செப்டம்பர் 30-க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் கெடு

vishalநடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

அதாவது 1 வருடத்தை கடந்துவிட்டது. ஆனால் சங்க தேர்தல் நடைபெறவில்லை.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள என்.சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

எனவே சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என விஷால் சார்பிலும் சங்க உறுப்பினரான ராதாகிருஷ்ணன் என்பவரின் தரப்பிலிருந்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரியின் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் இந்தாண்டு 2020 ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு, ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடித்து, அது குறித்த அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Overall Rating : Not available

Latest Post