா-வின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’-ஐ வாங்கியது சக்தி ஃபிலிம் பேக்டரி

ஐஸ்வர்யா-வின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’-ஐ வாங்கியது சக்தி ஃபிலிம் பேக்டரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.

நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இது தமிழிலும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற அதே பெயரில் தயாராகி வருகிறது.

ஆர். கண்ணன் இயக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர.களில் நடிக்கின்றனர்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி சமயத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Here is the hard hitting trailer of my film, #TheGreatIndianKitchen ( Tamil )

https://t.co/rymYiXFA21

@Dir_kannan #DurgaramChoudhary #NeelChoudhary @RDCMediaPvtLtd @23_rahulr @balasubramaniem

JUST IN ஐசரி கணேஷ் – ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் இணைந்த 2 ஹீரோயின்ஸ்

JUST IN ஐசரி கணேஷ் – ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் இணைந்த 2 ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பாடகர் பாடலாசிரியர் இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்ட இளம் நாயகர்களில் ஒருவர் ஹிப் ஹாப் ஆதி தமிழா.

இவர் தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவண் இயக்கும் ‘வீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகும் #HHT7 ஏழாவது படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க வழக்கம்போல இந்த படத்திற்கும் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

ஆதி கனகவேல் கேரக்டரில் உடற்பயிற்சி ஆசியராக நடிக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

இப்படத்தை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், எடிட்டர் ஜி.கே.பிரசன்னா மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ.அமரன் ஆகியோர் உள்ளனர்.

இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகளின் தகவல்களை ஒவ்வொன்றாக பட குழுவினர் அறிவித்து வருகின்றனர். அனிகா சுரேந்தர் & இளைய திலகம் பிரபு இணைந்துள்ளனர்.

இவர்களுடன் நடிகர் தியாகராஜன் பாண்டியராஜன், இளவரசு, முனீஸ்காந்த் உள்ளிட்டு ஒரு முக்கிய இடங்களின் நடிப்பதாக பட குழுவினர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது நாயகியாக கஷ்மீரா பர்தேசி இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ. 5 லட்சம் பெற்ற கமல்ஹாசன்

வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ. 5 லட்சம் பெற்ற கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் கமலுக்கும் கேரளாவுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு.

கே பாலச்சந்தர் தனக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றால் நான் மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன் என்று ஒருமுறை கூறியிருந்தார் கமலஹாசன்.

கேரளாவிலும் கமல்ஹாசனுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் எம்ஜி. சோமன் பவுண்டேஷன் என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கியுள்ளது.

இத்துடன் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும் கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் வி என் வாசவன் நேற்று கேரளா திருவல்லா பகுதியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

Yesterday Ulaganayagan #KamalHaasan was honoured with the MG Soman Foundation LIFE TIME ACHIEVEMENT AWARD. The award, comprising a purse of Rs 5 lakh, was presented by cultural affairs minister VN Vasavan at Thiruvalla, Kerala

More Articles
Follows