கபாலி-யில் கலக்கிய பைட் மாஸ்டர்கள் அன்பறிவ் நீக்கம் செல்லாது என கோர்ட் ஆர்டர்

கபாலி-யில் கலக்கிய பைட் மாஸ்டர்கள் அன்பறிவ் நீக்கம் செல்லாது என கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Court Order in action brothers Anbarivu Association issueரஜினியின் கபாலி, காலா மற்றும் விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணி புரிந்தவர்கள் அன்புமணி மற்றும் அறிவுமணி.

இவர்கள் இரட்டை சகோதரர்கள் என்பதால் அன்பறிவ் என்றே அழைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து கடந்த 16-ந்தேதி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் சங்கத்தலைவர் சோம சுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் பணிபுரியும் படப்படிப்பு தளத்திற்கு சென்று படப்படிப்பையும் தடுத்து நிறுத்தினார்கள்.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் அன்பறிவ்.

எனவே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆதிகேசவலு, அன்பறிவ் மீதான நடவடிக்கையை கட்டுப்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அன்பறிவ் பணிபரியும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவர்களின் பணிக்கு குறுக்கீடு செய்ய கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Court Order in action brothers Anbarivu Association issue

சபரிமலையில் எல்லா பெண்களுக்கும் அனுமதி; கமல்-குஷ்பூ வரவேற்பு

சபரிமலையில் எல்லா பெண்களுக்கும் அனுமதி; கமல்-குஷ்பூ வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Khushboo welcome the SC verdict on Sabarimala temple caseகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கம் காலம் காலமாக ஐயப்பன் கோயில் நிர்வாகத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

எனவே கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி ஆணும், பெண்ணும் சமம். வழிபாட்டிலும் இது தொடர வேண்டும். சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம், அதைத் தடுப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார்.

அனைத்துப் பெண்களும் வழிபடலாம் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், ஆர்.எப் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

நீதிபதி இந்து மஹ்லோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை எழுதியுள்ளார்.

ஆனாலும் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது நல்ல தீர்ப்பு என நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan and Khushboo welcome the SC verdict on Sabarimala temple case

all age women in sabarimala

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் கேத்தரீன் தெரசா

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் கேத்தரீன் தெரசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu megha akash catherine tresa‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் சுந்தர் சி.

தெலுங்கில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர்.

தமிழில் சிம்பு நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

கடந்த வாரம் முதல் ஜார்ஜியா நாட்டில் இதை படமாக்கி வருகிறார்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

தற்போது மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்.

சமந்தா கேரக்டரில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கேரக்டரில் கேத்தரீன் தெரசாவும் நடிக்கின்றனர்.

சிம்புவின் மாமியராக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

கருணாநிதி வாழ்க்கை படத்தில் கலைஞராக பிரகாஷ்ராஜ் நடிப்பாரா?

கருணாநிதி வாழ்க்கை படத்தில் கலைஞராக பிரகாஷ்ராஜ் நடிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iruvar prakash rajதமிழகத்தை 5 முறை முதல்வராக ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மரணமடைந்தார்.

தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் முன் வந்துள்ளனர்.

ஏற்கெனவே நடிகர் பிரகாஷ்ராஜ் ‘கருணாநிதி வேடத்தில் நடிக்க ஆசை’ என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

எனவே அவரை ஒப்பந்தம் செய்ய சிலர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் கருணாநிதியாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். அதற்காக அவர் விருதும் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Prakash Raj accept to act in Kalaignar Karunanidhi biopic

ஒரு இயக்குனராகவும் நடிகை அதிதி ராவை கவர்ந்த தனுஷ்

ஒரு இயக்குனராகவும் நடிகை அதிதி ராவை கவர்ந்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Aditi Rao Hydari praises Dhanush direction styleவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வட சென்னை’ திரைப்படம் ஆயுதபூஜை வெளியீடாக அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாகிறது.

இவையில்லாமல் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் `மாரி-2′ படங்களும் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளன.

இதனிடையில் பிரம்மாண்ட சரித்திர படமான நான் ருத்ரன் என்ற படத்தை ஒன்றை தனுஷ் இயக்கி வருகிறார்.

இதில் தனுசுடன் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிப்பது குறித்து அதிதி ராவ் கூறியதாவது…

“ஒரு இயக்குனராகவும் என்னை கவர்ந்துவிட்டார் தனுஷ். அவர் ஷாட் வைப்பது வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது.” என்று பாராட்டியுள்ளார்.

Actress Aditi Rao Hydari praises Dhanush direction style

“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” ; விஜய் தேவரகொண்டா

“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” ; விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NOTA Vijayஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ் நாயகி சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா’, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “அரிமா நம்பியில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் விதமாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தார். இதிலும் அதேபோல ஒரு கேரக்டரை கொடுத்துள்ளார். மிலிட்டரி படத்திற்குப்பின் பல வருடங்கள் கழித்து சத்யராஜுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிடம் எனக்கு தெலுங்கு தெரியாதது போல கொஞ்சநாள் ஏமாற்றினேன். அதன்பின் அவருக்கு உண்மை தெரியவந்தபோது செல்லமாக என்னை திட்டினார். இந்தப்படத்திற்கு தமிழில் அவரே அற்புதமாக டப்பிங் பேசியிருக்கிறார்” என்றார்.

நடிகர் நாசர் பேசும்போது, “ரொம்பநாள் கழித்து ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். நடிப்பு என்கிற விஷயத்தை சுவைக்கின்ற படமாக இது இருக்கும். இருமுகன் படத்தில் என்னை ரொம்ப மெதுவாக வசனங்களை பேச சொன்னார்.. ஆனால் இந்தப்படத்திலும் அப்படி ஏதாவது சொல்வாரோ என பயந்தேன்.. ஆனால் நான் நினைத்து வைத்தது போலவே இந்தப்படத்தில் பேச சொல்லிவிட்டார். இது அரசியல் படம் என்பதால் இதில் நாங்கள் அவ்வப்போது ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும்போதும் வெளியில் அதேபோல நிகழ்வு நடந்திருக்கும் என்பதுதான் எங்களுக்கு ஆச்சர்யம் தந்தது” என்றார்.

இந்த நிகழ்வில் சன்சனா பேசும்போது, “குறும்படத்தில் நடித்துவிட்டு, அடுத்ததாக வெப் சீரிஸில் நடித்திருந்த என்னை எப்படியோ கண்டுபிடித்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். அதேபோல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் என்னை நம்பியதற்கு நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “ஆனந்த் சங்கரை பொறுத்தவரை பாடல்களை குறைத்து பின்னணி இசையில் கவனம் செலுத்துவார். எனக்கும் அதே அலைவரிசை என்பதால் எளிதாக செட்டாகி விட்டோம். இந்தப்படத்தின் பின்னணி இசையை கவனிப்பவர்கள், இவர் வித்தியாசமான முயற்சிகளை பண்ணுவார் என என்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதிர்கொண்ட, நம்மை பாதித்த விஷயங்களை இதில் ஆரம்பம் முதல் என்ட் கார்டு வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்” என்றார்.

சத்யராஜ் பேசும்போது, “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.. எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம்.. நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டும் பிரமித்து போனேன். ரொம்பநாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர்.

இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும்போது, “இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது.. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அப்போதுதான் தெலுங்கில் பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி என கலக்கலான வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் தேவரகொண்டா உருவாகிக்கொண்டு இருந்தார். தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். ஏன் இவரையே தமிழ் பேசவைக்க கூடாது என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொன்னேன்.. அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக்கொடி காட்டவே விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கதை சொன்னேன். முதலில் அரைமணி நேரம் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப்படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார். மொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்து எனக்கு வசதியாக இருந்தது. படத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது.

அதேபோல சத்யராஜ் சாரும் முதலில் தயங்கினார். ஆனால் கதை கேட்டதும் டபுள் ஒகே சொல்லிவிட்டார். கதாநாயகியாக நடித்துள்ள சன்சனாவை படம் வெளியானபின் யாரந்த பொண்ணு என நிச்சயம் கேட்பார்கள். அதேபோல அருவி படம் பார்த்துவிட்டு அதன் ட்ரெய்லரை பார்த்ததுமே எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா தான் இந்தப்படத்திற்கு எடிட்டர் என முடிவுசெய்துவிட்டேன்.. ட்ரெய்லருக்கு கூட நான் ஐடியா எதுவும் கொடுக்கவில்லை.. அவர் போக்கிலேயே விட்டுவிட்டேன்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இங்கிருந்தபடியே மாசிடோனியாவில் உள்ள 72 இசைக்கலைஞர்களை வைத்து வீடியோ ஸ்கிரீன் மூலமாக பின்னணி இசை அமைத்து அதிர வைத்துள்ளார். இரண்டு த்ரில்லர் படங்கள் இயக்கியிருந்தாலும் இதுபோன்ற ட்ராமா பாணி படம் இயக்குவது தான் எனக்கு பிடிக்கும்.. அதனாலேயே 48 நாட்களிலேயே இந்தப்படத்தை எளிதாக முடிக்க முடிந்தது.” என்றார்.

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத்திரும்ப மனப்பாடம் பண்ணிக்கொண்டு இருந்தேன்.. ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்… இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது. இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது.. அதேபோல நானும் இந்தப்படத்திற்காக மரண வெயிட்டிங்.. இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை.” என்றவர் ‘சொன்னது போலவே திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

இந்தப்படம் வரும் அக்-5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

More Articles
Follows