விதிகளை மீறி வீடு கட்டிய கமல்-ரம்யா கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை அடுத்த உத்தண்டி கடற்கரை பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டியது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற, CMDA-விற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், உத்தண்டி கடற்கரை பகுதியில் தங்களுக்குச் சொந்தமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கோரினால், சிஎம்டிஏ மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து அனுமதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், தங்கள் இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, மற்றவர்களுக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதுபோல், தங்களுக்கும் அனுமதி வழங்க, CMDA-விற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசராணைக்கு வந்தது. அப்போது, CMDA மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மனுதாரர் குறிப்பிடுகிற இடத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள், விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், இதில், நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் அடங்கும் என CMDA தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், விதிகள் மீறப்பட்டிருந்தால், அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு CMDA நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை CMDA மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, CMDAவும், சென்னை மாநகராட்சியும், அடுத்த மாதம் 9ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Unapproved construction on ECR Court Notices to Kamal and Ramya Krishnan

பேஸ்புக்-இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ கணக்கை ட்விட்டரில் தொடங்கினார்.

அதனை தொடர்ந்து அதில் தனது வாழ்த்துக்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்.

எனவே ட்விட்டரில் மட்டும் 45,74,324 பேர், ரஜினியை பின் தொடர்கின்றனர்.

தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், தனது அதிகாரப்பூர்வ கணக்கை இன்று ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் ‘வணக்கம்’ என்று தனது முதல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth officially joined in Facebook and Instagram

ரஜினிகாந்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடி இதோ..

Facebook – http://fb.com/rajinikanth
Instagram – http://instagram.com/rajinikanth

காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாயின் விலை இத்தனை கோடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் காலா.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை கபாலி புகழ் ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி யூடிப்பில் தற்போது வரை டிரண்டிங்கில் உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே அதில் ரஜினியுடன் அருகில் ஒரு நாய் இருந்ததை எல்லாரும் கவனித்திருப்பீர்கள்.

அந்த நாயின் பெயர் மணி. அதற்கு 2 ½ வயதாகிறது.

ரஜினியுடன் நடிக்க கிட்டதட்ட 18க்கும் மேற்பட்ட நாய்களை ஆடிசன் செய்துள்ளனர்.

அதில் இந்த நாயைதான் தேர்வு செய்திருக்கிறார் ரஞ்சித். அதன் பின்னர் அதற்கு பல வகைகளில் டிரெய்னிங் கொடுத்துள்ளதாக அதன் பயிற்சியாளர் சைமன் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நடித்த இந்த நாய் பற்றி கேள்விப்பட்டவுடன் ஏலத்தில் எடுக்க சில மலேசியா நபர்கள் முயற்சி செய்தார்களாம்.

ஆனால் நாயும் தன் குழந்தை போன்றது. எனவே விற்க முடியாது என கூறிவிட்டாராம் சைமன்.

அவர்கள் கேட்ட ஏலம் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 2 கோடிதான்.

வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி விடுமுறை கொண்டாட்டமாக காலா திரைக்கு வருகிறார்.

The price of dog which acted with Rajini in Kaala

ரஜினியின் பேச்சு உண்மையாக இருந்தது..: விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து பேசினார்.

ரஜினியை இது நாள் வரை மறைமுகமாக தாக்கியவர்கள் கூட, ரஜினியின் பேச்சால் தாங்கள் மிகவும் கவரப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினியுடன் சில படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக் இதுகுறித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்..

ரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது. மாணவர்களுக்கு அறிவுரை, MGRபுகழாரம்!

இவை உண்மையாக இருந்தது. இருப்பினும் அதிமுக திமுக எனும் இரு இமயங்கள் எதிரில்! பார்போம்.

மக்களே நீதிபதிகள்! காலம் கலாம் போல! நீதி வெல்லும்!..” என்று பதிவிட்டுள்ளார்.

Rajinis recent political speech is very true and transparent says Vivek

 

சாதிக்க துடிக்கும் சிறுவர்களுக்கு உதவும் விவேக்-தேவயானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள்.

சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள்.

வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.

இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின்.

ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நடிகையர்
‘சின்னக் கலைவாணர்’ விவேக், தேவயானி, ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம்

தொழில் நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன்
படத்தொகுப்பு : கார்த்திக் ராம்
இசை : கணேஷ் சந்திரசேகர்
பாடல்கள் : பா. விஜய், மோகன் ராஜ், தமிழணங்கு
சண்டைப்பயிற்சி : ‘மிராக்கிள்’ மைக்கேல் ராஜ்
கலை : S.ராம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் V.P.விஜி
தயாரிப்பு வையம் மீடியாஸ்

Vivek and Devayani helping Poor class boys for Ezhumin Movie

தமிழ் கற்றதால் தலை கணத்தோடு இருக்கிறோம்; தமிழிசை முன்னிலையில் சீறிய சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மாலை ‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ. உ.சி பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின்சங்கர், ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் உருவ சிலை திறக்க எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு ரஜினி சென்றிருந்தார்.

அந்த விழாவில் அவர் பேசும்போது உயர்நிலை பள்ளிவரை 98% மதிப்பெண் எடுத்த நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை திடீரென ஆங்கில வழி கல்வி பள்ளியில் சேர்ந்ததால் ஆங்கிலம் தெரியாமல் 17%, 18% மதிப்பெண் மட்டுமே பெற்றேன்.

எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளி முடிந்து கல்லூரி வரும்போது ஆங்கிலம் அவசியம் என்றார்.

அதே நேரம் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறைசூடன், “நான் தமிழை தவிர வேறு யாருக்கும் தலைவணங்கியதில்லை.

அதனால் தான் அதிகம் சம்பாதிக்கவில்லை பிற மொழிகள் தமிழர்களை வாழவைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும் தான் தமிழர்களை ஆளவைக்கும்” என்றார்.

அடுத்து பேசிய சினேகன், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைகணத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம்.

ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைகணம் கொள்வோம் என்றவர் இப்படி தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள் தான் விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்கிறார்கள்” என்றார்.

எம்ஜிஆர் கல்லூரியில் ரஜினி அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் அதே நேரத்தில் ‘எழுவாய் தமிழா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய தமிழிசை அவர்கள், “வீட்டில் குழந்தைகள் பெற்றோர்களை டாடி மம்மி என்று அழைக்கும் ஆங்கில கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் தனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால் தனக்கு தமிழிசை என்று பெயர் வைத்தார்கள்.

அப்போது என் பெயரை கேட்ட அனைவரும் திமுககாரர்களா நீங்கள் என்று கேட்டார்கள் என்றவர், தேசிய கட்சி என்பதாலேயே பாஜக தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல.

தமிழை நேசிப்பதால் தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே ஒழிய வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன்.

எங்கள் பாஜகவின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைதான் ஆதரிப்போம். வேறு மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர மாட்டோம் என்றார். மேலும் நானும் ஒரு தமிழ் பெண், மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள்” என்றார்.

விழாவில் பேசிய ஒரிசா பாலு, “இந்தியாவை தவித்து 48 நாட்டின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.

எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில் தான் உள்ளது நாம்தான் மறந்து விட்டோம் என்றார்” ஆதங்கமாக.

தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக ‘முகவை பிலிம்ஸ்’ அங்கயற்கண்ணன் அவர்களை அனைவரும் பாராட்டினர்.

“தமிழுக்காக செலவு செய்வது என் பொற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு” என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குனர் காளிங்கன்.

Ezhuvai Thamizha Music Album Launch news updates

 

More Articles
Follows